"விப்ராண்ட் குஜராத்". அதாவது, அதிரவைக்கும் குஜராத். இது, கடந்த பல மாதங்களாக "நர வேட்டை நாயகன்" நரேந்திர மோடி செய்து வரும் பிரச்சாரம். வளர்ச்சி என்ற பெயரில் மோடி செய்து வரும் இந்த மோசடிப் பிரச்சாரத்தால் அதிர்வது குஜராத் அல்ல! அங்குள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தான் என்ற உண்மைகள் வெளிவரத்துவங்கிவிட்டன.
"இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடந்த மாநிலம் குஜராத்! இவ்வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிதான்!" என தேசிய பத்திரிக்கைகள் முதல் உள்ளூர் பத்திரிக்கைகள் வைர புகழாரம் சூட்டி வருகின்றன. நீதிபதி கிருஷ்ணய்யர் போன்ற நடுநிலையாளர்கள்
பண முதலைகளுடன் மோடி |
சமூக வளர்ச்சித்திட்டங்களில் குஜராத் இன்றைக்கும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும் குஜராத்தின் மோடி அரசு தோல்வியையே சந்தித்துவருகிறது. நகரத்தை மையமாகக்கொண்ட வளர்ச்சிதிட்டங்கள் கிராமங்களில் வாழும் மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும், ஆதிவாசிகளையும் கவனத்தில் கொள்வதில்லை. சமூகவியல் கோட்பாட்டிற்கு முரணான நகரமேம்பாட்டு திட்டங்கள் சமூக சமநிலைப்பாட்டை சீர்குலைக்கிறது. கடந்த மே 1ஆம் தேதி டெல்லியில் நடந்த திட்டக்கமிஷனின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்களின் கூட்டத்தில் குஜராத்தின் சமூக வளர்ச்சித்துறையில் ஏற்பட்டுள்ள சோர்வு பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது. குழந்தைகள் மரணம், பிரசவத்தின்போது தாயின் மரணம், ஊட்டச்சத்துக்குறைவு, படுமோசமான ஆரம்பக்கல்வித்துறை உள்ளிட்டவைகளில் குஜராத் தோல்வியடைந்துள்ளதாக அக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
திட்டக்கமிஷனின் அறிக்கை கூறுவது என்னவெனில், வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் சதவீதம் குஜராத்தில் 31.8 ஆகும். இது ஜம்மு கஷ்மீர், தமிழ் நாடு, கேரளா, ஹரியானா,பஞ்சாப், ஹிமாச்சல், ஆந்திரா ஆகிய மா நிலங்களை விட அதிகமாகும். குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்துக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்கள் குஜராத்தில்தான் அதிகம். திட்டக்கமிஷனின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காண்பிப்பது என்னவெனில், ஊட்டச்சத்த்துக்குறைவின் காரணமாக மாநிலத்தில் 56 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.
கர்ப்பிணிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் மகளிர் நல மருத்துவர்களை உட்படுத்தி துவக்கப்பட்ட "சிரஞ்சீவி ப்ராஜக்ட்" எவ்வித முன்னேற்றமுமடையாமல் முடங்கி போய் விட்டது. கிராமப்பகுதிகளில் ஆரம்ப் சுகாதாரநிலையங்களின் குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளில் குறைபாடு ஆகியனவும் விவாததிற்கிடையானது. குஜராத்தில் பள்ளிக்கூடங்களிலிருந்து படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும்.
குஜராத் மாநிலத்தின் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதியிடம் திட்டக்கமிஷனின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர், " நீங்கள் குஜராத்தில் என்ன செய்கின்றீர்கள்?" என கேள்வி எழுப்பினார். இச்செய்தியினை சில பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தது. நேஷனல் க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோவின் (NCRB) சமீபத்திய சில புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுவது குஜராத்தின் இதர சமூகப்பிரச்சனைகளைக் குறித்ததாகும். பருவமடையாத இளம் வயது குற்றவாளிகளின் எண்ணிக்கையில் குஜராத இந்தியாவில் முன்னிலையில் உள்ளது. கடுமையான குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் வயது சராசரி 16 முதல் 18 லிருந்து 14 முதல் 16 ஆக குறைந்துள்ளது.
