புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

திண்டுக்கல்லில் காவல்துறையின் அராஜகம், மாநிலத் தலைவர் கைது!

21 மார்ச், 2011


திண்டுக்கல்லில் பயங்கரவாத எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுப்பு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது.


கடந்த 2010 டிசம்பர் 6 முதல் 2011 ஜனவரி 30 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. தமிழகத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களி நடத்தப்பட்டன. இந்த தேசத்தின் இரு பெரும் பயங்கரவாதச் செயல்கள், ஒன்று தேசத்தந்தை மகாத்தமா காந்தி படுகொலை, இரண்டாவது மாபெரும் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமுமான பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது. இந்த இருபெரும் பயங்கரவாத செயல்கள் தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நிறைவு தினமான ஜனவரி 30 பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.ஆனால் இந்த பயங்கரவாத எதிர்பு பொதுக்கூட்டத்திற்கு அன்றைய தினம் திண்டுக்கல் காவல்துறை அனுமதி மறுத்து பேரணி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் உட்பட பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையின் அந்த அராஜகத்தை கண்டிக்கும் விதமாகவும் திண்டுக்கல் காவல்துறையின் முஸ்லிம் விரோதபோக்கை கண்டித்தும் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் 20.03.2011 திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் பேரணி மற்றூம் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் தடை செய்த காவல்துறை பேரணி செல்ல முயன்ற மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் நூற்றுக் கணக்கானொரை கைது செய்துள்ளது.

காவல்துறையின் இச்செயலை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் திண்டுக்கல் காவல்துறையின் இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. நீதிக்கான போராட்டத்திலும், காவி பயங்கரவாதத்தை மக்களிடையே தோலுரித்துக் காட்டும் முயற்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. முஹம்மது யூசுப், பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் ஏ. கைசர் ஆகியோரும் மாநிலத் தலைவருடன் கைதாயினர்.

1 விமர்சனங்கள்:

Mohammed சொன்னது…

என்ன ஒரு அநியாயம் நடக்கிறது இந்தியா என்பது இந்தியர்களுக்கு உண்டான நாடா?.............இல்லை இந்துக்களுக்கு (பாசிஸ்டுகளுக்கு)உண்டான நாடா?என்பதில் இன்னும் சந்தேகம் வலுத்துக்கொண்டே தான் போகிறது.................முஸ்லிம்கள் தனது சொந்த உரிமை நிறைவேறாமல் இருப்பதால் இன்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள் இதை காவல் துறை என்னும் (காக்கி)புகுந்த துறை தடுத்து நிறுத்தி அதற்க்கு தடையும் விதித்து போராட்டம் செய்த மக்களை கைது செய்கிறதே....................இது தான் நெஞ்சுக்கு நீதியா?........................இன்ஷா அல்லாஹ் இந்த அவலங்கள் எல்லாம் நீங்க வேண்டுமா?சகோதரர்களே வரும் சட்ட மன்ற தேர்தலில் SDPI க்கு அவர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் ........இன்ஷா அல்லாஹ் நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்......................

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010