புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்

30 ஜூலை, 2012

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்பைச்சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிற இயக்க தலைவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்து அதன் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய செயல்களை ஒன்றினைந்து செயல்படுத்துவதற்காக ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் நேற்றைய தினம் அண்ணா சாலையிலுள்ள வெல்லிங்டன் பிளாசாவில் வைத்து நடைபெற்றது.

இ ந் நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி தொகுத்து வழங்கினார். பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அறிமுக உரை நிகழ்த்தி விவாதத்திற்கான தலைப்பினை முன்வைத்தார்.


இந்திய முஸ்லிம்களின் அடையாளத்தன்மை (IDENTITY) பறிக்கப்பட்டு வருவதாகவும், முஸ்லிம்கள் என்றே ஒரே காரணத்திற்காக  கல்வி, அரசு வேலைவாய்ப்பு, வாடகைக்கு வீடு கிடைக்காத அவல நிலைகள் ஏற்பட்டு வருவதாக அவர் கூறினார். முஸ்லிம்களின் அடையாளத்தை எவ்வாறு கட்டிக்காக்க வேண்டுமென்றும், முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றுவரும் இவ்வகையான தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் விவாதம் நடைபெற்றது.  அதன் பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதரர் என்.முஹம்ம்து அவர்கள் எழுதிய "இடஒதுக்கீடும் முஸ்லிம்களும்" என்ற நூல் வெளியிடப்பட்டது. இதனை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா வெளியிட சமுதாய தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இறுதியில் ஜின்னா சாஹிப் அவர்களி உரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூதாய தலைவர்கள் பின்வருமாறு:

1. சகோ. முனீர் (இந்திய தவ்ஹீத் ஜமாத்)
2. முஹம்மது ஹனீஃபா (இஸ்லாமிய தொண்டு இயக்கம்)
3. பேராசியர். எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் (இஸ்லாமிய இலக்கிய கழகம்)
4. சகோ. ஆளூர் ஷானவாஸ்
5. சகோ. ஹாமித் பக்ர் மன்பஈ (இஸ்லாமிய ஐக்கிய பேரவை)
6. சகோ. மேலை நாசர் (சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை)
7. சகோ. தர்வேஷ் ரஷாதி (தலைமை இமாம், வடபழனி)
8. சகோ. காயல் மஹபூப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
9. சகோ. உமர் ஃபாரூக் (மறுமலர்ச்சி தேசிய லீக்)
10. சகோ. நிஜாமுதீன் (முன்னால் சட்டமன்ற உறுப்பினர்)
11. சகோ. யூசுஃப் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
12. தெஹ்லான் பாகவி (எஸ்.டி.பி.ஐ)

8 விமர்சனங்கள்:

பெயரில்லா சொன்னது…

islamiya thalaivarkal enbathai iyakka thalaivarkal enru matruvathu siranthathu

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

"இஸ்லாமிய தலைவர்கள்" என்று எங்கே எழுதப்பட்டுள்ளது....? நன்றாக படிக்கவும் சகோதரரே! "இஸ்லாமிய இயக்க தலைவர்கள்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

PURE DATES சொன்னது…

இஸ்லாமிய இயக்கத்தலைவர் என்றால் எந்த குர்ஆன் எந்த ஹதீஸில் உள்ளது என்று தெளிவுபடுத்தவும்.
--பறக்கும் அஞ்சல்

yaqube சொன்னது…

QURAN HADIS KONDU MAKKALAI ONRINAIKA MUDIYAVITTALUM PIRIKKATHEER KURAN HADIS THELIVU KETKEREERE NENGAL KURAAN HADIS ANAITHAYUM KATRU THEERTHU VITTEERA NITCHAYAM KURAI KUDAM THAN KUTTHADUM SEKKURATHUKKU UNGALUKKU HADISE ILLAYA

