புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாரிமுனை பள்ளிவாசல் தகர்ப்பும்! த.த.ஜ விடும் புருடாவும்!

30 மார்ச், 2011

சென்னையில் பட்ட பகலில் மஸ்ஜிதை ஆக்கிரமிக்க முயற்சி முறியடிப்பு!


கடந்த 29-3-11 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே 7 வருடங்களாக தொழுகை நடந்து வந்த ஒரு மஸ்ஜிதை சமூக விரோத குண்டர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள்

புகார் எழுதிக்கொடுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஷாஹித், அருகில் எஸ்.டி.பி.ஐ-ன் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா மற்றும் எஸ்.டி.பி.ஐ-ன் ஊடகத்தொடர்பாளர் தன்வீர்
உடனடியாக சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று அந்த குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர். இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் ஒரு நிதிக் கம்பெனியை துவக்க திட்டமிட்டார். அந்த இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு தருவதாகச் சொன்னார்கள்.
மஸ்ஜிதின் உள்ள இடிக்கப்பட்டு கிடக்கும் காட்சி!
முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. சில நாட்களாகவே பள்ளியை பூட்டுவது, முஸல்லாக்களை கொணடு செல்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அருகிலிருந்த முஸ்லிம்கள் காவல்துறையில் புகாரும் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சம்பவ தினத்தன்று முதல் மாடியினை அபகரிக்கும் நோக்குடன் சமூக விரோத கும்பல்களை ஏவி விட்டு மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள் மீண்டும் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக் குண்டர்களை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.  சம்பவ இடத்திற்கு விரைந்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மஸ்ஜித் இடிக்கப்பட்டதால் நடுரோட்டில் லுஹர் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
பின்னர் முஸ்லிம்கள் இந்தச் வன்முறை செயலைக் கண்டிக்கும் விதமாகவும் சம்பந்தப்பட்ட சமூக விரோத கும்பல் மீது FIR பதிவு செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதிய தொழுகையான ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர். பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டச் செயலாளர் ஷாஹித் மற்றும் ஜமாஅத்தார்கள் இணைந்து இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக காவல்துறையிடம் புகார் மனு அளித்தனர்.



ஒரு சில விஷயங்களை குறிப்பிட வேண்டும் என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறோம்!

1. இந்த பிரச்சனையில் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமல்லாமல் த.மு.மு.க, இ.த.ஜ, த.த.ஜ என அனைத்து ஜமாத்தினர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

2. இந்த பிரச்சனையில் காவல் துறை அதிகாரியிடம் புகார் எழுதி கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரர் ஷாஹித் ஆவார்கள்.

3. காவல் துறை அதிகாரிகள் பள்ளியை இடித்த கயவர்களை தப்பிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாக்குறுதியும் அளிக்கவில்லை. இந்நிலையில் எல்லா ஜமாத்தினர்களும் ஒன்று திரண்டு கொடுத்த நெருக்கடியின் காரணமாகத்தான் எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது.

நடந்த சம்பவங்கள் இவ்வாறு இருக்க, த.த.ஜ தனது இனணயதளத்தில் சகட்டுமேனிக்கு கதைகளை அளந்துள்ளது. த.த.ஜவின் முயற்ச்சியால் தான் பள்ளி வாசல் மீட்கப்பட்டதாம்!

எப்படியாவது கூட்டத்தை கலைத்து விட வேண்டும் என்றே முழு கவனம் எடுத்தனர். இன்நிலையில் இருந்த கூட்டத்தை கலைந்து செல்லுமாறு பிற இஸ்லாமிய இயக்கங்கள் போலிஸ் கேட்டுகொண்டதற்கு இணங்க கூற, பாப்புலர் ஃப்ரண்ட் மட்டும்தான் ஜமாத்தார்கள் உள்ளத்தில் இருந்த வேதனையை வெளிப்படுத்தினர். அதுதான் கூட்டம் கலைந்து போய்விட்டது என்றுச் சொன்னால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனால் பாப்புலர் ஃப்ரண், எஃப்.ஐ.ஆர் போடும் வரைக்கும் கூட்டத்தை கலைய வேண்டாம் என்று கூறியது. லுஹர் நேரம் வந்தவுடன், போராட்டத்தின் ஒரு யுக்தியாகவும், தொழுகை கடமையை நிறைவு செய்யவும், பாப்புலர் ஃப்ரண்ட் அனைவரையும் சாலையில் தொழச்சொன்னது. இதற்கு த.த.ஜ மசாயிலை பேசியது. தமுமுக தொழுகை நடத்த கூடாது என்று கூறியது. ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் கொடுத்த தைரியத்தில், ஒரு ஆட்டோ ஓட்டுனர் தொழ வைத்தார். அதில் ததஜ், தமுமுக கலந்து கொல்ளவில்லை. மேலும் சில இஸ்லாமிய இயக்கங்கள், தடி அடி நடத்த போராங்க! அதனால் கலைந்து போங்க! என்று பயமுறுத்தியும், பாப்புலர் ஃப்ரண்ட் எல்லோரையும் தைரியப்படுத்தி
களத்தில் நிக்க வைத்ததால் தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. இல்லையென்றால் மஸ்ஜிதை நாசப்படுத்தியவர்கள் தப்பித்து இருப்பார்கள். இப்படி சமுதாய பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுப்பவர்கள் யார் என்று சமூகம் உணர வேண்டும். பட்டப்பகலில் மஸ்ஜிதை இடிக்க வருகிறவன், அரசியல் செல்வாக்கு இல்லாமல் இடிக்க முடியுமா?
அப்படி வந்தாலும் ஒருவர் மேல நாங்க நடவடிக்கை எடுக்குறோம் என்று காவல் துறை வாய்மொழியாக கூறினால், அதை நம்பி போலிஸிடம் நல்ல பெயர் வாங்க கூட்டத்தை கலைக்க‌ முயற்சி செய்வது சமுதாய நலன் இல்லை. சமுதாயத்தை அடகு வைப்பது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் தவ்ஹீத் சகோதரர்களின் எழுச்சியை கண்டு பள்ளிவாசலை இடித்தவர்கள் பின் வாங்கினார்களாம்! அடப்பாவிகளா? உங்களுடைய புருடாக்கு அளவே இல்லையா?

பாருங்கள் அவர்கள் தங்களுடைய இணையதளத்தில் போட்டிருக்கும் செய்தியை!

"புயலென களமிறங்கிய கிளை மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அங்கே பள்ளியை இடித்துக் கொண்டிருந்தவர்களுடன் கடுமையான வாக்குவாதம் புரிய, இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் அந்தப்பகுதியில் குழும ஆரம்பித்தனர்."

(என்றுமே இவர்கள் எதார்த்தத்தை பேசியதே இல்லை!)

ஒரு அயோக்கிய கூட்டம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்துக்கொண்டிருக்க அவர்களுடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்களாம்! அட மூடர்களா? அங்கேயும் வாக்குவாதம் தானா? நடந்தது என்னவென்றால் இவ்வளவு கோரமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அங்கே  இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் பொதுமக்களும் உடனடியாக களமிறங்கி பள்ளி வாசலை இடித்து கொண்டிருந்த கயவர்களை தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்தனர். இதனால்தான் பள்ளியை இடித்தவர்களில் 4 நபரை பிடிக்க முடிந்தது. அப்போது இவர்கள் செய்து கொண்டிருந்தது எல்லாம் தங்களுடைய கேமரா செல் போன்கள் மூலமாக படமெடுத்ததுதான் மிச்சம்.

இவர்கள் புகார் கொடுத்தார்களாம்! உண்மையைச் சொல்லப்போனால் புகார் எழுதிக்கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் ஷாஹித் அவர்கள். புகாரை எழுதி முடித்த பின்பு நானும் கையெழுத்து போடுகிறேன் என்று கூறி த.த.ஜ நிர்வாகியும் கையெழுத்துப் போட்டார். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் எல்லோருடைய முயற்ச்சியால் தான் இந்த சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது என்று கூற, த.த.ஜ மட்டும் தன் அமைப்பால் தான் இது தடுத்து நிறுத்தப்பட்டது என்று கூறி புருடாக்களுக்கு மேல் புருடா விடுகிறது. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்களுடைய முயற்ச்சியால் மட்டும்தான் இது நடந்ததா? அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்!


கூடியிருந்த பொதுமக்களின் ஒரு பகுதி
ஒளு எடுக்கும் இடம் இடிக்கப்பட்டிருப்பதை காணலாம்


கூட்டத்தை நோக்கி எஃப்.ஐ.ஆர் போடும் வரை களையவேண்டாம் என்று கூறும் நிர்வாகிகள்!


செய்தி: முத்து

15 விமர்சனங்கள்:

Genius சொன்னது…

இப்படி ஒரு மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் ததஜ, இதற்கு பதிலாக..... (வேண்டாம்.. கெட்ட வாரத்தை வந்துவிடும் என அஞ்சுகிறேன்..)

பெயரில்லா சொன்னது…

Allah akbar enn intha mathiri ...

basha சொன்னது…

அவர்கள் நாங்கள்தான் செய்தோம் என்று சொல்லி பெருமை கொள்ளட்டும் நீங்கள் நாங்கள்தான் சொய்தோம் என்று பெருமை கொள்ளுங்கள் இப்பயேதான் நம் சமுதாயம் ஒன்னுமில்லாம் போகுது நான்தான் என்று எவன் சொல்லுகிறானோ அவன் சமுதாயத்தலைவனே இல்லை மருமையில் அவனுக்கு கொடுக்கப்படும் தன்டனையை அறியதாவர்கள்தான் நான் தான் சொல்லிக்கொள்வார்கள் பயந்து கொள்ளுங்கள் இறைவைனை (இருவருக்கும்தான்) உங்களுடைய போட்டி, சன்டைகள், பொறாமைகள் அதிகமாக்கி கொன்டு நமது சமுதாயத்தை நாசமாக்கி விடாதிர்கள்
குறிப்பு (அவனும் இஸ்லாமியன்தான் நம் சகோதரன்தான் என்ற என்னம் உங்களுக்கு இருந்திருந்தால் விட்டு கொடுத்திருப்பீர்கள் யார் செய்தால் என்னா என்று விட்டு கொடுப்பவனும் மன்னிப்பவனும் மிகைத்தேனாகவான்)

பெயரில்லா சொன்னது…

சரிப்பா! நீங்க சொல்றது தான் உண்மையா இருக்கட்டும். அவர்கள் FIR போட்ட ஒரிஜினல் காப்பியை வெளியிட்டுள்ளார். கம்ப்ளைன்டே நீங்கதான் குடுத்தேன்னு சொல்றீகள்லடா! எங்கடா FIR காப்பி! நீ FIR காப்பியை வெளியிட்டு விட்டு பேசுடா! உன்னை யோக்கியன்னு ஒத்துக்கிறேன். இதை நீ வெளியிடாவிட்டால் உன்னை கிழிகிழி என கிழிப்பேண்

பெயரில்லா சொன்னது…

இசையை ஹலால் ஆக்கிய சைத்தானின் குட்டிகளா! மார்க்கமே போச்சு அப்பறம் என்னடா கொள்கை பேசுறீங்க. உங்கள் கட்சிக்கு சைத்தானின் பிரியமான இசையுடன் கூடிய பாடல் இருக்கா இல்லையாடா? நீங்க முதல்ல முஸ்லீம் ஆகுங்கடா! விநாயகர் சதுர்த்திக்கும், பொங்களுக்கும் பேனர் அடிக்கும் சைத்தானின் பிள்ளைகளா! நீங்க எப்படா முஸ்லீம் ஆகப்போறீங்க?

basha சொன்னது…

தம்பி மரியாதையா பேசுங்கள் அதுதான் முஸ்லீம்களுக்கு அலகு நானும் உன் சகோதரன்தான் சத்தியமாக சொல்லுவேன் நம்முடைய எதிரியான RSS காரர்கள் எவ்வளவோ மேல் நீங்கள் சன்டையிடுவது ஒற்றுமை என்னும் கயிற்றை பிடித்து கொள்ளுங்கள் என்பதை எல்லாம் மறந்து இவ்வுளக வாழ்க்கைக்காக பதவிக்காக இப்படியெல்லாம் எழுதுவது அசிங்கமாக இல்லை சத்தியம் நம்முடைய எதிரி RSS இல்லை நம் சமுதாயத்திற்கு நமக்கு நாமே எதிரியா இருக்கின்றோம் சிந்திப்பீர்கள் சகோதர்களே!!

PS LAKSHMI BAKERY சொன்னது…

nala vela nanga than luhar thoza vechom nu solama ponangale antha pavinga

IBNU AHMAD சொன்னது…

த த ஜ சஹோதரரே பேசுகின்ற வார்த்தையில் கண்ணியம் இல்லையென்றால் கண்ணியம் இழப்பிர்கள் என்பதை மறந்து விடாதிர்கள் .சமுதயாத்தோடு ஒருகினயவில்லை என்றால் இழிவு நிச்சயம் என்பதை மறந்து விடாதிர்கள் .சமூகத்தில் பொதுவான பிரச்சனைகளை சரிசெய்வதில் கூட தனித்துவம் பார்ப்பது ஒரு இயக்கவதிக்கு அழகல்ல.

rajamohamed சொன்னது…

http://rhnthoweed.blogspot.com/2011/03/blog-post_30.html

basha சொன்னது…

எல்லா அமைப்பினரும் யாருக்காக போரடுகிறார்கள் என்பது அவர்கள் மறந்து செயல் படுகிறார்கள் என்பதுதான் உன்மை

Amal சொன்னது…

சகோதரர்களே! எப்போது உங்கள் உல் சண்டையை ஒழிப்பீர்கள். உங்கள் சங்கமும் அமைப்பும் யாரையும்ஒன்றுபடுத்த போவதில்லை.
அல்லாஹ்வுக்காக என்ற எண்ணம ஏன் வரவில்லை
யாருக்கும் இடையூறு செய்ய கூடாது என்று இஸ்லாம்சொல்லுகிறது,ஆனால் நீங்களோ நாடு ரோட்டில் தொழுகை நடத்துகிறீர்கள். இது யாருக்காக?
நம் சமுதாயம் பிளவு பட்டு கிடக்கிறது ,நீங்களோ அதை பங்கு போட
எண்ணுகிறீர்கள். அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால் இப்படி செய்ய தோணுமா? அழிவு வெகு தூரத்தில் இல்லை . ஒன்றுபடுவோம் அல்லாஹ்வுக்காக.நீங்கள் மார் தட்டி கொள்ள இதில்
ஒண்ணுமே இல்லை

பெயரில்லா சொன்னது…

PNTJ---->யூதர்கள்

SYED சொன்னது…

I REPEAT

அவர்கள் நாங்கள்தான் செய்தோம் என்று சொல்லி பெருமை கொள்ளட்டும் நீங்கள் நாங்கள்தான் சொய்தோம் என்று பெருமை கொள்ளுங்கள் இப்பயேதான் நம் சமுதாயம் ஒன்னுமில்லாம் போகுது நான்தான் என்று எவன் சொல்லுகிறானோ அவன் சமுதாயத்தலைவனே இல்லை மருமையில் அவனுக்கு கொடுக்கப்படும் தன்டனையை அறியதாவர்கள்தான் நான் தான் சொல்லிக்கொள்வார்கள் பயந்து கொள்ளுங்கள் இறைவைனை (இருவருக்கும்தான்) உங்களுடைய போட்டி, சன்டைகள், பொறாமைகள் அதிகமாக்கி கொன்டு நமது சமுதாயத்தை நாசமாக்கி விடாதிர்கள்
குறிப்பு (அவனும் இஸ்லாமியன்தான் நம் சகோதரன்தான் என்ற என்னம் உங்களுக்கு இருந்திருந்தால் விட்டு கொடுத்திருப்பீர்கள் யார் செய்தால் என்னா என்று விட்டு கொடுப்பவனும் மன்னிப்பவனும் மிகைத்தேனாகவான்)

Real buulshit... all these groupism
If there is a way to fire this website, I dare

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

அன்பு சகோதரர்கள் செய்யது மற்றும் பாஷா அவர்களுக்கு,

கட்டுரையை ஒரு முறை நன்கு படித்துப்பாருங்கள்! எங்கையுமே பாப்புலர் ஃப்ரண்ட் மட்டும்தான் ஈடுபட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தது என்று நாங்கள் கூறவில்லை. மாறாக த.மு.முக, த.த.ஜ, எஸ்.டி.பி.ஐ என அனைத்து இயங்கங்களும் ஈடுபட்டுதான் தீர்த்தது என்று கூறுகிறோம். மேலும் இதற்கு ஆதாரமாகத்தான் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளோம்.! தாங்கள் மட்டுமே நன்மையை செய்யக்கூடியவர்கள் எனவும் பிற இயக்கங்க்ள என்ன செய்தாலும் அதை தறைக்குறைவாகவே பேசி வரும் த.த.ஜ வினரின் செயல்பாட்டைத்தான் எடுத்துக்கூறியுள்ளோம். இந்த பிரச்சனையில் நாங்கள் கலந்து கொள்வதால் நீங்கள் எங்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இந்த செய்தியை பதியவில்லை. என்ன கூறுகிறீர்கள்? எங்களுடைய வலைப்பூவை அழிக்க வேண்டுமா? நீங்கள் பிறரின் இணையதளங்களை பார்த்ததே இல்லையா? இதையே பிழைப்பாக நடத்தி வருகிறார்கள். நாங்கள் நம் சமூக மக்களின் குறைகளை தோண்டி துருவி ஆராய்வதற்காக இந்த வலைப்பூவை தொடங்கவில்லை. எங்களுடைய மற்ற கட்டுரையகளை ஒரு முறை படித்துப் பாருங்கள்!

வஸ்ஸலாம்!

Sathiq சொன்னது…

சிறுபான்மை சமூக மக்களே சிந்தியுங்கள்.. செயல் படுங்கள்.. ஒற்றுமைக்கான வழிதான் எங்கள் வழி.. PFIN இன் வழி என்வழி இல்லையென்று நீங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அது நீங்கள் உங்களுக்காகவே தோண்டும் குழி..

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010