புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சுதந்திரதின பேரணி - பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

4 ஆகஸ்ட், 2012


மதுரை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வரும் சுதந்திர தின பேரணியை அனுமதிக்க பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி வெங்கட்ராமன் மதுரை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பு 2004 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. தொடக்கம் முதலே முஸ்லிம்கள் நடத்தும் இந்த சுதந்திர தின கொண்டாடத்தை தடுத்து நிறுத்தும் முகமாகவே காவல்துறையினர் செயல்பட்டு வந்தனர்.

2008 ஆம் ஆண்டு முதன் முறையாக மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்து அதற்காக உரிய முறையில் அனுமதிக்காக காவல்துறை அதிகாரிகளை முறையிட்டபோது தகுந்த காரணமின்றி இக்கொண்டாடத்தை நடத்த காவல்துறையினர் தடுத்தனர். அதுமட்டுமல்லாது ஆரம்பம் முதலே சங்கப்பரிவார் ஃபாசிஸ்டுகள்  இந்நிகழ்ச்சிகு அனுமதி வழங்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் பாப்புலர் ஃப்ரண்டின் தொடர் முயற்சியால் இதே சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அதில் வென்று தமிழகத்தில் முதன்முறையாக சுதந்திர தின அணிவகுப்பை நடத்தியது.

2009 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடத்துவதற்காக அனுமதி கோரிய போது எவ்வித காரணமுமின்றி அணிவகுப்பிற்கு தடைவிதித்தனர். இம்முறை எப்பேற்பட்ட நிலை ஏற்பட்டாலும் நீதிமன்றம் செல்லக்கூடாது என முடிவெடுத்து சுதந்திர தின கொண்டாடத்தை நடத்தியே தீர்வோம் என்று உறுதியாக இருந்த பின்னர் காவல்துறையினர் அனுமதி வழங்கினார். அதிலும் நான் நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்த மைதானத்தின் உரிமையாளரை மிரட்டியதோடுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடத்துவதற்கு மைதானத்தை வழங்கினால் பொய் வழக்கு போட்டு அழைகழிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். இறைவன் அருளால் கும்பகோணத்திலும் சுதந்திர தின கொண்டாட்டம் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.

2010 ஆம் ஆண்டு கோவை மண்டலம் மேட்டுப்பாளையத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. வழக்கம் போல் காவல்துறையினர் அனுமதி மறுத்து பின்னர் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். ஆனால் தேவையற்ற பதடத்தை ஏற்படுத்தும் வகையில் எண்ணற்ற காவல்துறையினரை மேட்டுப்பாளையத்தில் குவித்து மக்களின் இயல்பு வாழ்க்கைய பாதித்தனர்.

2011 ஆண்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கோரி மூன்று மாதங்களுக்கு முன்பே காவல்துறை அதிகாரிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்பொழுதெல்லாம் எவ்வித தடையும் தெரிவிக்காமல் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை கூட அனுகவிடாமல் நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதாக அறிவித்தனர். காவல்துறையின் இந்த நயவஞ்சகத்தனத்தை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

இம்முறை ஆரம்ப முதலே சுதந்திர தின அணிவகுப்பிற்காக அனுமதியை காவல்துறையினர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் இதனை மதுரை காவல்துறை ஆணையர் பரிசீலனை செய்து முடிவை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அனுமதி கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி: முத்து

1 விமர்சனங்கள்:

POPULARFRONTNELLAI சொன்னது…

2011 nellai maavttam melapalayam not mettupalayam

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010