புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரம்

8 பிப்ரவரி, 2011


வரதட்சனை ஒழிப்போம்! பெண்ணினம் காப்போம்! எனும் கோஷத்தோடு வரதட்சணை ஒரு சமூக தீமை என்றுணர்த்தும் விதமாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் இம்மாதம் டிசம்பர் 2010, 16 முதல் 30 வரை வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரம் தமிழக முழுவதும் நடத்தியது.

இதன் துவக்க நிகழ்ச்சியாக 16.12.2010 வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை ஐஸ்ஹவுஸ் ஷேக்தாவூது தெருவில் மாநிலத் தலைவர் மெளலானா எம். அப்துல் காதர் முனீரி அவர்களின் தலைமையில் ஆல் இந்தியாம் இமாம்ஸ் கவுன்ஸில் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, இப்பொதுக்கூட்டத்தில் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையிலும், டிசம்பர் 25 அன்று திண்டுக்கல்  மாவட்டம் சித்தையன் கோட்டையிலும், டிசம்பர் 26 அன்று கோவை மாவட்டம் கோட்டை மேடு பகுதியிலும், டிசம்பர் 28 அன்று தஞ்சை மாவட்டம் ராஜகிரி பண்டாரவடையிலும், டிசம்பர் 29 அன்று மதுரையிலும், இறுதியாக தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களிலும் பொதுக்கூட்டம் மிக எழுச்சியோடு நடைப்பெற்றது.

இக்கூட்டங்களில் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அப்போதைய மாநில துணைத்தலைவர் ஜனாப். .எஸ் இஸ்மாயீல் மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஜனாப் ரபீக் அஹ்மது மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வரதட்சணை எந்தளவுக்கு சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது எனும் கருத்தை வலியிறுத்தி உரை நிகழ்த்தினார்கள்.


சென்னையில் நடைப்பெற்ற துவக்க நிகழ்ச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில் தேசிய செயலாளர் மெளலானா இஹ்திராமுல் ஹக் ரஷாதி அவர்களும், கடலூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா அப்துர் ரஹ்மான் பாகவி அவர்களும், இறுதியாக பெரியகுளத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில் தேசிய செயலாளர் மெளலானா அப்துர் நாசர் பாகவி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வரதட்சணை எதிர்ப்பு பிரச்சார  பொதுக்கூட்டத்தை மெருகூட்டினர்.

சென்னையிலும், பண்டாரவடையிலும் ஆலிம்கள் கலந்துகொண்ட பேரணியும் நடைப்பெற்றது. தமிழகத்தில் பரவலாக நடைப்பெற்ற வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரத்தில் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கெடுத்து வரதட்சணைக்கு எதிராக புதிய அத்யாயம் படைக்க சபதமெடுத்து சென்றது கவனத்தில் கொள்ளத் தக்கவையாகும்.


இப்பிரச்சார பொதுக்கூட்டங்களில் இறுதியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில் மூலம் எடுக்கப்பெற்ற தீர்மானங்கள்.

1.       திருக்குர் ஆன், நபிகளாரின் வழிமுறை இவைகளுக்கு எதிரான, மேலும் கண்ணியமாக பேணப்பட வேண்டிய பெண்களை சந்தைப் பொருளாக்கி, சீரழிக்கும் வரதட்சணை என்னும் கொடிய புற்று நோயை ஒழித்திட ஆலிம் இமாம்கள், அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், மத்ரஸா கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து மக்களையும் போராட்ட களத்திற்க்கு அழைக்கிறது ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில்.

மஹர் தொகையினை கடனாகவோ, அல்லது 501, 1001 என்று அற்பதொகையை பெண்ணுக்கு நிர்ணயிக்கும் ஆண்கள், பல லட்சம் பெறுமானமுள்ள பணம், நகைகள், வாகனங்களை பெண்ணிடம் கேட்கும் இழிவான திருமணங்களை ஆலிம்கள் நடட்தி வைக்கக்கூடாது என் ஆல் இந்தியாம் இமாம்ஸ் கவுன்ஸில் கேட்டுக்கொள்கிறது.

பெண்சிசுக்கொலை, கருக்கலைப்பு, முதிர் கன்னிகள், விபச்சாரம், விவகாரத்து, அந்நிய ஆடவர்களுடன் திருமணம் செய்து "முரதத்" ஆகுதல் போன்ற சமூக குற்றங்கள் அதிகரிக்க காரணமாய் இருக்கும் வரதட்சணை என்ற குற்றத்திற்க்கு கடும் சட்டங்களை இயற்ற வேண்டுமென ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில் ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறது.

மார்ச் 8 உலக பெண்கள் தினம் என்பதை வரதட்சணை எதிர்ப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்ஸில் கேட்டுக்கொள்கிறது.

நன்றி : விடியல் வெள்ளி

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010