Abu Faheem சொன்னது…

என்னதான் நல்லது செய்தாலும் சிலர் அதிலும் குழப்பத்தை ஏற்படுத்த முனைவது வாடிக்கையே எனவே குழப்ப வாதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதே சிறந்தது,
சமுதாயத்தை ஒன்றுபடுதவே முடியாது என்று முழங்கிவரும் காலத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா பல தலைவர்களையும் அவ்வப்போது ஒன்றிணைத்து வருவது பாராட்டத்தக்கது, இந்தியா முழுவதும் பலமாநிலங்களிலும் பல மொழிகள் பல பழக்கவழக்கங்களை கொண்டுள்ள மக்களை ஒன்றிணைக்கும் பாப்புலர் பிரன்ட் க்கு வாழ்த்துக்கள், இதற்க்காக உழைத்திடும் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்கிடுவானாக ஆமீன்.

Abu Faheem சொன்னது…

சுன்னத்துவல்ஜமாத் ஐக்கியப்பேரவை எனும் பெயரில் பல கயமைதனங்களை செய்துவரும் மேலை நாசர் போன்ற போலிகளை தவிர்க்கவேண்டும். காரணம் இவர் மற்றும் இவர்சார்ந்த குரூப் இஸ்லாத்திற்கு முரணான காரியங்களையும் அப்பாவி மக்களையும் தங்களது வலையில் வீழ்த்தி சமுதாயத்தை சீரளிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். சமீபத்தில் வாழ்க்கை(திருவாரூர்) எனும் ஊரில் சுன்னதுவல் ஜமாஅத் மற்றும் டி ஏன் டி ஜெ க்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையில் தலையிட்ட இவர்கள் அங்கு கூடியிருந்த பல ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் பேசும்போது பாபுலர் பிரன்ட், எஸ் டி பி ஐ, தமுமுக, டி ஏன் டி ஜெ போன்ற எந்த இயக்கங்களையும் எந்த ஊரிலும் அனுமதிக்க கூடாது என்றும் ஜமாஅத் சம்பந்தப்பட்ட அணைத்து விசயங்களுக்கும் மேலை நாசர் குரூப்ஐ யே அனுகவேண்டுமேனவும் மேலும் அணைத்து இயக்கங்களையும் மோசமாக விமர்சித்து பேசியுள்ளதாக அந்த கூட்டத்தில் பங்கெடுத்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

Unknown சொன்னது…

விமர்சனமல்ல விளக்கமே!
சகோதரர் அபூ பஹீம் அவர்களே! முதல் தகவலில் ஒன்றிணைத்த இன் நிகழ்விற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு இரண்டாம் தகவலில் பிரிவினைக்கு தூபம் போடுவது உங்கள் அறியாமை.
நீங்கள் விமர்சித்த அந்த நபர் உண்மை உரைத்தார் என்றால் அதை சார்ந்தோர் சரி செய்து கொள்ளலாம். அவருடைய விமர்சனம் பொய் என்றால் இவ்வமைப்பின் உண்மை நிலையை அவர் இதுபோன்ற நிகழ்வில் கலந்து கொள்வதால் தெளிவடையலாம் தானே.
ஒரு கெடுதியை நலவை கொண்டுதான் தடுக்கவேண்டும் இது அருள் மறை குர்ஆனின் கூற்று.
தயவு செய்து புரிந்து புத்திமதி கூறுங்கள்.

Abu Faheem சொன்னது…

சகோ காப்பு கமால் அவர்களே நான் பிரிவினைக்கு தூபம் போடுவதாக நீங்கள் அறியாமையில் கூறியுள்ளீர்கள்! மேலை நாசர் இன் இரட்டை முகத்தை தெரியப்படுத்தியுள்ளேன் இவரைபோன்றவர்களிடம் இயக்கங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றுதான் கூறியுள்ளேன் அதனை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக்கொல்வார்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு மேலை நாசர் பிரியமானவராக இருந்தால் வேண்டப்பட்டவராக இருந்தால் அவருக்கும் இதனை புரிய வையுங்கள், நான் மிகவும் விளங்கிதான் இந்த கருத்தை பதியவைதிருக்கிறேன் சகோதரா.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010