
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமிஅசிமானந்தாவிடம் சிறந்த முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து மனம் திருந்திய மைந்தனாக தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண் டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜடீன் சட்டர்ஜி என்ற நபா குமார் சர்கார் என்ற பெயரையுடைய அசிமான ந்தா என்ற காவி பயங்கரவாத சிந்தனை கொண்ட சாமியார், குஜராத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வாழும் மோடாஸாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் காவி பயங்கர வாதிகளுடன் இணைந்து செயல்பட்டு ள்ளார்.
இத்தகைய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரும் மூளையாக இருந்து செயல்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
சுனில் ஜோஷி மற்றும் ராம்ஜி எனப்படும் ராமசந்திர கல்சங்க்ரா உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்தது இந்தி ரேஷ்தான் என்று அசிமானந்தா கூறியுள்ளார்.
இந்திய கிரிமினல் சட்டம் 164ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி யிடம் அளித்த வாக்கு மூலத்தில், குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட இந்துத்துவா பயங்கர வாதக் குழுக்களை அசிமானந்தா அடையாளம் காட்டியுள்ளார்.
மாஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பது தனக்கு தெரியும் என்றாலும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தவறாக கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
சிறையில் சுவாமி அசிமானந் தாவிடம் கலீம் நன்முறையில் நடந்து கொண்டதுதான் அசிமானந்தா தன் தவறை ஒப்புக் கொள்ள வைத்ததாகக் கூறப் படுகிறது.
காவி பயங்கரவாதம் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பதையும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகித்ததைவிட அதிக அளவு நெட்வொர்க் கொண்டதாக காவி பயங்க ரவாதம் உள்ளதையும் அசிமா னந்தாவின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை வெவ்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை செய்து வரும் நிலையில், அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் அவற்றின் விசாரணைக்கு உதவக்கூடும்.
2006ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையும் சிபிஐயும் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டியிருந்தன. அசிமானந்தாவின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொபைல் போன் விற்பனையாளரான கலீம், ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத் திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். தற்போது வேறு ஒரு வழக்கில் கலீம் கைது செய்யப்பட்டு சுவாமி அசிமானந்தா அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நான் கலீமுடன் கலந்துரையாடியபோது, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் சிறையில் இருக்கும் போது, கலீம் எனக்கு அதிகமாக உதவிகள் செய்தார். எனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். எனக்காக உணவும் கொண்டு வந்து தந்தார். கலீமின் நன்னடத்தை என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. ஏராளமான அப்பாவிகள் சிக்கிய இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று என்னை என் ஆழ்மனம் தூண்டியது என்று சுவாமி அசீமானந்தா தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இனிமேலாவது காவி பயங்கரவாதிகள் செய்த தேசத்துரோக செயல்களை, குண்டு வெடிப்புகளை மக்கள் முன் அம்பலப் படுத்தி கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அனைத்து குண்டு வெடிப்பு வழக்கு களையும் மறு ஆய்வு செய்யவேண்டும். அசீமானந்தாவின் ஆசிரமத்திற்கு வருகை தந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் இன் முன்னாள் தலைவர் சுதர்சன் உள்ளிட்ட பெரும் தலைகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக