புதுடெல்லி: என்ன வாசகர்களே கட்டுரையின் தலைப்பே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? அதற்கு அவசியம் இல்லை! காரணம் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க்(RSS) மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளான, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் முஸ்லிம்களை தங்களோடு இணைத்துக்கொள்ளவும், தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை விளக்கவும் தங்களது கயமதனத்தை தொடங்கியுள்ளார்கள். எப்பொழுதுமே முஸ்லிம்கள் மீது துவேஷம் கொண்டுள்ள இவர்கள் தற்போது முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (MRM) என்ற அணியை துவக்கியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்ன் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரின் வலது கையாக செயல்பட்டு வரும் கிரிஸ் ஜூயல் என்பவன் இத்தகைய புதிய திட்டத்தை அமல் படுத்தியுள்ளான்.
ஆர்.எஸ்.எஸ்ன் முஸ்லிம் விரோத கொள்கையான ஹிந்துத்துவா மற்றும் ஹிந்துராஷ்டிரா போன்ற கிரிமினல் அஜன்டாக்களை மறைத்து விட்டு முஸ்லிம்களுக்கு காவிகள் எதிரானவர்கள் அல்ல என்று நம்பவைக்க முயல்கின்றனர். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவர்கள் நடத்திய இனப்படுகொலைகள் தான் எத்தனை?
அதனுடைய சுவடுகள் எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் மறையாதே! அப்படிப்பட்ட இவர்கள் முஸ்லிம்களை நாங்கள் எதிரிகளாக பாவிக்கவில்லை என்று கூப்பாடு போட துவங்கிவிட்டார்கள். இதுவரை நடந்த இனப்படுகொலைகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மாறாக பத்திரிக்கைகள் தான் இவ்வாறு அவதூறு பிரச்சாரத்தை செய்துள்ளார்கள் என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் கூறத்தொடங்கிவிட்டனர்.
முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்படவேண்டும், ஆர்.எஸ்.எஸ் கோ, வி.ஹெச்.பி கோ, அல்லது பஜ்ரங்தள்கோ அஞ்சவேண்டியதில்லை என்ற பாசாங்கு வார்த்தை கூட இவர்களது வாய்களில் இருந்து வரத்தொடங்கிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ்ற்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிவிட்டதால் அதனை சரிசெய்யவே இந்த முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் தொடங்கப்பட்டுள்ளதாம்.
இவர்களை பற்றி அறியாத முஸ்லிம்கள் யாராவது இவர்களுடைய இந்த மயக்கும் பேச்சைக்கேட்க துவங்கினால் இவர்களா நம்மை கொலைசெய்வார்கள்? என்று எண்ணம் தோன்றும் அளவிற்கு தற்போது பேசதுவங்கியுள்ளனர், எப்படி என்றால் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உதாரணமாக எடுத்துக்கூறி அவரைப்போன்று அன்பு உள்ளவர்கள் தாங்கள் என்று கூறுகின்றனர்.
முஸ்லிம்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ற்கும் உள்ள வேற்றுமையை கலைந்து இருவரையும் ஒன்றினைக்கவேண்டுமாம்! அப்படி என்றால் இனி முஸ்லிம்களை கொலை செயவதற்கு முஸ்லிம்களையே பயன்படுத்த வேண்டும் என்று திட்டம் போட துவங்கிவிட்டனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் முஸ்லிம்களுக்காகவே தொடங்கப்பட்டது என்றும் அதை முஸ்லிம்களே முன்னின்று நடத்திச் செல்வார்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்த அமைப்பிற்கு முஹம்மது அஃப்சல் என்ற ஒருவரை தேசிய ஒருங்கினைப்பாளராக தேர்வு செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ் எப்படி முஸ்லிம்களுடன் நல்லுறைவை மேற்கொள்ளும்? என்று அவரிடம் கேட்டதற்கு, வெகுகாலமாக முஸ்லிம் சமுதாயம் ஆர்.எஸ்.எஸ ஐ தவறாக புரிந்துவைத்துள்ளது, இத்தைகைய நிலையை போக்குவதற்காகத்தான் இது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
ஃபைசுர் ரஹ்மான் என்ற இஸ்லாமிய அறிஞர் கூறும் போது , ஹிந்துதுவா கொள்கையும், ஹிந்து ராஷ்டிரா என்ற கொள்கையும் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே! இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் இத்தகைய கொள்கையை ஆதரிக்கவேண்டும் இல்லையேல் அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படவேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ன் கொள்கையாக உள்ளது. அப்படி இருக்க இவர்கள் முஸ்லிம்களுடன் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவது வேடிக்கையான விஷயம் என்று கூறினார்.
அப்படி உண்மையிலேயே இவர்கள் முஸ்லிம்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ் இஸ்லாம் மார்க்கத்தை மதிக்கிறது, இங்கே முஸ்லிம்கள் அவர்களது மத விஷயங்களை பின்பற்றுவதிலிருந்து ஆர்.எஸ்.எஸ் தடுக்காது என்று மேடை போட்டு பொதுவாக அறிவிக்கவேண்டும். என்று ஃபைசுர் ரஹ்மான் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய கொள்கையயை எல்லா இந்துக்களிடமும் கொண்டு செல்ல முடியாது அப்படி இருக்க முஸ்லிம்களுடன் நல்லுறவு ஏற்படவேண்டும் என்று எண்ணவது வேடிக்கையான விஷயம். அதோடுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களின் பிரதிநிதியாகவும் இருக்கமுடியாது.
எம்.ஆர்.எம் இன்று வட இந்தியாவில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, அதிலே சமீபத்தில் "சலாமே மாதரே வதன்" (இந்திய தாய் நாட்டிற்கு சலாம்) என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்திய முஸ்லிம்கள் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாம். அப்படியென்றால் இங்கே வாழக்கூடிய முஸ்லிம்கள் தேசத்தின் மீது பற்று இல்லாமல் இருக்கின்றார்கள் என்பது இவர்களது கூற்று. ஆக இதனால் வரை ஆர்.எஸ்.எஸ் செய்த பிரச்சாரத்திற்கும் இவர்கள் செய்யும் பிரச்சாரத்திற்கும் என்ன வித்யாசம் வந்துவிட்டது?
சமீபத்தில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் முஸ்லிம்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்கள் ஆனால் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து காவி கூட்டத்திற்கும் அதிலே தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ் ல் தீவிரமாக செயல்பட்டுவரும் அதனுடைய உறுப்பினர்கள் இத்தகைய உறவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மேலும் இத்தகைய செயலகள் வெறும் நாடகமே என்பது அதிகமானோரின் கருத்தாக உள்ளது.
இத்தகைய ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை எதிர்க்கவேண்டும் என்று மற்றொருசாரார் கூறுகின்றனர்.
ஆக மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்கு எதிராக நின்று அவர்களை கொல்லும் கலையை கைவிட்டுவிட்டு அவர்களுடனே இருந்து அவர்களை கருவருக்க தொடங்கிவிட்டது என்பது தெளிவாகிறது. இதை படிக்கும் நமக்கு ஒரு பழமொழி நியாபகம் வருகிறது.
"அது ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம்!"
செய்தி: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக