கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் தனது அறிக்கையில்,
கடந்த 1983லிருந்து தமிழ் நாட்டு மீனவர்கள் கடத்தபடுவதும் சுட்டுக்கொல்லப்படுவதும் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் 15.02.2011 அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழகத்தின் நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 106 மீனவர்களும் சிங்கள் மீனவர்களால் கடத்திச் செல்லப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் 16.02.2011 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 200 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். மீனவர்களுடைய படகுகள் தீப்ப்டித்த காரணத்தால் தப்பி சென்ற மற்ற மீனவர்களை தவிர 24 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் படுகாயமடைந்த மீனவர்கள் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதியில் புகுந்து விட்டாலோ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைதாண்டி வங்கதேசம், மியான்மர் கடற்பகுதியில் புகுந்து விட்டாலோ அவர்களை அந்தந்த நாட்டு அரசுகளில் கடற்படைகள் சுட்டுக் கொல்வதில்லை.
ஆனால் தமிழக கடல் பகுதியில் மட்டும் 1983 லிருந்து இன்று வரை 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படியினரின் இத்தகைய மனிதாபமற்ற மூர்க்கத்தனமான செயல்பாடுகள் மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியது. இவ்வாறு தமிழ மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட போதும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் படுகொலைகளை தடுத்து நிறுத்து விதமாகவும் இந்திய அரசு உறுதிமிக்க எந்த முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. ஒரு சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் கண்டன அறிக்கை வெளியிடுவதனை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
எனவே இத்தகைய ஒரு அவல நிலை மீண்டும் தொடராமல் இருப்பதற்கும், சிறைபடுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதற்கும், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் அனைவருக்கும் தக்க நிவாரணம் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மாநில தலைவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக