அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள்.
அரசு தரப்பு டி.ஜி.பி ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.
அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:
- நான்கு மாவட்டங்களில் மொத்தம் 235 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இதில் 99 முகாம்கள் பெளத்தர்களுக்காகவும், 135 முகாம்கள் முஸ்லிம்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு நலதிட்ட பணிகளை நடைமுறைப்படுத்தி வரும் ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய ரிஹாப் இந்தியாவிற்கு உதவுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்கள்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக உடனடியாக சில வசதிகளை செய்துகொடுக்க வேண்டியுள்ளது.
1. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக முறையான குடிநீர் மற்றும் உணவு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
2. மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.
3. உடுத்த உடை மற்றும் குளிரில் இருந்து பாதுகாப்பு பெற போர்வைகள் வழங்க வேண்டும்.
4. இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ரிஹாப் இந்தியா சார்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவைகள் உங்களின் பார்வைக்காக
ரிஹாப் இந்தியா மேற்கொண்ட பணிகள்:
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பரோடா மற்றும் அஹமதாபாத் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டபோது அம்மக்களுக்கு உதவி செய்ய ரிஹாப் இந்தியா தன்னுடைய தொண்டு ஊழியர்களை அனுப்பியுள்ளது.
2006 ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது ரூபாய் 30 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
பீஹார் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் களத்தில் இறங்கி உதவி புரிந்தார்கள்.
அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 1000 வீடுகள் கட்ட தீர்மானித்து தற்போது 54 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
ஏழை எளிய மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சுயதொழில் மூலம் முன்னேற்றம் அடைவதற்காக மூன்று சக்கர மிதி வண்டி, தையல் இயந்திரம் வழங்குதல், மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முழு கிராமத்தையும் தத்தெடுத்து பல்வேறு நலதிட்ட உதவிகளை ரிஹாப் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
மேலும் விபரங்கள் அறிய: http://rehabindiafoundation.org/portal/
தற்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தாராளமாக உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் செக்/ டி.டி அனுப்ப வேண்டிய முகவரி
REHAB INDIA FOUNDATION
N-44, Ground Floor, Second Stage,
Jamia Nagar, New Delhi - 110025.
(அல்லது)
RTGS/NEFT transactions
Bank Details:
Name : REHAB INDIA FOUNDATION
Account no : 09231450000033
Bank Name : HDFC Bank Ltd
Branch Name : Jasola Vihar
IFSC Code : HDFC0000923 (used for RTGS and NEFT transactions)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக