புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

நீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்

26 நவம்பர், 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டின் முதல் நாளான 26ஆம் தேதி நவம்பர் 2011 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நீதியை பெறுவதும் மக்களின் உரிமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவங்கியது. இந்த கருத்தரங்கத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா அவர்கள் தலைமை தாங்கினார்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமது கருத்தரங்கத்தின் கருப்பொருளைப் பற்றி உரையாற்றினார். அவரது உரையில் நாம் முதலில் வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டு விடுதலை பெற்ற பின்னர் ஆட்சியாளர்களிடம் தற்போது அடிமைப்பட்டு கிடக்கின்றோம். ஒரு சில ஆயிரங்களுக்காக  விதார்பா போன்ற பகுதிகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் கைகோர்த்து ஆதிவாசிகளின் இருப்பிடங்களை விட்டு விரட்டி அடித்துள்ளார்கள். முதலாளித்துவம் போன்ற மக்கள் விரோத கொள்கைகள் ஒரு புறம், மறுபுறத்தில்  வகுப்புவாத கலவரங்களும் நடந்து நாட்டில் இரத்த ஆறு ஒட்டப்பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் பெரும் பகுதிகளில் ராணுவம் அல்லது சிறப்பு பாதுகாப்பு படைகளே ஆட்சி செய்கிறது. இந்த அவல நிலை நீங்க போராட வேண்டும் என்று கூறினார்.

அவரை தொடர்ந்து தேஜஸ் பத்திரிக்கையின் செயலாசிரியர் என்.பி.சேக்குட்டி ஊடகம் பற்றி உரை நிகழ்த்தினார். முன்பொரு காலங்களில் ஊடகங்கள் செயல்பட பொருளாதாரத்திற்கு பெரும் அவதியுற்றதில்லை. ஆனால் உலகமயமாக்கலுக்கு பின்பு பெரும் முதலீடு பெறும் நிறுவனமாக மாறியுள்ளதையும், அரசு மற்றும் பெரும் நிறுவனங்களின் பொருளாதாரத்தை நம்பியிருப்பதால அவைகளால மக்கள் விரோத போக்கை இந்த நிறுவனங்கள் அல்லது அரசு கையாளும் பட்சத்தில் கண்டுகொள்வதில்லை என்று கூறினார். எனவே பொருளாதாரத்தை அடிப்படையாக இல்லாமல் மக்கள் நலனுக்காக போராடும் ஒரு ஊடகம் நிறுவனத்தை உறுவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவன் அவர்கள் சமூக நீதியை பற்றி பேசினார். சட்ட மேதை திரு.பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்பட தேவையான சமத்துவம், அனைத்து சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம், சமூக நீதி போன்ற விஷயங்களை பற்றி குறிப்பிட்டார். சமூக நீதி பெற இட ஒதுக்கீட்டி அவசியத்தை பற்றி குறிப்பிட்டு இதற்காக முஸ்லிம்களும் தலீத்களும் இணைந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவரை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐயின் செயலாளர் அப்துல் ரஷீது அஹ்வான் அவர்கள் பிரதிநிதித்து அரசியல் பற்றி உரையாற்றினார். தற்போது நடப்பில் இருக்கும் அரசியல் முறைப்படி சிறு கட்சிகள் அதிகாரத்திற்கு வருவது என்பது இயலாத காரியம் எனவும் ஒரு கட்சி பெறும் மொத்த ஓட்டுக்களின் அடிப்படையில் பதவி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் ஆல் இந்தியா செக்கூலர் ஃபாரம்-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கைர்னார் உரையாற்றும் போது குண்டுவெடிப்புகளும் பலிகடாக்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். கேரளாவை சேர்ந்த வரலாற்றாசிரியர் பேராசிரியர் எம்.எஸ். ஜெயப்பிரகாஷ் அவர்கள் ஷோசியலிசமும் சமூக நீதியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். 1909யில் மாண்டெக் பரிந்துரைகள் 1928, யில் சைம கமிஷன், 1930யில் இட ஒதுக்கீடு  பற்றிய டாக்டர் அம்பேத்கரின் பரிந்துரை, 1953யில் காகனேக்கர் கமிஷனின் பரிந்துரைகள், 1979 மண்டல் கமிஷன், அதனை தொடர்ந்து போன்று இட ஒதுக்கீட்டை வி.பி.சிங்கின் அனைத்து முயற்சிகளும் ஆதிக்க சக்திகளால தோற்கடிக்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட்டார்.

அஹமதாபாத் வணிக யுனியனைச் சேர்ந்த ஹாசிம் ராய் அவர்கள் மோதல் கொலைகளை பற்றி உரை நிகழ்த்தினார். எந்த ஒரு மனிதனும் எத்தகைய குற்றம் செய்திருப்பினும் நீதிமன்றம் வழியாக தான் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கூறினார். ஆனால் இன்று காவல்துறை தாங்களே ஒருவரை இவ்வுலகில் வாழ தகுதியில்லை என்ற அடிப்படையில் கொலை செய்வது ஜனநாயக விரோத செயலாகும் என்று குறிப்பிட்டார்.

அவரை தொடர்ந்து ஆல் இந்தியா பாபரி மஸ்ஜித் ஆக்ஸன் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜாபர்பாய் ஜீலானி அவர்களும் பின்னர் அனைத்து  இந்திய தலீத் ஆதிவாசிகளின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் உதித் ராஜ் அவர்களும் சமூக நீதியினை வலியுறுத்தி பேசினார். இடையிடையே தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

இறுதியாக மேற்கு வங்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் சையது ஷஹாபுதீன் அவர்கள் நன்றியுரை கூற மாலை 5:15 மணியளவில் கருத்தரங்கம் நிறைவுற்றது.




0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010