பூரண மதுவிலக்கு அமுலிலிருந்தும் மாநிலமான குஜராத்தில் எளிதாக கிடைக்கிறது கள்ளச்சாராயம். இதனை விற்பதற்கு சிறுவர்களை ஈடுபடுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது. என்.சி.ஆர்.பி. அறிக்கையில் இடம்பெற்றுள்ள குஜராத்தின் இன்னொரு முக்கிய பிரச்சனை பால்யவிவாகம். இந்தியாவிலேயே அதிகமாக பால்ய விவாகங்கள் என்றழைக்கப்படும் சிறுவர் திருமணங்கள் அதிகம் நடைபெறுவது மோடியின் குஜராத் மாநிலத்தில் தான். கடந்த காலங்களைவிட பால்ய விவாகங்களின் எண்ணிக்கை குஜராத்தில் அதிகரித்து வருகிறது.
வடக்கு குஜராட்தில் பனட்கந்தா, ஸபர்கந்தா, தாஹட் ஆகிய பகுதிகளில் திருமணமாகும் இளம்பெண்களின் சராசரி வயது 12 ஆகும். இத்தகைய ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளில் அரசு சார்பாக எவ்வித தலையீடும் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன 2008ம் ஆண்டில் மட்டும் இப்பகுதிகளில் நடந்த பால்ய விவாகங்களின் எண்ணிக்கை 23 ஆகும். அஹ்மதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பெண்கள் அமைப்பான "விமன்ஸ் ஆக் ஷன் குரூப்" கூறுவது என்னவெனில், ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் ஒரு புகார் வழக்காக பதிவுச் செய்யப்படுகிறது என்றால். பதிவுச் செய்யப்படாத 100 புகார்கள் உள்ளனவாம். வள்ர்சியின் பெயரால் மண்ணின் மைந்தர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிப்பது இதர மாநிலங்களைப்போல் குஜராத்திலும் தீவிரமாக நடந்துவருகிறது. ஆனால், குஜராத்தின் நிலைமை பயங்கரமாகும் அளவை சர்வேக்களோ, அதிகார்ப்பூர்வமான பட்டாக்களோ, இதர ஆவணங்களோ விதியோகிக்கப்படாத குஜராத்தின் கிராம பிரதேசங்களில் விவசாய நிலங்களை அபகரிப்பது மோடி அரசைப்பொறுத்துவரை சர்வ சாதாரணமானதாகும். இக்காரணதினாலதான் பெரும் தரகு முதலாளிகள் கேட்கும் போதெல்லாம் உடனடியாக கொடுக்கும் பாரிவள்ளலாக மோடி திகழ்கிறார். இவ்வாறு சொந்த வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு வேறு நிலமோ அல்லது புனர்வாழ்வு திட்டங்களோ அரசு சார்பாக அளிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல அரசு நிலத்தை ஆக்கிரமித்தார்கள் என இவர்கள் மீது கடுமையான குற்றம் சுமத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்னர் இவர்களுக்கு வாக்குரிமையோ ரேசன் கார்டோ வழங்கப்படுவதில்லை. இவ்வறு வசிப்பிடங்களிலிருந்து அகற்றப்படுபவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு நுழைந்தவர் கள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.
வளர்ச்சித்திட்டங்களின் பெயரால் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களையும் வணக்க வழிப்பாட்டுத்தலங்களையும் இடிப்பது மோடி அரசின் வாடிக்கையான நிகழ்வாகும். சில பகுதிகளில் ஒரு பிரிவைச் சார்ந்த மக்களை மட்டும் அவர்கள் வசிக்கும் நிலத்தை கைப்பற்றிவிட்டு அவர்களை நகர்புறங்களுக்கு விரட்டுகிறார்கள்.
போலிமோதல் கொலைகள் குஜராத் காவல்துறையின் ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஷொஹ்ராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், துளசி பிரஜாபதி ஆகியோரின் போலிஎன்கவுண்டர் கொலகள் இதற்கு சில உதாரணங்கள் மட்டுமே. இந்த போலிமோதல் கொலைகளுக்கு குஜராத் உள்துறை அமைச்சர அமீத்ஷா நேரடியாக தலைமையேற்றுள்ளார் என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. குஜராத் மா நிலத்தில் பத்திரிக்கை சதந்திரத்திற்கு மோடி அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல்வாட் கேரளாவுக்கு வருகை தந்த வேளையில் கூறியிருந்தார்.
குஜராத்தில் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கோ அரசு நிறுவனங்களுக்கோ, மருத்துவமனைக்கோ சென்று செய்தி சேகரிப்பதற்கு பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை. குஜராத் அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளிலிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டட்தின் படி விவரங்கள் கிடைப்பதில்லை.
குஜராத் அரசின் பல துறைகளிலும் நடைபெறும் செயல்பாடுகள் மர்மமாகவே உள்ளன. மதவாத சிந்தனையுடைய குஜராத் அரசின் அதிகார வர்க்கட்திடமிருந்து சாதாரண மக்களுக்கு உபயோகமான எவ்வித உதவியும் கிடைப்பதில்லை. இத்தகைய மக்களின் உரிமையை மறுப்பது குறித்து கேள்வி எழுப்பினால் அவர்களை உள்ளே தள்ள சபர்பன் சிறை போன்ற பிரசித்திபெற்ற சித்திரவதை முகாம்கள் மோடி அரசினால தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தண்ணீர் தட்டுபாடு. கோடைக்கால வறட்சியில் குடிநீருக்காக கிராமத்தும் பெண்கள் பல கிலோமீட்டர்கள் தொலைவிற்கு நடந்து செல்வது குஜராத் கிராமப்பிரதேசங்களில் நிரந்தர காட்சியாகும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் பிப்ரவரி மாதத்திற்கு முன்பே விவசாயிகள் அறுவடை செய்து விடுகின்றனர்.
பின்னர் வரும் நான்கைந்து மாதங்கள் விவசாயிகளுக்கு துயரமாக மாறுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நர்மதா நதியின் மீது மத்திய அரசின் உதவியுடன் துவக்கப்பட்ட அணைக்கட்டுத்திட்டம் பல ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை. குஜராத் மாநிலம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த கனவுத்திட்டம் இதுவரை நிறைவேறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. அணைக்கட்டு மற்றும் அணைக்கட்டுடன் கிராமங்களை இணைக்கும் கால்வாய்களின் பணி பூர்த்தியானால் விவசாயிகளுக்கு மிகப்பெரும் ஆசுவாசமாக இருக்கும். குஜராத் மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி "சுவர்ணம் குஜராத்" என்ற பெயரில் அரசு கருவூலத்திலிருந்து கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்கும் மோடி சாதாரண மக்களின் பிரச்சனையை கண்டும் காணாதது போல் நடித்து வருகிறார்.
வளர்ச்சி என்றால் கோடிக்கணக்கான முதலீடுகளும், நாற்கரச் சாலைகளும் (FOUR WAY ROADS) மேல்தட்டு மக்களின் ஆடம்பரவாழ்க்கையும் தான் என்ற ஊனமான வளர்ச்சிக்கனவுகளில் திளைப்பவர்கள்தாம் மோடிக்காக கை தட்டுகின்றனர். அம்பானிகளும் டாட்டாக்களும் மோடிக்கு புகழாரம் சூட்டுவதன் ரகசியம் இதுதான். ஒரு ஆட்சியாளர் என்ற நிலையில் சாதாரண மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத மோடியின் அரசு இந்தியாவின் இதர மாநிலங்களைவிட வெகுதூரம் பின் தங்கியே உள்ளது.
இது தான் பா.ஜ.க ஆட்சி! இவர் தான் அந்த நரேந்திர மோடி 2002 குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு மோடியை நரமாமிச வேட்டைக்காரணாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் ஒரு இந்துத்துவவாதியாகவும் மட்டுமே ஊடங்கள் கூறிவருகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல! வளர்ச்சி என்ற பெயரால் இந்த தேசத்தின் உயிர்த்துடிப்புகளான சாமான்ய மக்களை நசுக்கி அவர்தம் வாழ்வினை மண்மூடிப் போகச்ச் செய்யும் முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடி தான் இந்த மோடி; ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் எதிரி தான் இந்த மோடி; விவசாயிகளின் விரோதி தான் இந்த மோடி; அடித்தட்டு மக்களின் வாழ்வை கட்டங்களைச் செய்யும் காலன் தான் இந்த மோடி என்பதை மேற்கூறிய ஆய்வுகள் மிகத்துள்ளியமாக படம்பிடித்துக்காட்டுகின்றன. இனியேனும் இந்த மக்கள் விரோத மோடியை சாமான்யர்களும், கற்றறிந்த மேதைகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
நன்றி : விடியல் வெள்ளி
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக