பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்டம் ஆர்.கே நகர் தொகுதியின் சார்பாக செரியன் நகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி அவர்கள் துவக்கிவைத்தார். ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் இரத்த வகை கண்டறிதல், கண் சிகிச்சைக்கான ஆலோசனைகள், பல் சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது. அகர்வால் மருத்துவமனை மற்றும் சிந்தாமணீ பல் மருத்துவமனையோடு இணைந்து நடைபெற்ற இம்மருத்துவ முகாமின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
Você está em: Home » சமூக சேவைகள் » பாப்ப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மருத்துவ முகாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக