தமிழ் நாடு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவைஉருப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஜாஃபர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிராக மாற்றுக்கருத்து கொண்டு பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தொகுதிக்கான பங்கீடு நடந்தபொழுது ஆரம்பத்தில் 3 தொகுதிகளை முஸ்லிம் லீக்கிற்காக ஒதுக்கிய கலைஞர் கருணாநிதி பின்னர் தங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் லீக்கிற்கு வழங்க்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை திரும்பப் பெற்று கொண்டது. தி.மு.க வின் இந்த செயல்பாட்டை சிறிதும் கண்டிக்காத முஸ்லிம் லீக் அதை அப்படியே ஏற்றுக்கொண்டது. இதனால் பலருக்கும் அக்கட்சியின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் ஏற்பட்டது. முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவிற்கு தலைவியாக இருந்து வரும் ஃபாத்திமா முஜாஃபர் அவர்கள் தாங்களாகவே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில், கட்சியின் இந்த பலகீனத்தை கண்டித்தும், தி.மு.க அரசை எதிர்த்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் சேய்யப்போவதாக அறிவித்தார். ஃபாத்திமா முஜாஃபர் அவர்களுடைய இந்த செயலுக்கு பின்னர் தான் கட்சியிலுள்ள மற்றவர்களும் இதனை ஆதரித்து கட்சியின் தலைமைக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இதன் பின்னர் முன்னர் கூறப்பட்டது போன்று முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகளை மீண்டும் ஒதுக்கியது. இத்தகைய செயலின் காரணமாகத்தான் ஃபாத்திமா முஜாஃபர் அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காலம் சென்ற முஸ்லிம் லீக்கின் தலைவர் ஏ.கே.ஏ. அப்துல் சமத் அவர்களின் மகள் தான் இந்த ஃபாத்திமா முஜாஃபர். முஸ்லிம் லீக் கட்சிக்காக அயராது உழைத்தவர் ஆவார். நல்ல கல்வித்திறன் கொண்ட சகோதரி, ஆங்கிலம், தமிழ், உருது போன்ற மொழிகளை சரலமாக பேசக்கூடியவர். இவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டது தமிழக முஸ்லிம்களில் பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.
கட்சியின் இந்த செயல்பாட்டை கண்டித்தும், அவர் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். காயிதே மில்லத் அவர்களுடைய காலத்திலும், அப்துல் சமத் அவர்களுடைய காலத்திலும் இருந்த பெருமையும், கவுரவமும் தற்போது இல்லை, மேலும் அரசியல் கட்சிகளிடமும் அடிமை போன்று இருந்து கொண்டு அவர்கள் கூறும் எல்லாவற்றிற்கும் செவி சாய்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? என்றும் இழந்த பெறுமைகளை மீட்பதற்காக போராடுவது கட்சியின் கொள்கைக்கு எதிரானாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியிலும் போட்டியிடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சகோதரி ஃபாத்திமா முஜாஃபர் அவர்களு மேலும் கூறும்போது, "அடக்குமுறைகளுக்கு எதிராகவும், முஸ்லிம் லீக்கின் கவுரத்தை பாதுகாப்பதற்காக போராடும் போது ஷஹீத் அடையும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதற்கு எப்போதும் தயாராக இருக்கிறதாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறியதைப்போல் ஜிஹாதிலேயே மிகப்பெரிய ஜிஹாத் சத்தியத்திற்காக அசத்தியத்துடனும், அநீதியான ஆட்சியாளர்களை எதிர்த்து போராடுவதே ஆகும். எல்லாஹ் வல்ல அல்லாஹ் எனக்கு சத்தியத்தை உரைக்கக்கூடியத தைரியத்தை கொடுத்திருக்கிறான். இரட்டை நிலைபாடு இல்லாத முனாஃபிக் தனத்திலிருந்தும் அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என்று கூறினார்.
செய்தி: முத்து

1 விமர்சனங்கள்:
முஸ்லிம் லீகு கட்சி கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு பிறகும் அப்துல் சமத் சாஹிபுக்கு பிறகும் அதன் மதிப்பை அதன் சிறப்பை முஸ்லிம் சமூகத்திடம் இழந்து விட்டது . தமிழகத்தில் திராவிட கட்சிகளிடமும் கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யுனிஸ்டுகளிடமும் சீட்டுக்கு பேரம்பேசி தன் வலிமையை இழந்துவிட்டது. அதன் வெளிபாடுதான் அண்மையில் கேரள மாநில முஸ்லிம் லீகு தலைவர் ஹைதர் அலி சிஹபுடீன் தங்கல் முஸ்லிம்களை திட்டமிட்ட கலவர்களின் மூலமும் குண்டுவேடிபுகளின் மூலமும் கொன்று குவித்துவரும் ஆர் எஸ் எஸ் சங்கபரிவாரங்களுடன் கூடி குலாவி முன்பு மேற் சொன்ன கட்சிகளிடம் முஸ்லிம் களை அடகு வைத்து பதவிசுகம் அனுபவிபவிதவர்கள் ,
அந்த பதவியை அடைவதற்கும் தங்கள் வியாபர வளங்களை பாதுகாக்கவும் ஏதனையும் செய்வர் இந்த சுயநலமிகள்.
காயிதே மில்லத் கட்டிக்காத்த முஸ்லிம்களின் (லீகு ) கண்ணியம் இன்று தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மைஇன அணியாக சிறைபடுதபட்டுள்ளது . பதவிக்காக கலைஞர் பின் சுற்றும் சுயனலமிகளுக்கு பதவி வாய்ப்பு வழங்க பயன்படும் கொல்லைபுற வழியாக லீகு இன்று ஆக்கப்பட்டுள்ளது . தேர்தல் நேரத்தில் கலைஞர் தாசன்கள் அவர் கரம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் கட்சிகளை இணைத்தால் அடுத்தவர் முதுகை கொண்டு சவாரி வழங்குவார் பிரிவினை சாணக்கியன் கலைஞர் .
இஸ்லாமிய சமுதாயத்தை பற்றி சிந்திகாதோர் பத்து பேர் சேர்த்து இயக்கம் ஆரம்பித்து கலைஞர் தலைமையில் ஏதேனும் இளிச்சவாயர்கள் கூடாரத்தில் கொண்டுபோய் இணைத்தால் நிச்சயம் ஒரு சீட் உறுதி , தாய் சபை சகோதர சகோதிரி களுக்கு ஏமாற்றமும் நிச்சயம் .சமுதாய உணவாளர்கள் சகோதரியை போன்று தாய் சபையில்ரிந்து உரிமை முழக்கம் இட்டால் இது தான் நடக்கும் , சமுதாய உணர்வாளர்கள் இருக்க வேண்டிய களம் எது சிந்திக்க வேண்டிய நேரம் . சகோதரி முடங்கிவிடலாமல் அவர் இணைய வேண்டிய போராட்ட களம் எது என்று சிந்தித்து பயணத்தை தொடர வாழ்த்துகின்றேன்
பயத்தில் இருந்து விடுதலை அடைய அரசியலை நமதாக்க வாழ்த்துகின்றேன்
கருத்துரையிடுக