புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அநியாயக்காரனுக்கு பதிவி உயர்வா?

3 மார்ச், 2011

கோவை வெடிகுண்டு நாடகத்தின் சூத்திரதாரியான உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதிக்கு வழங்கப்பட்ட தொடர் பதவி உயர்வுகளையும், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவியையும் உடனடியாக ரத்து செய்யக் கோரியும், எஸ்.ஐ.டி.யின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று 02.03.2011 பாப்புலர் ஃப்ரண்டின்  மாநில செயலாளர் அன்சாரி அவர்கள் தமிழக உள்துறை செயலாளரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து, ரத்தின சபாபதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அம்மனுவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தையும் கோவை மாநகரையும் பீதி வயப்படுத்தும் நோக்கில் கடந்த 2006 ஜூலை 22 அன்று "கோவையைத் தகர்க்க சதி வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது" எனப் பழி சுமத்தி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து மக்களை பீதிவயப்படுத்தினார். தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் முன்னோடி அமைப்பான மனித நீதிப் பாசறையின் மீதும் இந்த வெடிகுண்டுப் பழியை சுமத்தினார்.

பாப்புலர் ஃப்ரண்டின் (மனித நீதிப் பாசறை) வீரியமிக்க போராட்டத்தினாலும், மனித உரிமை இயக்கங்கள், முஸ்லிம் ஜமாத்துகள், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் தந்த அழுத்தங்களாலும் 10 நாட்களில் (01.08.2006) தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

சுமார் ஒரு வருட காலம் இவ்வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) கடந்த 2007 அக்டோபர் 15 அன்று தனது இறுதி அறிக்கையை கோவை நீதித்துறை நடுவர் எண் 7ல் தாக்கல் செய்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் முஸ்லிம் இளைஞர்கள் மீது ஏ.சி. ரத்தின சாபாபதியால் போடப்பட்டிருந்த வெடிகுண்டு பொய் வழக்கை 20.12.2007 அன்று (RCS No. 183/07) தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. மேற்படி இறுதி அறிக்கையில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாலன் அவர்கள், "இரத்தினச் சுருக்கமாக சொல்வதானால், மேற்படி ஆ13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006ல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 (ஆ) உ/இ வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு 5ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டு அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் (Seizure Mahazars) ஜோடிக்கப்பட்டவை மற்றும் பொய்யானவை (Fabricated and False) என்று என்னுடைய விசாரணையில் தெளிவாகத் தெரிய வருகின்றது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் மேற்கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன.

(Conclusively Confirms) எனவே, இது பொய்வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கின்றேன்! (I am treating this case as False.)" என்று மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

இந்த வெடிகுண்டு நாடகத்தின் சூத்திரதாரி ஏ.சி ரத்தின சபாபதி தான் என்பதை தனது விசாரணை அறிக்கையில் பல இடங்களில் அவர் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்.

பொய் வழக்கு புனைந்து சதி செய்தவர் என சிறப்பு புலனாய்வு குழுவால் குற்றம் சுமத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிறுபான்மை விரோதப்போக்குடன் செயல்பட்டு வரும் ஏ.சி. ரத்தின சபாபதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 4 வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு போராட்டங்களின் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஏ.சி ரத்தின சபாபதி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி., அதன் பிறகு எஸ்.பி., என பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு வழங்கி வருவது, தற்போது புதிதாக டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதும் சிறிதும் ஏற்புடையதல்ல. மேலும் இது போன்ற பொறுப்பு மிகுந்த உயர் ஆணையங்களில் ரத்தின சபாபதி போன்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மிகுந்த வாய்ப்பாக அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

மேலும் இந்த பதவி உயர்வுகளூம், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதும் தமிழ் நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணானவை. எனவே தமிழக அரசு உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு ஏ.சி ரத்தின சபாபதிக்கு வழங்கப்பட்ட இரண்டு பதவி உயர்வுகளையும் ரத்து செய்யவேண்டுமென்றும், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், எஸ்.ஐ.டி அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேடுக் கொள்கிறது." இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப், கோவை மாவட்ட தலைவர் ராஜா ஹுஸைன், சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், மாவட்ட செயலாளர் ஷாஹித், ஆகியோர் உடனிருந்தனர்.

முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்:

மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

"இதே கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் அமைப்பின் சார்பாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களில் வருகின்ற 04.03.2011 வெள்ளிக்கிழமை அன்று மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டி நாங்கள் வைக்கும் இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் இப்போராட்டத்தை மிகவும் வீரியமாக எடுத்துச்செல்வோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010