புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தொடரும் குண்டு வெடிப்புகள், தீவீரவாதி யார்?

8 பிப்ரவரி, 2011

பிப்ரவரி 2002, குஜராத் இனபடுகொலை:

குஜராத் இனப்படுகொலையில் முஸ்லிம்களை கொன்று குவிக்க தேவையான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை தனது துப்பாக்கி தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டன என தெஹல்கா வீடியோ முன்பு கோத்ரா பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரேஷ் பட் வாக்குமூலம்.


ஏப்ரல் 6, 2006, நந்திக் குண்டுவெடிப்பு 1:

மஹாரஷ்டிரா மாநிலம் நந்திக்கில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது
ஹிமான்ஷூ பான்சே, நரேஷ் ராஜ்கொண்ட்வார், ஆகிய 2 பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் வெடித்துச் சிதறி பலியானார்கள். பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த பலர் கைது.



செப்டம்பர் 8, 2006 மாலேகான் குண்டுவெடிப்பு 1:

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது பள்ளிவாசலில் குண்டு வைத்தனர் பஜ்ரங்தள் பயங்கரவாதிகள். குண்டு வெடிப்பில் போலி தாடியுடன் பஜ்ரங்தள் தீவிரவாதிகள் சடலம் மீட்பு.


பிப்ரவரி 10, 2007, நந்திக் குண்டு வெடிப்பு - 2:

மீண்டும் நந்தித்தில் குண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது அமில் கந்த்வார் என்ற பஜ்ரங்தள் தீவிரவாதி வெடித்துச் சிதறி பலியானான். மாணிக்ராவ் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.


ஜனவரி 24, 2008, தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மற்றும் பஸ் ஸ்டாண்டு குண்டுவெடிப்பு:

தென்காசி பஸ்ஸ்டாண்டிலும், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும் குண்டு வைத்த ரவி பாண்டியன், குமார் என்ற கே.டி.சி குமார், நாராயணமூர்த்தி, முருகன், வேல்முருகன், பாலமுருகன், மாசானம் என்ற மகேஷ், சிவா என்ற சிவானந்தம் ஆகிய ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னனி பயங்கரவாதிகள் கைது.
நந்தித்தில் வெடிகுண்டு தாயாரித்தது போன்றே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், ரவி பாண்டியனின் கேபிள் டி.வி அலுவலகத்திலும் வெடிகுண்டு தயாரிப்பு நடத்தியது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் அணிவது போன்ற குல்லாக்களை விட்டுச்சென்று வழக்கை திசை திருப்ப நடந்த முயற்சித்தது முறியடிக்கப்பட்டது.


மே 31, 2008, தானே குண்டுவெடிப்பு:

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் விஷ்ணுதாஸ் பாவே ஆடிட்டோரியம், கத்தாரி ரங்யாதன் ஆடிட்டோரியம், மும்பை வினோபாவே தியேட்டர் ஆகிய‌ இடங்களில் குண்டு வெடித்தது. ஹிந்து ஜனஜக்ருதி சமிதி (HJS) மற்றும் சனாதன் சான்ஸ்தா ஆகிய இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த மாங்கேஷ் டிங்கர் நிகாம், ரமேஷ் ஹனுமனி கத்தாரி, சந்தோஷ் ஆங்ரே, விக்ரம் பாவே, ஹரிபாவே தேவ்கர், ஹேமந்த் சால்கே ஆகியோர் கைது.


நவம்பர் 10, 2008, கண்ணூர் குண்டுவெடிப்பு:

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், செருவாஞ்சேரியில் குண்டு தயாரித்துக்கொண்டிருந்த‌ திலீபன், பார்த்திபன், ஆகிய 2 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வெடித்துச்சிதறி பலியாயினர்.


தானே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று மாஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானிலும், குஜராத் மாநிலம் மொடாஸாவிலும் குண்டு வெடித்தது. இந்த 2 குண்டு வெடிப்புகளுமே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைப்பெற்றது என்பதும், முஸ்லிம்கள் நோன்பிருக்கும் புனித ரமலான் மாதத்தில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாக்ரன் மஞ்ச் உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ தீவிரவாத அமைபுகளைச்சேர்ந்த பிரக்யா சிங் தாக்கோர், சமீர் குல்கர்னி, அஜய் ஏக்நாத் ராய்க்கர், ராஜேஷ் தத்தாத்ரேயா தாவ்டே, ஜக்தீஷ் சிண்டாமன் மாந்த்ரே, மடாதிபதி மகந்த் தயானந்த பாண்டே, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பிரக்யா சிங் தாக்கோர் ஆர்.எஸ்.எஸ்ன் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்திய பரிஷத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும், வி.ஹெச்.பி யின் பெண்கள் அமைப்பின் துர்கா வாஹினியின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார் என்பதும், சமீர் குல்கர்னி ஏ.பி.வி.பியின் உறுப்பினராகவும், ஃபாசிஸத்தின் இந்தியப் பிதாமகன் வீர் சாவர்க்கர் உருவாக்கிய அபிநவ் பாரத் என்ற அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட பஜ்ரங்தள் மற்றும் சங்பரிவார தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு பயிற்சியளித்தது நமது ராணுவ அதிகாரிகள் என்ற உண்மையும் தற்போது வெளியாகியுள்ளது. ஆம்! உண்மையிலேயே இது ஒரு தேசபக்தி சேவைதான்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய ராணுவ உளவுப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி ரமேஷ் உபாத்யாயா, மற்றொரு ராணுவ அதிகாரி மேஜர் பிரபாகர் குல்கரினீ, இராணுவத்தின் உயர் பதவியில் உள்ள லெப்டிணண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத், ஓய்வு பெற்ற கர்னல் எஸ்.எஸ் ராய்க்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கைதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ் ல் உள்ள மற்ற ராணுவ சகாக்களும்தான் சங்பரிவாரங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்துள்ளனர்.
இவ்வாறு 115 பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்ததாக புனேயில் உள்ள கடற்படை கேப்டன் சனத் குமார் மித்தல் பாத்தே என்ற தீவிரவாத தடுப்பு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த 115 பேரில் இருவர்தான் நந்தித் குன்டு வெடிப்பின்போதுதான் பலியானார்கள் என்று நந்தித் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சாட்சியான பாத்தே குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகர் குல்கர்னி நாசிக்கில் போன்ஸாலா மிலிட்டரி பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இவர் சங்பரிவார சாணக்கியர் என்று வர்ணிக்கப்படுகிறார். பா.ஜ.க வுடைய முன்னாள் இராணுவத்தினர் குழுவிற்கு தலைவராக இருந்துள்ளார். இவர் நடத்தும் போன்ஸாலா மிலிட்டரி ஸ்கூல் என்ற தனியார் இராணுவப் பள்ளி ஹிந்து மிலிட்டரி எஜுகேஷன் சொஸைட்டியால் நிர்வகிக்கப்பட்டுகிறது என்பதை கவனிக்க வேண்டும். குண்டு வெடிப்பு என்பது இந்துத்துவத்தின் திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவ ஃபாசிஸத்தின் பயங்கரவாத‌ சதிச்செயல்கள் நீண்ட வரலாற்று பின்புலம் கொண்டவை. ஆம்! 1934 ஆம் ஆண்டே வெடிகுண்டு வீசி காந்தியை கொலை செய்ய முயன்றார்கள் ஆர்.எஸ்.எஸ்ன் பயங்கரவாதிகள். இதில் காந்தி தப்பவே 1948ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் மீண்டும் வெடிகுண்டு வீசி காந்தியை கொல்ல முயன்றார்கள். இதிலும் காந்தி தப்பினார். மதன்லான் பேஷ்வா உட்பட பல ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் இதில் கைது செய்யப்பட்டார்கள். இறுதியாக 1948 ஜனவரி 30ம் நாள் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி தனது கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றான். இதன் மூலம் முஸ்லிம்கள் மீது பழி சுமத்த சங்பரிவார்களால் போடப்பட்டிருந்த திட்டம் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரால் தவிடுபொடியாக்கப்பட்டது.

முன்பெல்லாம் கோயில்களில் குண்டு வைத்து விட்டு முஸ்லிக்களின் மீது பழிபோட்டு வந்தனர் சங்பரிவார பயங்கரவாதிகள். சமீபகாலமாக இந்த நிலை மாறி பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அதில் முஸ்லிம்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றுவிட்டு, வெடிகுண்டு பழியையும் முஸ்லிம்கள் மீதே போடுவது என்பதுதான் இந்த சங்பரிவார்களின் 21ம் நூற்றாண்டிற்க்கான புதிய திட்டம் என்பது தெளிவாகிறது.

வெளியே தெரிந்த குண்டுவெடிப்புகள் இவை. உண்மைகள் வெளிவராமல் இவர்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் இந்த நாட்டில் ஏராளமாகவும், தாராளமாகவும் இருக்கலாம். அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளாக நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விரும்புகிறது.

எனவேதான் நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வளர்கள் ஆகியோர் அடங்கிய சுதந்திரமாக செயல்படக்கூடிய ஓர் விசாரணை குழுவை அமைத்து 1993 ஆம் ஆண்டு முதல் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் பாரபட்சமின்றி நீதி விசாரணைக்கு உட்படுத்தி, உண்மையை வெள்ளை அறிக்கையாக‌ மக்கள் மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

ஒன்றுபடுவோம்! முறியடிப்போம்! வலிமைபெறுவோம்!

இந்து முஸ்லிம் கிருஸ்தவ‌ மற்று அனைத்து சமூக மக்களும் ஒன்றுபடுவோம்!

ஃபாசிஸ பயங்கரவாத சக்திகளின் பிரிவினைவாத சூழ்ச்சிகளை முறியடிப்போம்!

வேற்றுமையில் ஒற்றுமை பேணுவோம்!
நம் தேசத்தை வலிமைப்படுத்துவோம்!

                             பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010