புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சிறுபான்மை முன்னேற்றத்திற்க்கான ஆலோசனைக்கூட்டம்

8 பிப்ரவரி, 2011

ஆஜம்கர்ஹ்: கடந்த 6ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று ஷிப்லி அகாடமியின் அரங்கில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்காக  அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சர்ச்சார் கமிட்டி அறிக்கை சில வருடங்களுக்கு முன்னால் வெளியாகியது. இவ்விரு அறிக்கை வெளியான பின்பு அதற்க்கான என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை பற்றிய முக்கிய விவாதங்கள் நடைப்பெற்றது. சகோதரி சுப்ஷினி அலி மற்றும் டாக்டர் சல்மான் சுல்தான் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


தொடக்கத்தில் உரையாற்றிய டாக்டர் சல்மான் சுல்தான் அவர்கள் கூறியதாவது " ஒரு சாலையில் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டு நின்ற சிறுமியை  அங்கிருந்த காவல் துறை அதிகாரி உதவி புரிந்து அந்த சிறுமி போய் சேர வேண்டிய இடத்திற்க்கு பத்திரமாக கொண்டு போய் சேர்த்தார்". இதில் அந்த சிறுமியை சிறுபான்மை மக்களாகவும், உதவி புரிந்த காவல் துறை அதிகாரியை பெரும்பான்மை மக்களாகவும் ஒப்பிட்டு பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்கள் தங்கள் நாட்டிறுக்கு திரும்பி வரும்போது அவர்கள் இங்கே மோசமாக நடத்தபடுவதாக ஆதங்கத்துடன் எடுத்துக்கூறினார்.

பஸ்மந்தா மஹாஜின் தலைவர் நிஜார் அஹமது கூறுகையில் சர்ச்சார் கமிட்டி அறிக்கையில் முஸ்லிம்கள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டு அவர்களுடையை பிரச்சனைகளை தெளிவாக எடுத்துக்ககூறப்பட்டுள்ளதாக கூறினார். ராஜேந்திர சர்ச்சார் தன்னுடைய அறிக்கையில் ஒரு சாரார் முஸ்லிம்களை நல்ல கல்வித்திறன் பெற்றவர்களாகவும், வியாபார ரீதியில் நல்ல நிலையில் இருப்பதாகவும்  ஆனால் அரசியல் ரீதியான முன்னேற்றத்தில் பிந்தங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். எந்த இடத்தில் முஸ்லிம்கள் முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றார்களோ அங்கே தான் அவர்கள் மதக்கலவரங்களால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கழைகலகத்தின் ஆசிரியர் டாக்ட்ட பிரசன்ஜீத் கூறுகையில் முஸ்லிம்களை வகையாக பிரிப்பது மிகவும் கண்டிக்கதக்கது என்றார். மேலும் முஸ்லிம்கள் சமய சார்பற்ற இந்திய நாட்டை உருவாக்குவதற்க்காக போராட முன்வரவேண்டும். அயோத்தியில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட அநீதியையும் குஜராத்திலே அவர்களுக்கு ஏற்ப்பட்ட கொடுமைகளையும் ஒரு போதும் அவர்கள் மறந்துவிடக்கூடாது என்று கூறினார். இந்திய திரு நாட்டில் உண்மையான ஜன நாயகத்தை உருவாக்குவதற்க்கான போராட்ட கலத்தில் முஸ்லிம்கள் பங்கு கொள்ளவேண்டும் என்றும் ஹிந்து ராஷ்டிரா என்ற அந்த கிரிமினல் கொள்கையை வளரவிடக்கூடாது என்றும் கூறினார். சிறுபான்மையினரின் வள்ர்ச்சிக்காக ரூபாய் 100.00ல் வெறும் 0.32 மட்டுமே செலவழிக்கப்படுவதாக கூறினார். சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக அதிக அளவில் நிதி ஒதுக்குவதன் மூலம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இத்தகைய கமிட்டியின் அறிக்கையை அமுல்படுத்த ஏதுவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மேற்கு வங்காள மாநிலத்தின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறுகையில் 1872 முதல் 2007 வரை முஸ்லிமகளுடைய வாழ்க்கை ஒரு சோகமயமானது என்றார். மேலும் இந்தியாவில் வாழக்கூடிய 14 கோடி முஸ்லிம்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசாங்கத்தால் இயங்க முடியாது என்றும் கூறினார். இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் நமக்கு வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது என்றும் தங்களுடைய உரிமைகளை பெறுவதற்க்காக முஸ்லிம்கள் போராடவேண்டும் என்று கூறினார். மேற்க்கு வங்காளத்தில் தன்னுடைய அரசு சிறுபான்மை மக்களுக்காக பல பணிகளை செய்து வருவதாகவும் தன்னுடைய மாநிலத்தில் மட்டும் சிறுபான்மை மக்களுக்காக ரூபாய் 610 கோடி செலவிடப்பட்டு வருவதாகவும் கூறினார். சகோதரி சுபாஷ்னி அலி நன்றியுரை ஆற்ற கூட்டம் நிறைவு பெற்றது.


நன்றி: TWO CIRCLES
தமிழில்: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010