நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் |
சென்னை: SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) சார்பாக துறைமுகம் தொகுதியின் வேட்பாளர் அறிமுக விழா மற்றும் அத்தொகுதி செயல்வீரர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது.
வருகின்ற தமிழக் சட்டமன்றத் தேர்தலை எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்தன்மையுடன் SDPI 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதில் ஒரு தொகுதியான சென்னை துறைமுகம் தொகுதியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கும் வகையிலும், அத்தொகுதியின் செயல்வீரர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியையும் நேற்று மாலை 7.00 மணி அளவில் சென்னை ராயபுரத்தில்
மாநிலத் தலைவர் அவர்களுடன் துறைமுகம் தொகுதி வேட்பாளர் அமீர் ஹம்ஜா |
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மா நில செயற்குழுவால் முடிவு செய்யப்பட்டு, வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா அவர்கள் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு அவரை அனைவர் முன்பும் அறிமுகம் செய்து வைத்தார் மா நில தலைவர். இறுதியாக மா நில
தலைவர் உரையாற்றும்போது, எஸ்.டி.பி.ஐ-ன் வளர்ச்சி இன்று ஆளும் அதிகார வர்க்கட்திற்கு பெறும் தலைவலியாக இருக்கிறது என்றும், தொடங்கப்பட்டு 1 1/2 வருடங்களே ஆனாலும் இந்தியாவில் தவிர்க்கமுடியாத சக்தியாக எஸ்.டி.பி.ஐ மாறி வருவதை சுட்டிக்காட்டினார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை தைரியத்துடனும் உத்வேகத்துடன் சந்திக்க வேண்டும், வெற்றியோ தோழ்வியோ எதுவாயினும் மனம் தளர்ந்து விடாமல் சமூகத்திற்காக பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கும் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி |
இறுதியாக ஆர்.கே நகர் தொகுதி செயலாளர் ரத்தினம் அவர்கள் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
6 விமர்சனங்கள்:
May Allah (sw) give you the success and guide you to be in a right path in serving the people.
Harbour Rockzz ,.,. Ameer is t ameer for Harbour Insha allah ,.,.
iuml, mmk illatha thokithela nindraal parava illai. ini thuraimukam, ramanad constituency non-muslim jaikka vaaipu kodukireerkal.
அன்பு சகோதரரே! முதன் முதலில் வேட்பாளரை அறிவித்தது எஸ்.டி.பி.ஐ தான். இதனால் வரை பல முறை துறைமுகம் தொகுதியில் தி.மு.க சார்பில் முஸ்லிம் அல்லாத நபர் தான் நிருத்தப்பட்டு வந்தார். ஆனால் இந்த முறை எஸ்.டி.பி.ஐ போட்டியிடுகிறது என்பதை அறிந்து கொண்டு தி.மு.க முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கியுள்ளது. அதிலும் அவர்கள் தி.மு.க சின்னத்தில் தான் போட்டியிடவேண்டுமாம்! வேண்டுமென்றே முஸ்லிம்களின் ஓட்டை பிரிப்பதற்கு தி.மு.க செய்யும் சதியே இது!
தங்களது கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். முஸ்லிம் லீக் தான் முஸ்லிம்களின் ஓட்டை பிரிக்க நினைக்கிறது. எஸ்.டி.பி.ஐ அல்ல்....
குப்பைகளை சுத்தம் செய்தது முதல், சாக்கடைகளை சுத்தம் செய்தது வரை பல சமூக பணிகளை செய்தவர்கள் எஸ்.டி.பி.ஐ யினர். நீங்கள் துறைமுகம் பகுதியில் வசிப்பவராக இருந்தால் உங்களுக்கே தெரியும். துறைமுகம் தொகுதியில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் லீக் கட்சியினரை விட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தான் பொருத்தமானவர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்:
சகோதரர்கள் கவனத்திற்கு............கருத்து சொல்லும் போது நாம் எதை பற்றி கருத்து சொல்கிறோம் என்பதையாவது சற்று தெரிந்து பின்பு கருத்து சொல்லவும்..............இந்த துறைமுகம் தொகுதியில் நடந்த பிரச்சனைக்கு களம் கண்டது யார்?நீங்கள் இன்று தூக்கி பிடிக்கும் முஸ்லிம் லீக் என்று எண்ணுகிறீர்களா?இல்லை...........அதுமட்டுமல்லாமல் எல்லோரும் இன்று ஒரு கூடி நின்று SDPI நீங்கள் வேறு தொகுதியில் நின்று இருக்கலாம் என்று கருத்து சொல்கிறீகளே இந்த கேள்வி எல்லாம் வர கூடாது என்று தான் SDPI தொகுதியை அறிவிக்கும் முன்பாகவே சமுதாய இயக்கங்களை அணுகி அவர்களின் கருத்தையும் அவர்கள் தேர்வு செய்திருக்கும் தொகுதியை கேட்டு பின் அறிவிக்கலாம் என எண்ணினார்கள் ஆனால் நமது சமுதாய தலைவர்களிடம் இருந்து வந்த பதில் என்ன தெரியுமா?இது தான் நாங்கள் கிழக்கு ஒன்று மேற்கு ஒன்று தெற்கு ஒன்று வடக்கு ஒன்று................. என உப்பு சப்பு இல்லாத பதிலை கொடுத்தார்கள் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்?நீங்கள் சொல்வதை பார்த்தால் தேர்தல் முடிந்த பிறகு தான் SDPI தொகுதியை அறிவிக்க வேண்டும் போல தெரிகின்றது.................
கருத்துரையிடுக