சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும்
கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்ற வருகிறது. இக்காலகட்டத்தில்
சுமார் 1 லட்சம் மாண மாணவியர்களுக்கு கல்வி உதவி உபகரணங்கள் வழங்கும்
திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த பிரச்சாரம் தமிழகத்திலும் நடைபெற்று
வருகிறது. அந்த வகையில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கி
இருக்கின்ற பகுதிகளை கண்டறிந்து அவர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வு
பிரச்சாரத்தையும் அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான உபகரணங்கள்
வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் தொகுதி சார்பாக பழைய வண்ணாரப்பேட்டை
(லாலாகுண்டா) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 8 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக சுமார் நூறு மாண மாணவிகளுக்கு "ஸ்கூல் கிட்" வழங்கப்பட்டது. மேலும் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி, பொருளாதார வசதியற்ற நிலையில் இருக்கும் மாணவர்கள் என 15ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 20,000ற்கும் மேல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி, சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம், சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜுனைத் அன்ஸாரி, மற்றும் சகோதரர் ஷானவாஸ், ஹயாத் பாஷா, முத்து அகமது மற்றும் அப்பகுதி ஜமாத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக