புதுடெல்லி: கடந்த சில
நாட்களுக்கு முன்பு அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தில்
ஆயிரக்கணக்கான முஸ்ளிம்கள் பாதிக்கப்பட்டனர். போடோ இனத்தீவிரவாதிகளால்
நடத்தப்பட்ட இக்கலவரத்தில் 100ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை
செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊரை விட்டு
விரட்டியடிக்கப்பட்டனர்.
சிராங் மற்றும் பொங்காகோன் ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் கலவரத்தால்
கடுமையாக பாதிக்கப்பட்டனர். போடா தீவிரவாதிகளின் இத்தகைய தாக்குதலை
கண்டித்து அஸ்ஸாம் மாநிலத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக
மாபெரும் அமைதிப்பேரணி நடைபெற்றது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு
பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு
விரட்டியடிக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வரக்கூடாது என்றும் அப்படி
திரும்பி வந்தால் விபரீதமான நிகழ்வுகள் நடைபெறும் என போடோ இனத்தவர்களின்
தலைவர்கள் பகிரங்கமாகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். எப்பொழுதும்
போலவே ஒவ்வொரு கலவரத்திற்கு பின்பு பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்
சமூகத்திற்கு ஆறுதல் சொல்லும் போக்கையே மத்திய மற்றும் மாநில அரசுகள்
கையாண்டு வருகிறது.
அஸ்ஸாமில் பல்வேறு நலதிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் ரிஹாப் இந்தியா தொண்டு அமைப்பு தற்போது நிவாரணப்பணியிலும் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் கலவரம் பாதிக்கப்பட்ட மாவட்டமான சிராங்கில் குழந்தைகளுக்கான உணவுகளை வழங்கியுள்ளது.
அஸ்ஸாமில் பல்வேறு நலதிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் ரிஹாப் இந்தியா தொண்டு அமைப்பு தற்போது நிவாரணப்பணியிலும் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் கலவரம் பாதிக்கப்பட்ட மாவட்டமான சிராங்கில் குழந்தைகளுக்கான உணவுகளை வழங்கியுள்ளது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக