புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!
காவி தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவி தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்கோட்டில் நடந்த வன்முறை நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அன்று மஹாராஷ்டிரா மாநிலம் அக்கோட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட பலரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்லூரி பேராசிரியரின் தலைமையில் மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய விஷ்வவித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்மையை கண்டறியும் பொருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று தங்களது அறிக்கையை சமர்பித்துள்ளனர்.

இச்சம்பவம் முழுக்க முழுக்க நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்றும் இதில் 22ற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் தீக்கறையாக்கப்பட்டுள்ளது. 25ற்கும் மேற்பட்ட இந்து முஸ்லிம்களின் கடைகளும் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட அனைவரும் மிகவும் ஏழை குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



கடந்த நவம்பர் 2, 3 மற்றும் 22,23 ஆகிய தேதிகளில் உண்மை கண்டறியும் குழு அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தது.  உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த ஷராத் ஜெய்ஸ்வால் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, "பதற்ற சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் இந்து முஸ்லிம் சமூகத்தினரிடையே குரோதம் அதிகரித்துள்ளது. வகுப்பு வாத சக்திகள் இரு சமூகத்தினரிடையே பிளவை உருவாக்கி அச்சத்தை ஏற்படுத்தும் விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளனர்" என தெரிவித்தார்.


நவ நிர்மதி அமைப்பின் உறுப்பினர் அமீர் அலி அஜானி கூறும்போது "வகுப்புவாத சக்திகள் விதர்பா பகுதிகளில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்ட பல்வேறு விதமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவத்தை பார்க்கும் போது அவர்கள் தங்களது காரியங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்பதனையே காட்டுகிறது. இச்சம்பவத்தை பத்திரிகைகளும் முழுமையாக மறைத்து வருகிறது." என அவர் குற்றஞ்சாட்டினார்.
இச்சம்பவத்தின் பின்னனி:
கடந்த அக்டோபர் 19ம் தேதி அன்று 7வயது மதிக்கத்தக்க முஸ்லிம் சிறுவன் எதேர்ச்சையாக துப்பியுள்ளான். இது அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜாவின் பந்தலில் பட்டுவிட அப்பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த தோபி மற்றும் போய் இனத்தைச்சேர்ந்தவர்கள் அச்சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்களுக்கும் பஜ்ரங்தள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.


சிலர் இதில் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்றனர். அவ்வாறு சமாதான முயற்ச்சியில் ஏஜாஸ் என்பவரும் ஈடுபட்டார். இது நடைபெற மணி நேரத்தில் ஏஜாஸின் கடைக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவனின் பெயர் முகவரியை அவரிடம் கேட்டிருக்கின்றனர். அவர் தனக்கு அச்சிறுவனைப்பற்றி தெரியாது என்றும் அவனை மன்னித்து விடுமாறு கூறிய பின்பும் வழுக்கட்டாயமாக ஏஜாஸை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அக்கோட் பகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கின்ற சிவசேனாவின் சஞ்சேய் காவன்டே தன்னுடைய ஆதரவாளர்கள் 200 பேர் மற்றும் பஜ்ரங்தள், வி.ஹெச்.பி அமைப்பினர் காவல்நிலையம் வந்து கோஷங்களை எழுப்பினர். இவர்கள் கொடுத்த நெருக்கடியின் பேரில் காவல்துறை அதிகாரிகள் ஏஜாஸையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ஷொஹைப் என்பவரையும் காவல்துறை அதிகாரிகள் அழைத்து விசாரித்துள்ளனர். அச்சிறுவனின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார். அச்சிறுவனின் வயதை வைத்து இது வேண்டுமென்றே நடந்திருக்காது என காவல்துறையினர் கூறிவிட்டனர்.


இவ்வாறு இருந்த போதிலும் சிவசேனாவின் எம்.எல்.ஏ இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்றும் இதற்கு பின்னால் சிலர் இருந்து செயல்பட்டுள்ளார்கள் என்று ஆதாரமற்ற கருத்துக்களை பரப்பியுள்ளார். இவர்கள் கொடுத்த நெருக்கடியில் ஏஜாஸ் மற்றும் ஷொஹைப் ஆகிய இருவரையும் 107 பிரிவின் படி கைது செய்து அன்றிரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற போது அதில் தலையிட்டு சமாதானம் செய்த ஒரே காரணத்திற்காகவே அவ்விருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இச்சம்பவம் நடைபெற்று முடிந்த பிறகு சிலைகளை கரைக்க வரும் போது அவர்கள் மீது கல்லெறிந்து தாக்க முஸ்லிம்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்ற வதந்தி பரவியுள்ளது.



அக்டோபர் 23ம் தேதி அன்று சம்பவம் நடைபெற்ற அதே இடத்தில் சிலைகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள்ச கூடினார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவன் தன் மீது கல்லெறியப்பட்டதாக கூறியுள்ளான்.

உண்மை கண்டறியும் குழுவினர் மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் உண்மையில் அது போன்ற கல்லெறிந்த சம்பவம் நடைபெற்றதா? என விசாரித்தனர். ஆனால் அது வெறும் வதந்தி தான் என்பதை காவல்துறையினர் பதில் கூறியுள்ளனர். 



அன்றைய தினம் வகுப்புவாதிகள் இரவு 8 மணியளவில் பரதே பிளாட் அருகே 22ற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்து இரு அப்பாவிகளை கொலை செய்தனர்.

சரியாக நடக்கக்கூட முடியாத 80 வயது மதிக்கத்தக்க முதியவரான ஹாஜி முஹம்மது யாசின் என்பவரை கொலை செய்தததோடு அவரது மனைவி ஜுலைஹா பீவியையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தற்போது சுய நினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய 16 வயது ஜஃபரூதீன் என்ற சிறுவனையும் கொலை செய்துள்ளார்கள்.



வன்முறையாளர்கள் தீப்பந்தம், இரும்பு கம்பி, வாள் மற்றும் மண்ணெண்ணையுடன் திருந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது. வன்முறைய தடுக்க நினைத்த சில காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளார்கள்.




இச்சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதத்தில் நடைபெற்ற மறு தாக்குதலில் அக்டோபர் 24ம் தேதி அன்று 82 வயது மதிக்கத்தக்க மனோகர் ராவ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உண்மை கண்டறியும் குழு கூறும்போது இப்பகுதியில் வகுப்புவாத அமைப்புகள் நன்கு ஊடுறுவியுள்ளதாகவும், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இந்துக்கள் அனைவரும் ஒன்றினையாவிட்டால் முஸ்லிம்களின் கைகள் தான் ஓங்கி இருக்கும் என விஷமத்தனமான பிரச்சாரங்களையும் அவ்வகுப்புவாதிகள் மேற்கொண்டிருக்கின்றனர். 


இருதரப்பிலும் 50 நபர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Ler Mais

பாபரி மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட கதிதான் சார்மினாருக்கும் - குறைக்கும் தொகாடியா

சென்னை: முஸ்லிம்கள் சார்மினார் விஷயத்தில் பிடிவாதம் பிடித்தால் பாபரி மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட அதே கதிதான் சார்மினாருக்கும் ஏற்படும் என வி.ஹெச்.பி.யின் தலைவன் பிரவீன் தொகாடியா பகிரங்கமாக அறிவித்துள்ளான்.

பாரம்பரியமிக்க நகரமான ஐதராபாத்தில் உள்ள சார்மினார் உலக புகழ்பெற்ற இடமாகும். இவ்விடத்தை இந்திய அரசாங்கம் தேசிய சின்னமாக அறிவித்திருக்கிறது. முஸ்லிம்களின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் சார்மினார் மஸ்ஜிதிற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
சமகால வரலாற்றிலேயே பொய் கதைகளை பரப்பி முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளை ஃபாசிஸ சங்கப்பரிவாரங்கள் இடிக்க தயங்க மாட்டார்கள் என்றிருக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக நடைபெற்றது என்று கட்டுக்கதைகளை பரப்பாமல் இருப்பார்களா? என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.


சமீபத்தில் ஆங்கில நாளிதழான "தி ஹிந்து" பத்திரிக்கையில் சார்மினாரின் இரு படங்களை வெளியிட்டிருந்தது. அன்று வெளியிட்ட புகைப்படத்தில் அதன் அருகே எந்த ஒரு கோயிலும் கட்டப்படவில்லை. அதே சமயம் சில ஆண்டுகளுக்கு முன்னால் சிறிதாக அதன் அருகே சிலை வைக்கத்தொடங்கி இன்று பாக்கியலட்சுமி கோயிலாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக அக்கோயிலை அகலப்படுத்தும் வேலையை ஃபாசிஸ சங்கப்பரிவரிவாரங்கள் தொடர்ந்து செய்துள்ளனர். தற்போது இப்பிரச்சனை பூதகரணமாக வெடித்துள்ள நிலையில் வி.ஹெச்.பியின் தலைவன் பகிரங்கமாக செய்தி வெளியிட்டுள்ளான். அதில் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தால் பாபரி மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட அதேன் நிலை தான் சார்மினாருக்கும் ஏற்படும் என்று மிரட்டியுள்ளான். தகுந்த ஆதாரங்கள் இருக்கும் இச்சமகால வரலாற்றிலேயே முஸ்லிம்களின் புனித ஸ்தலத்தை இடித்துவிடுவோம் என மிரட்டும் இந்த பயங்கரவாதியை கைது செய்யவோ அல்லது அவனுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவோ எவருக்கும் தைரியம் இல்லை என்பதை பார்க்கும் போது இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாவிட்டாலும் சங்கப்பரிவாரத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.

சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று பிதற்றிக்கொள்ளும் அரசாங்கங்கள் சார்மினாரை பாதுகாக்க என்னதான் செய்யப்போகிறதோ....?
Ler Mais

முஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் டி.ஜி.பி

குஜராத்: கடந்த 2002ஆம் வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தில் முன்னால் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 நபர்கள் கொடூரமான முறையில் சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர்.


தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கடந்த 10 வருடங்களாக போராடி வருகிறார். இவர் அளித்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. விசாரணையின் இறுதி அறிக்கையை அஹமதாபாத் பெருநகர நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் படி விசாரணை மேற்கொண்டு தனது இறுதி அறிக்கையை சமர்பித்தது அக்குழு. அதில் நடைபெற்ற வன்முறைக்கும் நரேந்திர மோடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இவ்வழக்கை இத்தோடு தள்ளுபடி செய்ய பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை கொல்லும் இந்துக்களை தடுக்கக்கூடாது என்றும், இந்துக்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என நரேந்திர மோடி கூறியதாக இதற்கு முன்பு பல காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற அன்று இரவு காந்தி நகரிலுள்ள தனது வீட்டில் அப்போதைய டி.ஜி.பி. சக்கரவர்த்தி உட்பட பல மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினார் என‌ நரேந்திர மோடி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வி.ஹெ.பினர் ஆவார்கள். உத்திர பிரதேசம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படவேண்டும் என வி.ஹெச்.பி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு குஜராத் திரும்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோத்ரா இரயில் நிலையம் அருகே வந்த போது தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தீவிபத்து ஏற்பட்ட சில மணி நேரத்திலேயே வி.ஹெச்.பியினர் அடுத்த நாள் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அன்று இரவே நரேந்திர மோடியும் சட்ட ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என காவல்துறையினரை அழைத்து இரகசிய கூட்டத்தை நடத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சி.பி.ஐ அதிகாரி ராகவண் தலைமையிலான விசாரணைக்குழு நரேந்திர மோடி நடத்திய அந்த இரகசிய கூட்டத்தில் பங்கெடுத்த பல காவல்துறை அதிகாரிகளை விசாரணை செய்துள்ளது. அதில் அனைத்து அதிகாரிகளும் நரேந்திர மோடி அவ்வாறு கூறவில்லை என்றே கூறியதாக விசாரணைக்குழு தெரிவித்தது. அதேபோல் அப்போதைய டி.ஜி.பி. சக்கரவர்த்தியும் மோடி அவ்வாறு கூறவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இது முழுக்க முழுக்க பொய் என மற்றொரு முன்னால் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிப்பதாவது, கடந்த 2004 ஆம் ஆண்டு நீதித்துறை கமிஷனுக்கு தாம் எழுதிய கடிதம் ஒன்றில் நரேந்திர மோடி நடத்திய இரகசிய கூட்டத்தில் முஸ்லிம்களை கொல்லும் வி.ஹெச்.பியினரை தடுக்க வேண்டாம் என நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக அப்போதைய டி.ஜி.பி சக்கரவர்த்தி தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.


இவ்வழக்கின் உண்மை நிலவரம்:

கடந்த ஏப்ரல் 9, 2002ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 18, 2002 வரை கூடுதல் டி.ஜி.பி. அதிகாரியாக நான் பணியாற்றினேன். என்னுடைய பணியின் காலத்தில் சங்கப்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனோடு தொடர்புடைய பல அமைப்புகள் முஸ்லிம்களுக்கெதிரான படுகொலைகள், நீதி தாமதிக்கப்படுவதையும், மறுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டி பல‌  ஈடுபட்டதற்கான பல குற்றச்சாட்டுக்களை மாநில அரசிற்கும், டிஜிபி அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.


2002ல் நடைபெற வேண்டிய குஜராத் சட்டமன்ற தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் இதனாலேயே தள்ளிவைத்தது என்பதை ஆகஸ்ட் 16, 2002ல் தேர்தல் ஆணையம் இது தொடர்பான ஆணையை வெளியிட்டது. அதன் பின்னர் நீதிபதி நானாவதி கமிஷனிடம் 660 பக்கங்களை கொண்ட வாக்குமூலங்களை சமர்பித்திருக்கிறேன். அதே வாக்குமூலத்தை சி.பி.ஐ அதிகாரியும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவர் ராகவனிடமும் கொடுத்திருக்கின்றேன்.

கடந்த 2004ல் நானாவதி கமிஷனிடம் நான் அளித்த நான்காவது வாக்குமூலத்தில் நரேந்திர மோடி நடத்திய இரகசிய கூட்டத்தில் அப்போதையை டி.ஜி.பி சக்கரவர்த்தி அது தொடர்பாக என்னிடம் கூறியதையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். அன்று நடைபெற்ற கூட்டத்தைப்பற்றி சக்கரவர்த்தி என்னிடம் கூறும்போது நரேந்திர மோடி அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளையும் அழைத்து கோத்ரா இரயில் எரிப்பு தொடர்பாக இந்துக்கள் பழி தீர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டுவிடவேண்டுமெனவும், இந்துக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் மோடி கேட்டுக்கொண்டதாக கூறினார்.

எனது வாக்குமூலத்தை உறுதி செய்வதற்காக மூளையை பரிசோதிக்கும் சேதனை முறையையும், கைரேகைகளை பரிசோதனை செய்வதற்கும் நான் தயார் என்று அறிவித்திருந்தேன். ஆனால் நானவதி கமிஷனாகட்டும், சிறப்பு விசாரணைக்குழுவாகட்டும், இருவருமே எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் புறந்தள்ளிவிட்டனர். நரேந்திர மோடி நடத்திய இரகசிய கூட்டத்தில் பங்கெடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் இத்தகைய சோதனையை மேற்கொண்டிருந்தால் எவ்வித சந்தேகமும் இல்லாமல் மோடியின் குட்டு வெளிப்பட்டிருக்கும்.

என்னுடைய மூன்றாவது வாக்குமூலத்தில் வன்முறை தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டினை விரிவாக எடுத்துக்கூறியுள்ளேன். பொய்யான வாக்குமூலங்களை தயார் செய்ய நான் நிர்பந்திக்கப்பட்டேன். பொய்யான அறிக்கைகளை தயார் செய்வதற்கும், போலியான படுகொலை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தப்பட்டேன்.

2004ல் உச்ச நீதிமன்றம் கலவரம் தொடர்பாக குஜராத் அரசை விமர்சித்தது. வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என குற்றம் சுமத்தியது. பின்னர் மறு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்ட 2000 வழக்குகள் மூடி மறைக்கப்பட்டது.


உத்திரபிரதேச காவல்துறையினரையும் கோத்ரா இரயில் எரிப்பு தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என சிறப்பு விசாரணைக்குழுவிடம் தெரிவித்திருந்தேன். அதனையும் அவர்கள் புறந்தள்ளிவிட்டனர். காவல்துறையினரின் கைப்பாவையாகவே விசாரணைக்குழுவினரும் செயல்பட்டுள்ளனர். எனவே தான் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு விசாரணைக்குழுவின் இந்த அறிக்கை எந்த ஒரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

Ler Mais

ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்புவாத வன்முறை - அடுத்த குஜராத்தாக மாறும் அபாயம்!

ஹைதராபாத்: சமீபத்தில் ஆந்திர மாநிலம் சங்கரரெட்டியில் நடந்த வகுப்பு வாத வன்முறையால முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் பெருமளவில் ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்களால் சேதப்படுத்தப்பட்டன. இதற்கான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்புவாத வன்முறை வெடித்துள்ளது.

நேற்று காலை 9 மணியளவில் ஹைதராபாத் புது நகரம் அருகே உள்ள மதன்பேட், சைதாபாத், குர்மகுடா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பஜ்ரங்தள் இயக்கத்தைச்சேர்ந்த குண்டர்கள் சிலர் குர்மகுடா அருகேயுள்ள ஹனுமன் மந்திர் எனும் இடத்திலிருந்து பேரணியாக வந்தனர். ஹனுமன் மந்திர் அருகே முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை வீசியதாக கூறி முஸ்லிம்களை எதிர்த்து பேரணி நடத்தினர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பேரணியில் கலந்து கொண்டு பஜ்ரங்தள் தொண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்பேரணி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி அருகே வந்தவுடன், பஜ்ரங்தள் குண்டர்கள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி கற்க்களை வீசத்தொடங்கினர். இதில் 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருக்கிறது. மேலும் 10ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொழுத்தியுள்ளனர். 9 நபர்கள் படுகாயமுற்றதாகவும் கூறப்படுகிறது. குர்மகுடா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் சசியாதவ் தான் இந்த பேரணிக்கு தலைமை தாங்கி நடத்திச் சென்றுள்ளார்.
ஃபாசிஸ குண்டர்களால் தீவைத்து கொழுத்தப்பட்ட முஸ்லிம்களின் ஆட்டோ

சைதாபாத்தில் வசித்து வருபவர் முஹம்மது தஹ்சீன், இவரது வீட்டை பஜ்ரங்தளைச்சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் மேலும் கூறும்போது ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் ஒரு கூட்டம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிக்குள் நுழைந்து முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். என்னுடைய வீட்டை கற்களை கொண்டும், பெட்ரோல் குண்டுகளைக்கொண்டும் கடுமையாக தாக்கினர். இவை அனைத்தும் காவல்துறையினரின் கண் முன்பாக நடந்தேறியது. அவர்களிடம் சென்று உதவி கேட்டதற்கு மரியாதையாக வீட்டிற்குள் ஒளிந்து கொல்லுங்கள் இல்லையென்றால் நீங்களும் அடிபடுவீர்கள் என்று மிரட்டினார்கள். என்று அவர் மேலும் கூறினார்.

பஜ்ரங்தள் குண்டர்கள் சில முஸ்லிம் பெண்களின் பர்தாவை பிடித்து இழுத்து கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அங்குள்ள பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றது. வன்முறையாளர்கள் காலை 7 மணி முதலே பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் தயாராக இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆங்காங்கே பஜ்ரங்தளைச்சேர்ந்தவர்கள் வன்முறையில் தொடந்து ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் வன்முறையாளர்களை கலைக்க லத்தி சார்ஜும் வேறு சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து வருகின்றனர்.

காவல்துறை மூத்த அதிகாரிகளான ஆணையர் ஏ.கே. கான் உட்பட அனைவரும் வன்முறை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக முஸ்லிம்களுக்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார் கும்பல்களின் தாக்குதல்கள் ஆந்திராவில் தொடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீண்டும் குஜராத் போன்று நடைபெறுவதற்கு முன்னால் முஸ்லிம்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டிய எல்லா பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
Ler Mais

சங்கரரெட்டி வகுப்புவாத வன்முறை - உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை

மேடக்: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டம் சங்கரரெட்டியில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிவில் லிபர்டீஸ் மானிடரிங் கமிட்டி சார்பாக பேராசிரியர் ரெஹ்னால் சுல்தானா, லத்தீஃப் முஹம்மது கான், கனீஸ் ஃபாத்திமா, மண்டகினி, மசூது, முஹம்மது இஸ்மாயில் கான் ஆகியோரை உண்மை கண்டறியும் குழுவாக நியமித்து வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்த பின் தங்களுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது.


முன்னுரை:

கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று இரவு பா.ஜ.க தலைவர் தன்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் முஸ்லிம்களின் புனித ஸ்தலாமான கஃபாவை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டிருந்ததால் அதனை கண்டித்து முஸ்லிம்கள் பா.ஜ.க தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனை சிறிதும் பொருட்படுத்தாத காவல்துறையினர் முஸ்லிம்களை கலைந்துவிடுமாறு மிரட்டியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்களில் சிலர் ஒன்றினைந்து முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு தீ வைத்தனர். இவ்வளவு தூரம் நடந்தும் வன்முறையாளர்களை கைது செய்து அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் மெளனம் சாதித்துள்ளனர்.


ஆர்.எஸ்.எஸ்  குண்டர்களின் இந்த வெறியாட்டத்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 2 கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குஜராத்தில் ஏற்பட்ட வன்முறை போன்று ஏற்பட்டுவிடுமோ என முஸ்லிம்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. காரணம் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மெஹபூப் நகர் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். சங்கரரெட்டி பகுதியில் அதிக அளவில் முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர்.




மன்னர் நிஜாமுதீன் காலத்தில் வாழ்ந்த ராணி சங்கரம்மா என்பவருடைய மகனான சங்காவின் பெயரைக்கொண்டே இந்நகரம் சங்கரரெட்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தின் தொழிற்துறையின் தலைநகரம் என்றே சங்கரரெட்டி நகரம் அழைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்திலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ள சங்கரரெட்டில் ஒரு லட்சத்தி ஐம்பதனாயிரம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இங்குள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் சிறு தொழில் செய்து தான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சாட்சியங்கள்:
இந்த வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும்போது அவர்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், அவர்களுக்கு ஏற்பட்ட வலியையும் யாரிடமாவது கூற வேண்டும் என்றே எதிர்பார்த்து இருந்ததாக உண்மை கண்டறியும் குழு உணர்ந்து கொண்டது. உண்மை கண்டறியும் குழு அங்கு சென்றதும் லப்பைக் ஹோட்டலின் உரிமையாளர் அதீகுர் ரஹ்மான் அவர்களை அழைத்து அன்று இரவு நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார். 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல், இரும்பு கம்பிகளுடன் அப்பகுதியில் இருந்த சிறு சிறு கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்திருக்கின்றனர். அதன் பின்னர் அதீகுர் ரஹ்மானின் ஹோட்டல் கதவை திறந்து தீ வைக்க முயன்றுள்ளனர். இதனைக்கண்ட பக்கத்து கடைக்காரர் முரளிதர் தன்னுடைய துணிக்கடை அருகில் இருப்பதால் பாதிப்பு தனக்கும் ஏற்படும் என்று கூறி அவர்களை விரட்டியுள்ளார். இருந்த போதிலும் தீ அவரது கடைக்கும் பரவி 1.50 லட்சம் மதிப்புள்ள துணிகள் எறிந்து சாம்பலாகியுள்ள‌ன. அதீகுர் ரஹ்மான் மேலும் கூறும்போது தன்னுடைய 40 ஆண்டுகால வாழ்க்கையில் சங்கரரெட்டியில் இப்படியொரு வன்முறை சம்பவம் நிகழ்ந்ததே இல்லை எனக்கூறினார். உண்மை கண்டறியும் குழு முரளிதரின் கடைக்கும் சென்று பார்வையிட்டது. அவர் கூறும்போது அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும், மக்கள் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்ததாகவும் கூறினார்.




அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே 10 முதல் 15 வரை இருந்த முஸ்லிம்கள் கடைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒவ்வொரு நபரும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷடத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு கடைகளும் பற்றி எரிந்து கொண்டிருந்த போது அதனை அணைப்பதற்கான எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக ஷேக் குடு என்பவர் தெரிவித்தார். பெரும்பாலும் கடைகளுக்கு தீ வைக்க பெட்ரோ குண்டுகளையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் இவ்வன்முறையில் தொடர்பு இருப்பதாக மற்றொருவர் கூறினார்.
புக்கடை நடத்தி வந்த தாஜுதீன் என்பவரும் 1.5 லட்சம் மதிப்பிலும், பேக்கரி நடத்தி வந்த அஹமதுல்லாஹ் என்பவருக்கு 5 லட்சம் மதிப்பிலும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி அஹமதுல்லாஹ் கூறும்போது தன்னுடைய பேக்கரி கதவை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகைவிட்டதாக அவர் கூறினார். இது திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதல் எனவும், இதற்காக 15 நாட்களுக்கு முன்பாகவே திட்டம் தீட்டி இருக்க வேண்டும் என அவர்கள் கூறினர். அச்சிறு கடைகளில் வேலை செய்து வந்தவர்கள் தற்போது வேலை இழந்து தவிக்கின்றனர். இவர்களை பற்றி எவரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை என கூறினார்கள்.

மாடர்ன் பேக்கரி நடத்தி வந்த மஜீத்திற்கு ரூபாய் 8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முஹம்மது இஸ்மாயில் மற்றும் முஹம்மது ஆரிஃப் ஓட்டி வந்த ஆட்டோக்கள் வன்முறையாளர்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் குழு அப்பகுதிக்குச் சென்று மீத இருந்த கடைகளை பற்றி விசாரித்தபோது முன்னால் முதல்வரும் சந்திரபாபு நாயுடு வருவதற்கு ஒரு நாள் முன்பாக சேதமடைந்த அனைத்து பொருட்களையும் இங்கிருந்து அகற்றி விட்தாகவும், தற்போது தங்களுடைய கைகளில் புகைப்படங்களும், எஃப்.ஐ.ஆர் காப்பி மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும் கூறினார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.கவைச் சேர்ந்த சோம்நாத், ஜகன், சேகர், வாசு, நாகராஜ், சீனு, கிட்டு, சந்தர் என அவர்கள் தெளிவாகவே பெயரை குறிப்பிட்டனர்.










இத்தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி அமைப்பினர்கள்தான் ஈடுபட்டிருக்கிறார்கள் என அனைவரும் குற்றஞ்சாட்டினர்.அவர்கள் மஸ்ஜிதின் கதவுகளுக்கும் தீ வைத்தனர். கதவு மூடியிருந்ததால் அவர்களால் மஸ்ஜிதிற்குள் நுழைய இயலவில்லை என மஸ்ஜிதே நொமானியாவின் தலைமை இமாம் தெரிவித்தார்.
இறுதியாக இக்குழு காவல்துறை அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக விசாரணை செய்தது. மாவட்ட எஸ்.பி. விக்டர், மற்றும் டி.எஸ்.பிகளான வெங்கடேஷ் மற்றும் லக்ஷ்மி நரசையா ஆகியோரிடம் விளக்கம் கேட்டது. அவர்கள் தரப்பில் கூறும்போது வன்முறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர தங்களாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் கூறினார். உரிய நேரத்தில் வன்முறையை தடுக்காமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே காவல் நிலையம் இருந்த போதிலும் ஏன் வன்முறை இவ்வளவு தூரம் வீரியமடைந்தது என கேட்டதற்கு போதிய பாதுகாப்பு படை தமது காவல் நிலையத்தில் அச்சமயம் இல்லை என்று தெரிவித்தார்.




தற்போது அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், நிலைமை சீரடைந்துவிடும் எனவும் அவர் கூறினார். இவ்வன்முறைக்கு யார் காரணம் என்று கேட்டதற்கு முதலில் நிலமை சீரடைந்த பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இது வரை வன்முறை தொடர்பாக 109 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 97 புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.


1. தங்களுடைய ஃபாசிஸ அஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌ சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம் பகையை ஏற்படுத்த  ஆர்.எஸ்.எஸ். வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

2. இவ்வன்முறை சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறியுள்ளது.

3. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக காங்கிர கட்சியினர் வகுப்புவாத வன்முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.

4. முஸ்லிம்களை பொருளாதார ரீதியில் முடக்குவதற்காகவே அவர்களின் வியாபார ஸ்தலங்கள் தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

5. எம்.எல்.ஏ ஜெயபிரகாஷ ரெட்டி வன்முறையை தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதோடு அவருக்கும் இவ்வன்முறையில் தொடர்பு இருந்திருக்கிறது.

6. காவல்துறையின் செயல்பாடுகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.காரணம் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

7. இவ்வன்முறையால முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது வரை அரசு தரப்பிலிருந்து எவ்வித நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

8. முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற இந்துத்துவ அமைப்பினர்களை தீவிரவாக கண்காணிக்க வேண்டும் என இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
Ler Mais

"குஜராத்" பத்து ஆண்டுகளுக்கு முன்....

"27 பிப்ரவரி 2002"ஆம் நாள் துரதிஷ்டவசமான நாளாக குஜராத் மக்களுக்கு அமைந்தது. கோத்ரா இரயில் நிலையம் அருகில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து ஏற்பட்டு அயோத்தியிலிருந்து அஹமதாபாத் வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர்  உயிரிழந்தனர். எவ்வாறு இரயிலில் தீ விபத்து ஏற்பட்டது? எவ்வாறு அவர்கள் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய தெளிவான விஷயங்கள் இன்று வரை தெரியவில்லை. ஒரு தரப்பினர் இதை விபத்து தான் என்றும் வாதிட மறு தரப்பினரோ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் உதவியுடன் வேண்டுமென்றே எஸ்-6 பெட்டியின் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைத்து கொழுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.
அப்போது இரயில்வே துறை மந்திரியாக இருந்த லல்லு பிரசாத் யாதவ் இது தொடர்பாக முழு விசாரணையை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பானர்ஜியை நியமித்தார். அவரும் இது தொடர்பாக முழு விசாரணையை மேற்கொண்டு இது விபத்து தான் என்றும் யாரும் திட்டமிட்டு வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்று தீ வைத்ததற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்று திட்டவட்டமாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார், எனினும் இது தொடர்பான முழு அறிக்கையும் மர்மமாகவே உள்ளது, காரணம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஹுஸைன் உமர் செசன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சரியான சாட்சிகள் இல்லை என்று கூறு அவரை சமீபத்தில் விடுதலை செய்தனர். அதே சமயம் 31 நபர்களை குற்றவாளிகள் என்று தீர்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி 63 நபர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்தது.

கலவரத்தில் ஈடுபடும் ஃபாசிஸ பயங்கரவாதிகள்

 இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்று அடுத்த 24 மணி நேரத்திற்குள் எவருமே எதிர்பார்த்திராத அளவிற்கு மிகப்பெரும் இனப்படுகொலை அரங்கேறியது. 28 ஆம் தேதி அஹமதபாத்தில் மட்டும் 200ருக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தின் முதல் நாள் அன்று குல்பர்கில் 63 மக்களும், நரோடாபாட்டியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். வடக்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் மாவட்டங்களில் கலவரங்கள் வேகமாக பரவியது. அதேசமயம் தென் குஜராத் மாவட்டங்கள் கலவரத்தால் அவ்வளவாக பாதிக்கவில்லை.


இது ஒன்றும் எதேர்ச்சையாக நடைபெற்ற கலவரமாக தெரியவில்லை, மாறாக நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம் என்பது பின்னரே தெரியவந்தது. கலவர நேரத்தில் காவல்துறை மூத்த அதிகாரிகளாக பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் தற்போதும் அன்று நடந்த விஷயங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் உளவுத்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரின் வாக்குமூலம் படி 27 பிப்ரவரி 2002 அன்று குஜராத் முதலைமைச்சர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளை அழைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கலவரத்தில் ஈடுபடும் இந்துக்களை தடுக்க வேண்டாம் என்றும் முஸ்லிம்களுக்கெதிராக அவர்களது கோபத்தை அவர்கள் வெளிப்படுத்த அனுமதியளிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

ஆனால் இதனை நரேந்திர மோடி மறுத்து வருகிறார். குல்பர்கில் முன்னால் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃபரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரி ராகவனும் இத்தகைய கூட்டம் நரேந்திர மோடியால் நடத்தபடவில்லை என்று கூறுகிறார்.

எதுவாகினும் கலவரம் அதிகமாகிக்கொண்டே போனதோடு மட்டுமல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டதோடு கலவரக்காரர்களுக்கே உதவியும் செய்திருக்கின்றனர். இந்தியா சந்தித்த மாபெரும் இனப்படுகொலைகளில் ஒன்றுதான் குஜராத்தில் 2002ல் நடைபெற்ற இனக்கலவரம். 3 மாதங்களுக்கு நீடித்த இந்த கலவரத்தில் 2000ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பலஹீனமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அநியாயம் செய்யப்படும்போது, அந்த அநியாயக்காரர்களை எதிர்த்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மக்களோ, எங்கள் இறைவா! அநியாயக்காரர்கள் வாழ்கின்ற இந்த ஊரை விட்டு எங்களை அப்புறப்படுத்துவாயாக்! மேலும் உன் புறத்திலிருந்து எங்களுக்கு ஓர் உதவியாளனையும் அனுப்பி வைப்பாயாக! என்று பிரார்தனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன்)

தனிப்பட்ட விசாரணைக்குழுவால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மக்கள் நீதிமன்றம் இதனை விசாரிப்பதற்கும் ஓய்வு பெற்ற இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தது. நீதிபதி கிருஷ்ண ஐயர், பி.பி. சவந்த மற்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் ஹோஸ்பட் ஆகியவர்கள் கூறும்போது குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு முக்கிய காரணம் அம்மாநில முதலைமைச்சரான நரேந்திர மோடியும் அவரது அரசும் தான் என திட்டவட்டமாக அறிவித்தனர். அதே போன்று தெஹல்கா பத்திரிக்கையும் இதுதொடர்பாக விசாரணையில் இறங்கி கலவரக்காரர்களின் வாக்குமூலங்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் கூறும்போது நரேந்திர மோடிதான் தங்களுக்கு உறுதுணையாக இருந்தார் எனக்கூறினர்.


குஜராத் கலவரம் மதச்சார்பற்று விளங்கும் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் கலங்கமாகும். எந்த கலவரமாக இருந்தாலும் சரி அது சிறியதோ, பெரியதோ அதனை தடுப்பதற்கான முயற்ச்சிகளில் தான் அரசு கவனம் செலுத்தவேண்டுமே தவிர அரசாங்கத்தின் துணையோடு எந்தக் கலவரமும் நடக்கக்கூடாது. ஆனால் குஜராத்தை பொறுத்தவரை அரசின் உதவியோடு கலவரக்காரர்கள் இனப்படுகொலைகளை அரங்கேற்றியுள்ளனர். இந்த மகாபாதக செயலை கண்டிக்காத நரேந்திர மோடி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்று கூறி கலவரத்தை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டார். கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது முஸ்லிம்கள் தான் என்றும் அதற்கு பழி தீர்த்துக்கொள்வதற்காகத்தான் இந்துக்கள் முஸ்லிம்களை கொலை செய்தனர் என்று வெளிப்படையாகவே கூறினார்.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே எந்த விசாரணைக்கும் உத்தரவிடாமல் இதனை செய்தது முஸ்லிம்கள் தான் என்று பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார் நரேந்திர மோடி. பின்னர் பா.ஜ.கவும் விஹெச்பியும் மறுநாள் பிப்ரவரி 28 அன்று பந்திற்கு அழைப்பு விடுத்தது. அதனை தொடர்ந்து கலவரத்தை மூட்டுவதற்காகவும், இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக கோபப்படுத்துவதற்கும் தீ விபத்தில் உயிரிழந்த கரசேவகர்களின் உடல்கள் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.






கலவரத்திற்கு பின் நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது நரேந்திர மோடியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தின் வரலாற்றை பார்க்கும் போது எப்போதெல்லாம் இனக்கலவரம் நடைபெறுகிறதோ அதன் பிறகு நடத்தப்படும் தேர்தலில் பா.ஜ.கவே வெற்றி பெற்று வருகின்றனர்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது கலவரம் எதற்காக யாரால் நடத்தப்பட்டது என்பது தெளிவாக புலப்படுகிறது. 2002ஆம் ஆண்டுக்கு முன் குஜராத்தில் ஜில்லா தேர்தல் முதற்கொண்டு எல்லா தேர்தல்களிலும் பா.ஜ.க தோல்வியடைந்தது. இப்படியே சென்றால் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க தோல்வியை தழுவும் அபாயம் ஏற்பட்டது. எனவே இந்துக்களின் வாக்குகளை ஒருமைப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற இயலும் என்ற நிலை உருவானது. அதுநாள் பா.ஜ.கவின் முதலைமைச்சராக இருந்த பட்டேல் காலத்தில் பா.ஜ.கவிற்கு ஏற்பட்ட சரிவை சீர்செய்ய இந்துத்துவ சிந்தனை கொண்ட ஒருவரை முன்னிறுத்த முடிவு செய்தது பா.ஜ.க. அவ்வாறு தான் நரேந்திர மோடி தனது அரசியல் களத்தில் இனம் காணப்பட்டார். முதலமைச்சர் ஆனதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலே தனி முத்திரை பதிக்கக்கூடிய இந்துத்துவ தலைவர் என்ற ரீதியில் பிரபலமடைந்தார். ஆனால் காலம் மாறி வரும் சூழலில் நரேந்திர மோடிக்கு எதிராக முக்கிய அரசாங்க ஊழியர்கள் இன்று போர்கொடி தூக்கி வருகின்றனர்.


குஜராத் கலவரம் மூலமாக கிடைத்த பாடம்


சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மற்ற கலவரங்களுக்கும் குஜராத் கலவரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கூற விரும்புகிறேன். குஜராத் கலவரம் மூலம் நமக்கு கிடைத்த பாடம் என்ன? குஜராத்தை போன்று இனியும் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


ஜபல்பூர் கலவரம் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற மற்ற கலவரங்களுக்கும் குஜராத் கலவரத்திற்கு நிறை வித்தியாசம் உண்டு. குஜராத்தில் நடைபெற்றது வகுப்புவாத கலவரமல்ல மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இரு மதத்தைச்சார்ந்தவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற கலவரம் அல்ல, மாறாக நன்கு திட்டமிடப்பட்டு அரசு அதிகாரிகளின் உதவியோடு பெரும்பான்மை சமூக மக்களின் சில விரோதிகளால் நடத்தபட்ட தாக்குதலாகும். சில அமைச்சர்கள் கூட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு ஆணை பிறப்பித்தாகவும் கூறப்படுகிறது. இது போன்ற செயல்கள் இதற்கு முன்பு நடந்ததே இல்லை.

அரசு இயந்திரங்கள் கலவரத்தின் போதுமட்டுமல்லாமல், கலவரத்திற்கு பின்பும் ஒருதலைபட்சமாகவே நடந்துள்ளனர். அறை மனதுடனேயே நிவாரணம் முகாம்களுக்கு சென்று நிவாரணப்பணியை மேற்கொண்டனர். கலவரம் நடைபெற்று 10 வருடங்கள் ஆகியும் இன்னும் எத்தனையோ முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த கிராமத்திற்கும் வீட்டிற்கும் செல்ல முடியாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப்பணிகள் தொடர்பாக நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் தொழிற்ச்சாலைகளுக்கு (முஸ்லிம் பெண்கள்) பின்னால் செல்ல முடியாது என்று கொச்சைப்படுத்தி பதிலளித்தார். கலவரத்தின் போது கர்ப்பிணியாக உயிர் பிழைத்த சில முஸ்லிம் பெண்கள் நிவாரணம் முகாம்களில் குழந்தைகளை பெற்றனர். இதனை விமர்சித்து இவ்வாறு நரேந்திர மோடி மேற்கூறியவாறு கூறியுள்ளார்.


கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கு விஷயத்திலும் ஈவு இரக்கமில்லாத செயலகளில் ஈடுபட்டது நரேந்திர மோடி அரசு. வீடுகளையும் கடைகளையும் முழுவதுமாக இழந்து தவித்த முஸ்லிம்களுக்கு ரூபாய் 500/- குறைவாகவே நிவாரணத்தொகைகளை வழங்கியுள்ளனர். நிவாரணத்தொகையை பெற மறுப்பவர்களை பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி முழு பணமும் பெற்றுக்கொண்டதாக வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். தற்போது இது தொடர்பாக மோடி அரசுக்கு உயர் நீதிமன்றம் இடிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.




முறையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி 300ற்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அவை அனைத்து மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக பெஸ்ட் பேக்கரி வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவருமே வி.ஹெச்.பி இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். சாட்சிகள் அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் சாட்சி சொல்வதற்கே அஞ்சினார்கள்.

குஜராத் கலவரத்திற்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழுவை ஏற்படுத்தியது. குல்பர்கில் 63 நபர்கள் கொல்லப்பட்ட வழக்கிற்காகவும், முன்னால் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃபரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைக்காக சிறப்பு விசாரணைக்குழு களம் இறக்கப்பட்டது. 1992-93ல் நடைபெற்ற மும்பை கலவரத்தின் போது கூட விசாரணைகள் இந்த அளவிற்கு தீவிரப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை நடந்த கலவரங்களில் அது முடிந்து சில மாதங்களிலேயே மக்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு சென்றுவிடுவர் ஆனால் குஜராத் கலவரம் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குளறுபடிகளை வைத்துக்கொண்டு குஜராத் ஒளிர்கிறது என்றும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் குஜராத் என்றும் சிறந்த முதலமைச்சர் நரேந்திர மோடி என்று கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது.


குஜராத் கலவரம் மூலமாக என்ன பாடம் படித்துக்கொண்டோம்? ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்கள் மதத்தை பயன்படுத்தி தங்களது கட்சியான பா.ஜ.கவை வெற்றி பெற வைக்கின்றனர். மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று திராட்டி இந்துத்துவாவிற்கு எதிராக போராட வேண்டும். பா.ஜ.கவை மட்டுமே குற்றம் சுமத்துவதற்கு இல்லை, இதற்கு காங்கிரஸ் கட்சியும் உடந்தை தான். பா.ஜ.க தீவிர இந்துத்துவ கொள்கை கொண்டது என்றால் காங்கிரஸ் மிதமான‌ இந்துத்துவா கொள்கை கொண்டது என்றே கூறலாம். இந்துத்துவ ஃபாசிஸத்திற்கு எதிராக போராடக்கூடிய பணியை நாம் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக எத்தகைய தியாகத்தினையும் செய்வதற்கு மக்கள் தயாராக வேண்டும்.


பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மதச்சார்பின்மை என்பது பலவீனமாக வருகிறது. மத்திய பிரதேசத்தில் இந்துக்களின் வழிபாட்டு முறையான சூரிய நம்ஸ்காரம் என்பது எல்லா பள்ளி மாணவ மாணவிகளிடத்தில் திணிக்கப்படுகிறது. இந்துத்துவாவின் அபாய கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியாவில் இருக்கக்கூடிய கல்வி முறை அனைத்தும் மதச்சார்பற்றதாக மாற்றப்படவேண்டும். இனவாதம் என்கிற போர்வையில் பரவிவரும் ஃபாசிஸம் இந்த தேசத்திற்கே ஆபத்தானதாகும்.
Ler Mais

முஸ்லிம்கள் மீண்டும் தங்களது விசுவாசத்தை காண்பிக்க வேண்டும் - ஆர்.எஸ்.எஸ்

லக்னோ:  ஆர்.எஸ்.எஸ்-ன் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் முஸ்லிம்கள் இந்திய தேசத்தின் மீதான தங்களது விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை இமாம்பாரா என்னும் இடத்தில் சில முஸ்லிம் மொளலவிகள் நடத்திய் மீலாது விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
 

முஹம்மது நபியும் ஒருவர் தன்னுடைய தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார். தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருக்க வேண்டிய தனித்துவமிக்க அம்சமாகும். எல்லா முஸ்லிம்களும் தங்களது நபி கூறியபடி நடப்பார்கள் என்று நம்புகிறேன் இவ்வாறு மொபைல் போனின் மூலம் பேசியுள்ளார்.

காவி பயங்கரவாதிகள் நிகழ்த்திய பல தீவிரவாத தாக்குதல்களில் இந்திரெஷ் குமாரின் பெயரும் சேக்கப்பட்ட நிலையில் இருக்க முஸ்லிம்கள் தேசத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்த எத்தனையோ சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் இன்றும் சிறைச்சாலையில் இருக்கின்றனர்.


ஆர்.எஸ்.எஸ்-ன் முஸ்லிம்களுக்கான அமைப்பு ராஷ்டிரிய முஸ்லிம் மஞ்ச் (ஆர்.எம்.எம்) இந்த மீலாது விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்திரேஷ் குமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாராம். விமானத்தை தவற விட்டதால் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.


இந்திய நாட்டில் கலாச்சாரத்தை பெருமைப்படுத்தி பேசிவிட்டு நமது தாய் நாடு இந்தியாவாக இருப்பதற்கு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும், நாம் அனைவரும் அமைதியாக வாழவேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் முஸ்லிம் சமூகம் தங்களது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கல்வியால் மட்டுமே முஸ்லிம் சமூகம் முன்னேர முடியும். எனவே கல்விக்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இளைஞர்கள் கல்வி கற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.




இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கலந்து கொள்வார் என்ற செய்தி தெரிந்தவுடன் மற்ற முஸ்லிம் தலைவர்கள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர். ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டின் துணைத்தலைவர் டாக்டர் கல்பே சாதிக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றிருக்க அவரும் இதனை புறக்கணித்தார்.


இன்னும் எத்தனையோ மார்க்க அறிஞர்கள் கலந்து கொள்வோம் என்று கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களது வேலை பழுவினால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்கள் அனைவரும் எங்களோடு கைகோர்த்துள்ளனர் என்று கூறினார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மெளலானா துராஜ் ஜெய்தி. இந்த மெளாலானா துராஜ் ஜெய்தி என்பவர் பா.ஜ.கவுடனும் ஆர்.எஸ்.எஸ்வுடனும் நெருங்கிய தொடர்புடையவர். லக்னோவில் போட்டியிடுகின்ற பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து ஆர்.எஸ்.எஸ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்த மெளலானா கலந்து கொண்டுள்ளார்.


ஆல் இந்தியா ஷியா பர்சனல் லா போர்டின் ஊடக தொடர்பாளர் மெளலானா யசூப் அப்பாஸ் என்பவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் மேலும் கூறும் போது நிறைய முஸ்லிம் அறிஞர்கள் வருகின்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்ததாக கூறினார். இது போன்ற நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

(பசுத்தோல் போர்த்திய புலியாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் சூழ்ச்சிகளுக்கு இப்படியும் முஸ்லிம்கள் பலியாகிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விஷயம் - ஆசிரியர்)
Ler Mais

சம்ஜோத்தா இரயில் குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது!


புதுடெல்லி: கடந்த 2007ஆம் ஆண்டு சம்ஜோத்தா இரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தூரைச்சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் திவிரவாதி ஒருவனை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியான கமால் செளஹான் இதே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட‌ ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகிய இருவருக்கும் நெருக்கமானவன் என்று தெரியவந்தள்ளது. அவனை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக இந்தூரில் உள்ள அவனது வீட்டிற்கு சம்மனும் அனுப்பியுள்ளனர்.
ராம்ஜீ மற்றும் சந்தீப் ஆகிய இருவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கமால் செளஹானை தீவிரமாக விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்ஜோத்தை இரயில் குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட 4 முக்கிய திவீரவாதிகளில் கமால் செளஹானும் ஒருவன் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் 68 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் இரயிலான சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் இரயிலில் குண்டுவைப்பதன் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியில் கோபத்தை ஏற்படுத்துவதற்காவே இச்சதிச்செயலில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியான கமால் செளஹான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் மற்றொரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்துவதற்கு ரகசிய கூட்டத்தில் பங்கெடுத்ததாக மற்றொரு இந்துத்துவா தீவிரவாதியான லோகேஷ் ஷர்மா கடந்த ஜூன் 2010ல் கைது செய்யப்பட்டான்.
Ler Mais

தமிழ மக்களே உஷாராக இருங்கள்!

இது தமிழக மக்களை மிரட்டுவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல, மாறாக இன்றைய காலச்சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனித்து, இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கிய பின்னர் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சிறு கட்டுரை.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழக மக்களின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் இந்திய வரலாற்றிலிருந்து விலக்கி வைத்து விட முடியாது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஜாதி, மத பேதமின்றி தேசத்தின் சுதந்திரத்திற்காய் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளாம். கான் சாஹிப் (மருதநாயகம்), கட்டபொம்மன், வ.ஊ. சிதம்பரனார், மருது சகோதரர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதே போன்று தமிழகத்தை மிகப்பெரும் சக்தியாக மாற்றிய அமைத்த பெருமை தந்தை பெரியாருக்கும் உண்டு. தீண்டாமைக்கொள்கையை தகர்த்தெரிய, பார்ப்பணிய மத வெறியை மாய்ப்பதற்கு தமிழக மக்களை மடமைத்தனத்திலிருந்து விடுவிக்க அறும்பாடுபட்டவர் தந்தை பெரியாராவார்.



திராவிடக்கழகம் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் வேரூன்றி இருந்தகாலத்தில் பார்ப்பண வெறியர்களால் தங்களது ஆரியக்கொள்கையை தமிழகத்தில் தடம் பதிக்க முடியாமல் தவித்தனர். தந்தை பெரியார் காலத்தின் போதும் சரி அதன் பின்னர் திராவிடக்கட்சிகள் உருவாக்கப்பட்ட பின்பும் சரி ஆரியர்களால் பெரிய அளவில் தமிழகத்தில் கால் பதிக்க இயலவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக்காட்டிலும் அதிக அளவில் மதக்கலவரங்களோ, குண்டுவெடிப்புகளோ, தீவிரவாத தாக்குதல்களோ நடைபெற்றதில்லை. இதற்கான காரணத்தை உற்று கவனிக்கும் போது  ஃபாசிஸ பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் தமிழகத்தில் குறைந்து காணப்படுவதால் தான் என்று தெளிவாக புலப்படுகிறது.

தமிழக வரலாற்றில் ஒரு சில இடங்களில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை காணும் போது தேச விரோதிகளான சங்கப்பரிவார கும்பல்களின் கைவரிசை தான் அதில் பதிந்து இருக்கிறது. மண்டைக்காடு கலவரமாகட்டும், கோயமுத்தூர் கலவரமாகட்டு, தென்காசி குண்டுவெடிப்பு சம்பவமாகட்டு இவை அனைத்திலுமே சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளின் ஈடுபாடுகள் இருந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி, பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி போன்றவர்கள் தமிழகத்தில் செல்லா காசாகிப்போயிருந்தாலும் தமிழகத்தில் தங்களது பாதங்களை பதிப்பதே அவர்களுக்கு பெரும் சவலாக இருந்தது. அதற்கான கால அவகாசம் தற்போது அவர்களுக்கு கிட்டியுள்ளதோ என்று எண்ணும் அளவிற்கு தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. சமீபத்தில் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை வைத்தும், ஜெயலலிதா பதவியேற்பு விழாவின் போது சம்பந்தமே இல்லாமல் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை வரவழைத்ததும், ஃபாசிஸ சிந்தனை கொண்ட பிராமண வெறியனான "துக்ளக்" சோவிற்கு தலையாட்டுவதை பார்க்கும்போது ஃபாசிஸ பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் கால்பதிக்க அவகாசத்தை முதல்வர் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவே தோன்றுகிறது.

தற்போது இந்த ஐந்து வருடகாலகட்டத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் மிகப்பெரும் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருப்பது தெரியவருகிறது. குமரி மாவட்டத்தில் சீருடை அணிந்து 25,000 உறுப்பினர்கள் என மொத்தம் 1 லட்சம் பேர் கூடுகின்ற "ப்ராந்த சாங்கிக்" என்னும் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது  ஆர்.எஸ்.எஸ். இதற்கு அவர்களின் சர்சங்சாலக்கான மோகன் பகவத் பங்கேற்க இருக்கிறாராம். இவை அனைத்தையும் பார்க்கும்போது ஜெயலலிதா ஆட்சி செய்ய இருக்கும் இந்த ஐந்து வருடக்காலத்தை இறுதி அவகாசமாக ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் தமிகத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை நாம் அனுமதித்தால் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் அமைதியின்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே உஷாராக இருந்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.
Ler Mais

ஹிந்து வாஹினி உறுப்பினர்கள் ஜாமீனில் விடுதலை

ஹைதரபாத்: கடந்த நவம்பர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் ஹிந்து வாஹினி அமைப்பினரைச்சேர்ந்த 6 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு 90 நாட்களாகியும் காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்பிக்காததால் அவர்கள் அனைவரும் நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.
 
ஜாமீனில் விடுதலையான் ஹிந்து வாஹினி தீவிரவாதிகள்
முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு ஹிந்து வாஹினி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கொலை முயற்ச்சி பிரிவான இ.பி.கோ 307வது பிரிவின் படி கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் இவ்வழக்கை சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.


நீதிபதியிடம் அனுமதி பெற்ற பின்னர் குற்றவாளிகள் அனைவரும் சிறைச்சாலையிலேயே அடையாளப்படுத்தப்பட்டனர். தற்போது சதானந்தா-27, சக்தி வினோத்-24, உன்னி கிருஷ்ணன்-23, பபா பாகராவ்-21, சந்தோஷ்-22, கல்யாண்-26  ஆகிய 6 நபர்களும் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.

செகந்தரபாத் அருகே ஒரு முஸ்லிம் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பல ஹிந்து வாஹினி அமைப்பினர் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நிபந்தனை ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் வெவ்வேறு சந்தர்பங்களில் 8 முஸ்லிம் இளைஞர்கள் ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஹிந்து வாஹினி அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். ஹஜ்ஹுப் பெருநாளின் போது முஸ்லிம்கள் மாடுகளை அறுத்து குர்பானி கொடுப்பது வழக்கம். முஸ்லிம் இளைஞர்ள் அனைவரும் மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ஹிந்து வாஹினி கும்பல்கள் அவர்களின் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறை வெகு சீக்கிரமே அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுத்தருவதாக கூறிவிட்டு, 3 மாதங்களாகியு குற்றப்பத்திரிக்கையை சமர்பிக்காததால் குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர். இதன் மூலம் காவல்துறையின் பொடுபோக்குடன் நடந்து கொண்டதோடு ஹிந்து தீவிரவாதிகளுக்கு துணைபோவது தெரியவருகிறது.

Ler Mais

செருப்படி வாங்கியும் திருந்தாத இந்து முன்னனியினர்


சென்னை: சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.





தற்போது இது தொடர்பாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் இந்து முன்னனி கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கலவரக்காரர்கள் என்றும் தங்களை அப்பாவிகள் என்று கூறியுள்ளது. மத்திய மாநில குழுவிடம் ஆதரவு கடிதத்தை கொடுக்க வந்த‌ இந்து முன்னனியினரிடம் வேண்டுமென்றே அணு உலை எதிர்ப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார்கள் என்றும் கூறுகிறது. காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு இந்து முன்னனியினரை கைது செய்துவிட்டதாகவும், உடனே முதலைமைச்சர் இதில் தலையிட்டு இதனை தீர்த்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

செருப்படி பட்டும் திருந்தாத இந்து முன்னனியினர் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

1. அணு உலையை உருவாக்குவதற்கு இந்து முன்னனியும் ஆதரவு அளிக்கிறது என்ற செய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்த போதும் பேச்சு வார்த்தை நடக்க இருந்த நாளில் அதுவும் அதே இடத்தில் சென்று ஆதரவு கடிதம் அளிப்பதற்கான காரணம் என்ன?

2. பேச்சுவார்த்தைக்கு வந்த அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு நீங்கள் இந்து முன்னனி இயக்கத்தினர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக ஆதரவு அளிக்க வந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியாத நிலையில் எப்படி அவர்களாகவே வந்து உங்களிடம் வாக்குவாதம் செய்தார்கள்?

3. அணு உலையால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று நிரூபித்தால் கோடி ரூபாய் பரிசு என்று மக்கள் ஜனனாயகக் கட்சி அறிவித்திருந்ததே! அப்படியானால் அணு உலையை ஆதரிக்கும் இந்து முன்னனியினர் ஏன் அதனை நிரூபிக்க முன் வரவில்லை?

4. அணு உலையை ஏற்படுத்தாவிட்டால் தமிழகமே இருளில் மூழ்கி விடும் அபாயம் இருப்பதாக கூறும் இந்து முன்னனியினரே அணு உலை மூலம் சொற்ப சதவிகிதமே மின்சாரம் தயாரிக்க இயலும் என்றும் முழுக்க முழுக்க மனித இனத்தையே அழிக்கக்கூடிய வெடி பொருட்களைத்தான் தயாரிக்க முடியும் என வல்லுனர்கள் கூறியது தெரியாதோ?

5. காங்கிரஸ் அரசாங்கம் எந்த ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்த நினைத்தாலும் அதற்கு முதல் முட்டுகட்டையாய் இருப்பது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி போன்றவர்கள் தான். அப்படி இருக்க அணு உலை விசயத்தில் மட்டும் காங்கிரஸ் அரசாங்கத்திற்காக பரிந்து பேசுவது ஏன்?

6. அணு உலை எதிர்ப்பாளர்கள் இதுவரை எந்த ஒரு வன்முறை சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை. மாறாக ஜனநாயக முறையிலும் அமைதியான முறையிலும் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர்களை கலவரக்காரர்கள் என்றும் வன்முறையை மட்டுமே நம்பிக்கொண்டு தேசத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் உங்களைப் போன்றவர்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள நினைப்பது ஏன்?

7. இந்துக்களுக்காக போராட, வாதாட, பரிந்து பேசவே இந்து முன்னனி இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக விவரிக்கும் இந்து முன்னனியினரே உங்களது பார்வையில் அணு உலை எதிர்ப்பாளர்கல் இந்துக்கள் இல்லையா?  இதே போராட்டத்தை பிராமணர்கள் செய்திருந்தால் ஆதரித்திருப்பீர்கள்தானே?

Ler Mais

பெண்களிடம் செருப்படி வாங்கிய இந்து முன்னனியினர்


அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கூடன்குளம் அனுமின் நிலைய எதிர்பாளர்களுக்கும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கும் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை இந்து முன்னனியினரின் கேடுகெட்ட செயலால் நடைபெறாமல் போயிற்று. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற வேண்டிய இப்பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னால் அங்கு வந்த இந்து முன்னனியினர் கூடன்குளம் எதிர்பாளர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்து முன்னனியினரை செருப்பால் அடித்த பெண்கள்
  பாளையங்கோட்டையைச்சேர்ந்த காவல்துறையினர் இந்துமுன்னனியின் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார் உட்பட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய அரசின் பேச்சு வார்த்தை குழு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான அமர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதிகள் குழுவின் தலைவர் முத்து நாயகத்திடன் ஆலோசனை நடத்திய பின்பு தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறது.
பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் எஸ்.பி. உதயகுமார் கூறும்போது பேச்சுவார்த்தைக்கென்று வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத சூழலும் அதே சமயம் போராட்டத்தை தீவரப்படுத்தும் எண்ணமே அதிகரிக்கும்" எனக்கூறினார்.


இந்து மத வெறியர்களாலும் மத்திய அரசாலும் ஏவப்படும் இது போன்ற ஜனநாயகமற்ற செயல்களை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மாடியில் மாநிலக்குழுவினரான புஷ்பராயான் மற்றும் ஜேசுராஜ் ஆகிய இருவரின் வருகைக்காக காத்திருந்த மத்திய அரசுக்குழு காத்துக்கொண்டிருந்த சமயம் இந்து முன்னனி தலைவரான ஜெயக்குமார் தன்னுடைய சகாக்களுடன் அங்கு வந்து கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி தவறான வதந்திகளை தூத்துக்குடி மாவட்ட பிஷப் ஆம்புரோஸ் மற்றும் டாக்டர் உதயகுமார் ஆகிய இருவரும் பரப்பி வருவதாகவும் எனவே உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு வந்ததாக கூறினர்.

அச்சமயம் அங்கு வந்து கொண்டிருந்த அணு உலை எதிர்ப்புக்குழுவின் உறுப்பினரான் முகிலனை நோக்கி ஓடிச்சென்று வாகனத்திலிருந்து அவரை இழுத்து இந்து முன்னனியினர் தாக்கினர். முகிலனோடு வந்திருந்த அணு உலை எதிர்ப்புக்குழுவைச்சேர்ந்த 16ற்கும் மேற்பட்ட பெண்கள் உடனே ஜெயக்குமார் மற்றும் அவருடைய சகாக்களை சுற்றி வழைத்து தங்களது செருப்பை கழட்டி சரமாரியாக இந்து முன்னனியினருக்கு கொடுத்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து இப்பிரச்சனையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். வந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னனியினர் அனைவரையும் கைது செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அணு உலை எதிர்ப்பாளர்கள் இந்து முன்னனியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதன் பிறகு டாக்டர் உதயகுமார் இனிமேல் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தயார் இல்லை என்றும் மத்திய அரசு தங்கள் மீதான அராஜக போக்கை கையாண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.


இச்செய்தியை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராம மக்கள் உடனே விரைந்து வந்து இத்தாக்குதலை வன்மையாக கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் டாக்டர் உதயகுமாரின் வேண்டுகோளுக்கு இனங்க 4.30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்து முன்னனியினரின் இந்த காட்டுமிராண்டித்தனம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்து முன்னனி என்று தங்கள் இயக்கத்திற்கு பெயர் வைத்துக்கொண்டு அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு (இந்துக்களுக்கு) எதிராக தாக்குதலை நடத்தியதன் மூலம் தாங்கள் இந்து முன்னனியினர் அல்ல என்றும் பிராமண முன்னனியினர் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

கேடுகெட்ட இந்து முன்னனியினரே! உங்களுடைய எல்லா பாஷைகளையும் புரிந்து வைத்திருக்கின்ற ஒரு இயக்கம் தான் இருக்கிறதே! அவர்களோடு மோதுவதற்கு துப்பில்லாத நீங்கள் அப்பாவி மக்களை தாக்குதல் நடத்தி பிரபலம் அடைய எண்ணுகிறீர்களா?

தமிழில்: முத்து
செய்தி: தி ஹிந்து
Ler Mais

காவி கும்பல்களால் மூத்த பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து!

பெங்களூர்: சங்கப்பரிவார கும்பல்கள் தங்களது கொள்கைகளை பரப்பவும் இந்து ராஷ்டிரா என்ற கிரிமினல் அஜ்ன்டாவை ஏற்படுத்துவதற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்து மத குருவான சுவாமி விவேகானந்தரின் பெயரை உபயோகப்படுத்தி வருகிறது.




ஆனால் விவேகானந்திரின் போதனைகளும் சங்கப்பரிவார கும்பல்களின் செயல்பாடுகளுக்கும் எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன. விவேகானந்தர் அவர்கள் வர்ணாசிரமக் கொள்கைக்கு எதிரானவராக இருந்தார். அப்பேற்பட்ட வர்ணாசிரமக்கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்துராஷ்டிராவை உருவாக்க வேண்டும் என சங்கப்பரிவாரங்கள் திட்டமிட்டு வருகின்றனர். இந்தியாவில் பல இடங்களில் தலித் சமூகத்தவரையும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் கோயிலுக்குள் அனுமதிப்பதே இல்லை, மேலும் இந்த சங்கப்பரிவாரங்களால் தினமும் ஒரு தலித் இந்தியாவில் தாக்கப்பட்டு வருகிறான் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. நாங்கள் இந்துக்களின் முன்னேற்றத்திற்காகத்தான் பணி செய்கிறோம் என்பதை காட்டி அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்வதற்காகவே விவேகானந்தரின் புகைப்படத்தை இவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

விவேகானந்தரின் போதனைகளை வேண்டுமென்றே தவறாக பயன்படுத்தி அதன் மூலம் சாதி வெறியை தூண்டுவதிலும், மதவெறியை தூண்டுவதிலும் முனைப்போடு செயல்படுகின்றனர் இந்த காவி பயங்கரவாதிகள். "சங்கப்பரிவாரங்களின் பிடியிலிருந்து விவேகானந்தரை மீட்க வேண்டிய தருணம் இது"  என முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் குமார் கூறியுள்ளார்.

விவேகானந்தரை தங்களது ஃபாசிஸ பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருவதையும், மூத்த பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்தும் பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது இவ்வாறு கூறினார் தினேஷ் குமார்.

பெங்களூரில் சங்கப்பரிவாரங்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

"கன்னட டெய்லி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் தினேஷ் அமின் மாத்து சமீபத்தில் விவேகானதிரின் வாழ்க்கை முறையை ஒரு கட்டுரையாக எழுதியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சங்கப்பரிவாரங்கள் அப்பத்திரிக்கையின் அலுவலகத்தை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அப்பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் பலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


தினேஷ் அமின் மாத்து அவர்கள் விவேகானந்தர் பற்றிய உண்மை வரலாற்றையே எழுதியுள்ளார். ஏன் இதனை சங்கப்ரிவாரங்களால ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை?  அதவிடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் அவர்களது அலுவலகங்களை தாக்குவதும் கடும் கண்டனத்துக்குறியதாகும் என தினேஷ் குமார் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான கமிஷனின் முன்னால் தலைவருமான டாக்டர் சி.எஸ்.துவார்காந்த் கூறும்போது தினேஷ் அமின் மாத்து சிறந்த ஒரு பணியை செய்துள்ளார். விவேகானந்தரின் வாழ்க்கை முறையை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். அவர் எழுத்திய கட்டுரை இதனால் வரை சங்கப்பரிவாரங்கள் விவேகானந்தர் பற்றி கூறி வந்த வரலாறுகள் அனைத்தும் பொய் என்று தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.


வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் நரசிம்மையா கூறும்போது விவேகானந்தர் அவர்கள் பகுத்தறிவு கொண்ட புரட்சிகரமான‌ இந்து மத துறவியாக வாழ்ந்தார். ஜாதி கொள்கையிலும் தீண்டாமைக்கொள்கையிலும் நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். எல்லா மனிதர்களும் சமமே என்றும் எந்த ஒரு மதமும் இன்னொரு மதத்தோடு உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல என்று வாழ்ந்தார். அவரை பொறுத்தவரை அனைத்து மதமும் உண்மை என்றும் சமமானது என்று நம்பியதாக கூறினார்.


ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் கருத்துச்சுதந்திரம் உண்டு அதனை உரிய இடங்களில் வைத்து பரிமாறிக்கொள்ளலாம். அதனை விடுத்து பத்திரிக்கை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மூத்த எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது போன்ற செயல்கள் தீர்வாக அமைந்துவிடாது. இத்தகைய செயல்கள் கருத்துச்சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

"சங்கப்பரிவார சக்திகளை முன்னொரு காலத்தில் எதிர்க்கக்கூடிய அளவில் எந்த ஒரு இயக்கமும் இல்லாத நிலையில் அவர்கள் பல்வேறு வரலாறுகளை திரித்து மக்கள் மத்தியில் துவேஷத்தை ஏற்படுத்தி வந்தனர். ஆனால் காலம் மாறிவிட்டது. அவர்களை எதிர்ப்பதற்கும் வலுவோடு அவர்களை எதிர்த்து போராடுவதற்கும் இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் உருவாகிவிட்டனர். இதனை அவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்" என சந்திரசேகர் என்பவர் கூறினார்.

"மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் மற்றும் பத்திரிக்கை அலுவலகங்கள் தகர்ப்பு போன்ற செயல்களின் மூலம் என்ன கூற வருகிறார்கள்? அவர்களுக்கென்று இருந்த சிறிதளவு நற்பெயரும் சிந்தகி மாவட்டத்தில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை ஏற்றி பிடிபட்டவுடன் கெட்டுவிட்டது" என்று கூறினார்.

ஆக மொத்தத்தில் சங்கப்பரிவார கூட்டங்கள் இந்துக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிவிட்டு மீண்டு வர்ணாசிரமக்கொள்கையான தீண்டாமைக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், பிராமணர்களின் ஆதிக்கத்தை உருவாக்கவும் அப்பாவி இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
Ler Mais

ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - வி.ஹெச்.பி

லக்னோ: ஓ.பி.சி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கென மத்திய அரசு உள் ஒதுக்கீடு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு சமூக நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது துவேஷ எண்ணங்களை மக்களிடத்தில் சேர்ப்பதற்கு வி.ஹெச்.பி தயாராகி வருகிறது.

வி.ஹெச்.பியின் அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியா கடந்த 5ஆம் தேதி அன்று ஓ.பி.சி வகுப்பினருக்காக வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்காக 4.5% உள் ஒதுக்கீடு (முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீடு) வழங்கியதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பான ஓ.பி.சியினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிலிருந்து 4.5% முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது மிகவும் கண்டிக்கதக்கதாகும். 27% ஒதுக்கீடு செய்வது என்பது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான மீறலாகும். அதுமட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கக்கூடிய விதமாக இருக்கிறது. எனவே இதனை கண்டித்து அமைதியான முறையில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக தொகாடிய தெரிவித்துள்ளார்.





இன்று இந்திய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு முன்னால் மண்ணியிட்டு நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் குடும்ப கட்டுப்பாடு போன்ற அத்தியாவசிய செயல்களை கூட செய்ய மறுப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்களாம். மேலும் ஏழை ஓ.பி.சியினருக்காக வழங்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டிலிருந்து 4.5% முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக்கடன், இன்னும் பிற சலுகைகளை சிறமப்பட்டுக் கொண்டிருக்கும் இதர பிற்படுத்த மக்களிடம் இருந்து பிடுங்கி முஸ்லிம்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். இத்தோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கும் நிலை ஏற்பட்டுவிடும். ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.


முஸ்லிம்களுக்கு வழங்க இருக்கும் இடஒதுக்கீட்டினை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கப்பட்ட முஸ்லிம்களை உடனே அதிலிருந்து நீக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.


மத்திய அரசின் இந்த நிலைபாடு இறுதியில் பாரத இந்தியாவில் ஹிந்துக்கள் வாழ்வதற்குண்டான வழிவகைகளை அழித்துவிடும் செயலாகும். எனவே ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களும் ஒன்றினைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.


Ler Mais

முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கான விவகாரத்திற்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு நேர்தியான முறையில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்ட நேரங்களிலிருந்து இன்று வரை 15ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.


சென்ற வருடம் முஸ்லிம்கள் கொண்டாடிய ஹஜ்ஜுப் பெருநாள் பின்பு போவனபள்ளி, காச்சிகுடா, சிக்கடபள்ளி, எல்.பி. நகர், வித்யா நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய தாக்குதல்கள் ஒரு சில நாட்கள் இடைவெளியில் நடந்தேறியுள்ளது.


மக்கள் தெலுங்கான விவகாரத்தில் மூழ்கி போயிருந்த சமயம் தெருக்களில் உலா வந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களை மோட்டார் சைக்கிளில் வந்து பின்புறமாக கழுத்தில் வெட்டியுள்ளனர். பின்புறமாக வந்து எதிர்பாராத சமயம் தாக்குதலை நடத்துவதால் தங்களை அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

சமீபத்தில் ஹைதரபாத் நகரத்தை ஒட்டிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களை விசாரித்த மனித உரிமை கண்காணிப்பு குழு அரசாங்கத்திடம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொண்ட அமைப்பான ஹிந்து வாஹினி இது போன்ற தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாகவும் உடனே அவ்வமைப்பை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அக்குழுவின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மது  கான் கூறும்போது "வழக்கம் போல் அரசியல் ரீதியான பிரச்சனைகளை தனக்கு சாதமாக்கிக்கொண்டு ஹிந்தத்வ அமைப்பினர் இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவதால் ஆந்திர மாநிலத்தில் அரசியல் களத்தில் கால் பதித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்" என்று கூறினார்.


அவர் மேலும் கூறும் போது "மாநில காவல்துறை எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்களை மேற்கொண்டிருந்தாலும் ஹிந்தத்துவ அமைப்பினரால் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்திட இயலவில்லை. இதிலிருந்தே முஸ்லிம்களை தாக்குவதற்காக பிரத்யேகமாக பயிற்ச்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஹிந்துத்துவ அமைப்பினர் நடத்தும் பயிற்ச்சி முகாம்களில் இது போன்ற தாக்குதல்களை எவ்வாறு நிகழ்த்துவது என்ற பயிற்ச்சி அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்ச்சியை முடித்த பின்னர் அதனை செயல்முறை படுத்தவே இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்" என்று கூறினார்.


மனித உரிமை கண்காணிப்பு குழு அரசாங்கத்திற்கு விடுத்த கோரிக்கையில் "இவர்கள் இத்தகைய முகாம்களை முக்கிய நகரங்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்கள். மாநில அரசு இத்தகைய அமைப்புகளிடத்தில் மென்மையான அணுகுமுறையை கைவிட்டு அவர்கள் நடத்தும் முகாம்களையும், ஆர்.எஸ்.எஸ்  நடத்தும் ஷாகா வகுப்புக்களையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.


ஆந்திர மாநில முதலமைச்சருக்கு எழுதிய கடதத்தில் கூறும்போது "தங்கள் அரசு முஸ்லிம்களை பாதுகாக்கும் விஷயத்தில் தோல்வை அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஹைதரபாத் மாநகரின் டி.ஜி.பி மற்றும் கமிஷனர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் "ஹிந்தத்துவ தீவிரவாதம் மாநிலத்தில் வளர்ந்து வருவதாகவும் குறிப்பாக ஹைதரபாத மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.


சமீபத்தில் அடிலாபாத் அருகே ஒரு முஸ்லிம் குடும்பம் கொல்லப்பட்டதும், சித்திப்பேட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும், துர்கஷ்டமி அன்று முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் இரு பாதியாக கிழிக்கப்பட்டு மஸ்ஜித் முன்பு வீசப்பட்ட சம்வம் என அனைத்தும் சங்கப்பரிவார தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்பதை உறுதியாக கூற முடியும்.

இச்சம்பவங்கள் தொடர்பாக 40 நபரை காவல்துறையினர் கைது செய்ததாக அறிவித்தது ஆனால் காவல்துறையினரை தொடர்பு கொண்டு விசாரித்த போது முறையான பதில் கிடைக்கவில்லை. உண்மையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா? அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில்   கிடைக்கவில்லை.

Ler Mais

அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் புதுவருட தினத்தில் பாக்.கொடி ஏற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின.



பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம் சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின. இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி: தூது ஆன்லைன்
Ler Mais

"லவ் ஜிஹாத்" என்னும் வதந்தியை பரப்புவது ஹிந்துத்துவ இணையதளங்களே!


திருவனந்தபுரம்: எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் வதந்தியான "லவ் ஜிஹாத்" என்னும் பிரச்சாரத்தை இந்துத்துவ இணையதளங்கே பரப்பி வருவதாக கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள காவல்துறையினர் சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியோடு விசாரணையில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்துத்துவ அமைப்பான "ஹிந்து ஜனஜகுர்தி" லவ் ஜிஹாத் தொடர்பான பொய்யான செய்திகளை பரப்பி பொதுமக்களிடையே வகுப்புவாத கலவரத்தை தூண்ட முயற்ச்சிக்கிறது என்று கூறி கேரள காவல்துறையினர் அவ்வமைப்பின் மீது வழக்கு தொடுத்துள்ளனர். அவர்களுடைய இணையதளத்தில் பல இந்து இளம் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாக பிரச்சாரம் செய்துள்ளது.

இந்த இணையதளத்தை நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக‌ காவல்துறையினர் தேடி வருகின்றனர். லவ் ஜிஹாத் தொடர்பான வழக்கு ஆதாரமற்றது என்றும் அது ஒரு பொய் பிரச்சாரம் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்பளித்த பின்பும் இந்த இணையதளத்தின் மூலமாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லவ் ஜிஹாத் தொடர்பான பொய்யான செய்திகளை வெளியிட்டது மட்டுமல்லாமல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய பொய் பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளனர். காவல்துறையின் இந்த செய்தி வெளியிடப்பட்டதும் தங்கள் இணையதளத்திலிருந்து லவ் ஜிஹாத் தொடர்பான எல்லா செய்திகளையும் நீக்கியுள்ளனர்.
Ler Mais

தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்

கோழிக்கோடு: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.




முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஓட்டுரிமையை பரிக்க வேண்டும். இதன் பிறகு இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற தொகாடியாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்திய தேசத்தின் இறையான்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் எதிரான இக்கருத்தை தெரிவித்துள்ளதால் பிரவீன் தொகாடியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தி வெளியிட்டுள்ளார். கொச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ கருத்துக்களையே கூறியுள்ளார். முஸ்லிம்களிடத்தில் இருந்து அடிப்படை உரிமைகள் பரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் தொகாடியா.

முஸ்லிம்கள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கறுப்பு பணங்கள் பெறப்பட்டு இந்துக்களின் நிலங்களை அபகரிப்பதாகவும், இந்து பெண்களை போலியாக காதலித்து மதமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார் தொகாடியா. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத இத்தகைய செய்திகளை கொண்டு மத மோதல்களை ஏற்படுத்தவே சங்கப்பரிவாரங்கள் முயற்ச்சி செய்து வருகின்றனர்.

மதசாற்பற்று ஒற்றுமையோடு வாழ நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் அதன் மூலம் இரு சமூகங்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரவீன் தொகாடியா இத்தகைய நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதே போன்று கருத்துக்களை வெளியிட்டு வரும் ஹிந்து ஐக்கிய வேதி, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மதச்சாற்பற்று இயங்கும் பிற இயக்கங்களும் தங்களுடைய மெளனமான நிலையை கைவிட்டு இத்தகைய வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டார்.
Ler Mais

சமூக நீதி மாநாட்டை சீர்குழைக்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்

 
புதுடெல்லி: டெல்லியில் ஸ்ரீராமசேனா, பகத்சிங் க்ராந்தி சேனா போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களின் சதித் திட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் கேரளாவைச் சார்ந்த சபரிமலை தந்திரி(முதன்மை சாமியார்)யின் பேரனான ராகுல் ஈஸ்வருக்கு பங்கிருப்ப்பதாக டெல்லி போலீஸின் உளவுத்துறை பிரிவு அறிக்கை அளித்துள்ளது.

பகத்சிங் க்ராந்தி சேனா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு கடந்த நவம்பர் 25-ஆம் தேதி டெல்லியில் நடத்திய ரகசிய கூட்டத்தில் ராகுல் ஈஸ்வர் பங்கேற்றுள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 26,27 தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்ற சமூகநீதி மாநாட்டை தடுக்க கன்னாட்ப்ளேசில் மோகன்சிங் ப்ளேஸ் கட்டிடத்தில் உள்ள இந்தியன் காஃபி ஹவுஸில் வைத்து கடந்த நவம்பர் 25-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ஸ்ரீராமசேனா மற்றும் பகத்சிங் க்ராந்தி சேனா ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் கூட்டம் நடத்தியுள்ளனர். இக்கூட்டத்திற்கு சமூக இணையதளமான ஃபேஸ்புக் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் இவ்விரு அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டம் துவங்கி ஒரு மணிநேரம் கழித்து ராகுல் ஈஸ்வர் இரண்டு ஸ்ரீராமசேனா உறுப்பினர்களுடன் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாநாட்டில் சிலரை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தவும், மாநாட்டு திடலுக்கு வெளியே போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முடிந்தவரை தாக்குதல்களை நடத்த தீர்மானித்துவிட்டு பின்னர் அத்திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
போலீஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்கள் உஷாராக இருந்ததால் இத்தாக்குதல் கைவிடப்பட்டது என கருதப்படுகிறது. நவம்பர் 26-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் மாநாட்டு திடலுக்கு முன்பாக ஸ்ரீராமசேனா, பகத்சிங் க்ராந்தி சேனா தீவிரவாதிகள் போராட்டம் நடத்தியபொழுது போலீசார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். பாப்புலர் ஃப்ரண்டின் ஆதரவாளர்கள் என பொய் கூறி மாநாட்டு திடலுக்கு உள்ளே நுழைய முயன்ற இருவரை பாப்புலர் ஃப்ரண்ட் வாலண்டியர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ரகசிய கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் ஈஸ்வர் பாப்புலர் ஃப்ரண்டை குறித்து பிறருக்கு விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஸ்ரீராமசேனா டெல்லி மாநில தலைவர் இந்தர் வர்மா, பகத்சிங் க்ராந்தி சேனா தலைவர் தேஜீந்தர் பால் சிங்பாக, பொதுச்செயலாளர் விஷ்ணு குப்தா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்ற இதர பிரமுகர்கள் ஆவர்.
சந்தீப் என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சரத் பவாரின் கன்னத்தில் அறைந்த ஹர்வீந்தர் சிங்கும் பகத்சிங்க் ராந்தி சேனாவை சார்ந்தவர் ஆவார். முன்னர் உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை கேமராவிற்கு முன்பு தாக்கியவர்கள் இந்தர்வர்மா, தேஜீந்தர் பால் சிங், விஷ்ணு குப்தா ஆகியோராவர். இவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக டிசம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் மேதாபட்கரும், சந்தீப் பாண்டேயும் சேர்ந்து நடத்தவிருக்கும் பேரணியை தடுப்போம் என ஸ்ரீராம்சேனா மற்றும் பகத்சிங் க்ராந்திசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
Ler Mais

முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச்சாலையா?

மாலேகான்: கடந்த 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபே-பராத் இரவு அன்று மாலேகானில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30ற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். மஹாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு 9 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு ஆதாரமும் இல்லாதிருந்தும் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


முஸ்லிம் இளைஞர்கள் எப்படி தங்களுடைய உறவினர்களையும் தன் சமூக மக்களையும் குண்டு வைத்து கொல்வார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பினர். கடந்த சில வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களும் இஸ்லாமோஃபோபியா என்ற கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றே சொல்லலாம். தற்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு மிக இலகுவாக ஆகிவிட்டது. எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அந்த குண்டுவெடிப்பில் யார் உயிரிழந்தாலும் முதலில் சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக போலீயான ஆதாரங்களை திரட்டுவது போன்ற அக்கிரமமான வேலையைத்தான் காவல்துறையினர் சில காலமாக செய்து வருகிறார்கள்.




இதே போன்ற நிலைதான் ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் போதும் நிகழ்ந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நேரத்தின் போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு உடனே 27 முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் விசாரணைக்கூட நேர்மையாக நடைபெறவில்லை. இரயில் எரிப்பு சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்ட மெளலானா ஹாஜி உமர் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை என்ற போதிலும் சில முஸ்லிம் இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை அதிகாரிகள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பதிவிக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.


கடந்த 2006ஆம் ஆண்டு நந்தித்தில் பஜ்ரங்தளைச்சேர்ந்த இரு தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். ஊழியனான ராஜ்கொந்தவார் என்பவனின் வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடித்துச்சிதறி பலியானார்கள். இத்தகைய செயலில் ஈடுபட்டது இந்துத்துவ இயக்கங்களைச்சார்ந்தவர்கள் தான் என்று தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் நேர்மையாக நடந்து கொண்ட ஹேம்ந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி புலன் விசாரணையில் ஈடுபட்டு மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்தார். ஆர்.எஸ்.எஸ்-ன் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், சுவாமி தயானந்த பாண்டே, முன்னால் இராணுவ அதிகாரி என பல ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கைது செய்தார். ஆனால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதலின் போது ஹேமந்த் கர்கரே படுகொலை செய்யப்பட்டார்.

இது நாள் வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதனால் உண்மை குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து கொண்டு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பினும் அவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து என்றோ விலகிவிட்டார்கள் என்றும் அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை மறுத்துவருகிறது. குண்டுவெடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று என்னதான் ஆர்.எஸ்.எஸ் கூவினாலும் அசிமானந்தாவின் வாக்குமூலம் அவர்களுக்கு செருப்படியாய் விழுந்திருக்கிறது. அசிமானந்தாவ் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஊழியன் என்றும், வி.ஹெச்.பி.காக பல ஆண்டுகளாக பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்ற உண்மையை அவர்களால் மறைக்கமுடியவில்லை. தாமே மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் இன்ன பிற சம்பங்களிலும் ஈடுபட்டதாக நீதிபதியிடமே வாக்குமூலம் அளித்தார் அசிமானந்தா. இன்னும் சில ஆர்.எஸ்.எஸ்-ன் ஊழியர்களையும் காட்டிக்கொடுத்தார்.


ஒரு குற்றமும் செய்யாமல் கிட்டத்தட்ட 6 வருடங்களாக சிறையில் தனது இளமையை துலைத்துவிட்டு தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் அந்த 9 முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை நிலை என்னவாகும்?

தொடர்ந்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் ஈடுபட்டுவருகிறார்கல் என்பது தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் எங்கு குண்டுவெடித்தாலும் முஸ்லிம் இளைஞர்களையே குறி வைத்து கைது செய்வது சரியான் முறைதானா? 


எப்போது இத்தகைய நிலை மாறும்?


சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று அரசு வெறும் வாய்ஜாலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதற்காக எத்துனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது? வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கக்கூடிய "சமூக நல்லிணக்கம்"  என்று செயல்வடிவம் பெறும்?


தாங்கள் ஈடுபட்டு வரும் இந்த ஒரு தலைபட்சமான செயல்பாடுகளினால் உண்மை குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டே வருகிறார்கள். இதனால் தேசத்திற்கே ஆபத்து என்பதை எப்போது இந்த காவல்துறை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள்போகிறார்கள்?

மதத்தின் பெயரால் அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் அட்டூழியங்களை முடக்கப்போவது யார்?

இத்தகைய கேள்விகளுக்கு யாரிடத்தில் பதில் இருக்கிறது......?

கட்டுரை : முத்து



Ler Mais
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010