புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கோத்ரா ரயில் எரிப்பின் தீர்ப்பு!

22 பிப்ரவரி, 2011

புதுடெல்லி: கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து எற்பட்டு 50க்கும் மேற்பட்ட கரசேவர்கள் உடல் கருகி இறந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த‌ குஜராத் சிறப்பு நீதிமன்றம் இன்று (22.02.2011) தீர்ப்பு வழங்க இருக்கிறது. இந்த வழக்கில் 99 நபர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் நன்கு திட்டமிடப்பட்டு குஜராத் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யபட்டார்கள்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள 99 நபர்களி மீது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்6 பெட்டியில் கொழுத்தி அதில் பயணம் செய்த 59 கரசேவர்களை கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதன் விசாரனை கடந்த செப்டம்பர் மாதம் 2010 அன்று சபர்மதி சிறைச்சாலையில் வைத்து முடிவடைந்தது. இதன் தீர்ப்பை இன்று (22.02.2011) வெளியிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணைபிறப்பித்திருந்தது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த வழக்கை விசாரித்த இரு கமிஷன்களின் முடிவும் வெவ்வேறாகவே உள்ளது. ஒரு கமிஷன் இதை விபத்து என்றும், மற்றொன்று இது நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட யூ.சி பானர்ஜி கமிஷன் தனது இறுதி அறிக்கையில் இந்த சம்பவம் ஒரு விபத்து தான் என்றும், வெளியிலிருந்து கொழுத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், விபத்தின் போது ரயில் பெட்டியின் உள்ளிருந்து தான் ஏற்பட்டுள்ளது என்று இதனை விசாரித்த நீதிபதி கூறுகிறார்.
ஆனால் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனின் அறிக்கையோ, இது ஒரு விபத்து அல்ல மாறாக பெட்ரோல் வெளியிலிருந்து ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. (ஆனால் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியை கவனித்தால் நன்கு புரியும், பாருங்கள்! வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டது என்றால், எப்படி சிந்தாமல் ஜன்னல் வழியாக உள்ளே மட்டும் ஊற்ற முடியும்? வெளியில் எந்த சேதமும் இல்லையே!)
எது எப்படியோ இதை காரணமாக வைத்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் இரத்தம் தெருவெங்கும் ஓடியதும், பல இளம்பெண்களின் கற்புக்கள் சூரையாடப்பட்டதும் தான் மிச்சம்.


செய்தி: முத்து

2 விமர்சனங்கள்:

Mohamed சொன்னது…

ஏன் முடியாது பாபரி மஸ்ஜித் ன் உள்ளே சிலைகளை வைத்து விட்டு பூமிக்கு உள்ளே இருந்து ராமர் வந்தார் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்ட (நாங்கள் அறிவுஜீவிகள் என்று நினைத்து கொண்டிருக்கும் ) இந்த அறிவீளிகளுக்கு இந்த விசயத்தையும் மாற்ற தெரியும்..........

Puthiya desam சொன்னது…

சார் வாங்க எப்படி எதிர்பார்கிறீங்க நியாயத்தை இதற்குப்பின் ஒரு தீர்ப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது ஒரிஸ்ஸா பாதிரியார் கொலைவழக்கில். அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இனி தீர்ப்பு மன்றங்கள் காவிமன்றங்களின் பிடியில் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010