மும்பை: ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிரவாத செயல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட சுவாமி அசிமானந்தாவின் சமீபத்திய வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் தான் என்ற உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறதை நம்மால் காணமுடிகிறது.
ஆனால் ஒவ்வொரு குண்டுவெடிப்பின் போதும் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பையோ அல்லது ஏதாவது ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞனையோ கைது செய்வது வழக்கம். இதன் மூலம் தீவிரவாதிகள் என்றாலே அது முஸ்லிம்கள் தான் எனுமளவிற்கு அநீதியான, அபாண்டமான குற்றச்சாட்டுகளும், பொய் பிரச்சாரங்களும் பரப்பி வந்த ஃபாஸிச சங்கபரிவாரங்களுக்கு அசிமானந்தாவின் வாக்குமூலம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடைப்பெற்ற குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்கள்தான் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். ஆனால் ஒரு சில நேர்மையான அதிகாரிகளின் தீர விசாரணையால் உண்மை குற்றவாளிகள் பிடிப்பட்டார்கள். அதில் பிரக்யா சிங் என்ற பெண் சாமியார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அதில் மற்றுமொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பிரவீன் முத்தலிக் என்பவன் மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) அதிகாரிகளிடன் வாக்குமூலம் அளித்தான். அதில், தன்னுடைய தலைமையில் இந்து இளைஞர்களுக்கு குண்டுவெடிப்பு நடத்துவதற்கும், வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் நாட்டில் பல பகுதிகளில் தீவிரவாத செயல்களை நடத்துவதற்கு உபயோகப்படுத்தப்பட்டதாகவும் கூறினான்.
தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் கூறும்போது பிரவீன் மாலிகிடம் விசாரணை நடத்தும் போது அவன் அவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு ஈடுபடுத்தப்பட்ட பல இந்து இளைஞர்களின் பெயர்களை கூறியதாக கூறினர்.
ATS அதிகாரி ராகேஷ் மரியா அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, "பிரவீன் முத்தலிக்கிடம் விசாரணை மேற்கொண்ட போது, பல புதிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது. மேலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட பல இளைஞர்களின் பெயர்களையும் அவன் தெரிவித்தான்" என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், "பிரவின் முத்தலிக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பல கைது நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும், இன்னும் பல நபர்களை விசாரிக்கப்போவதாகவும் கூறினார். பிரவீன் முத்தலிக் மற்றும் புரோஹித் ஆகிய இருவரும்தான் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தலைவராக இருந்ததாக ராகேஷ் மரியா கூறினார்.
செப்டம்பர் 29, 2008 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம், நாஸிக் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான மாலேகானில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 6 அப்பாவி பொதுமக்கள் உயிர் இழந்ததும், 37 நபர்கள் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பின் போது உயிரோடு இருந்த தீவிரவாத எதிர்ப்புப் படை காவல் துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயின் நியாயமான மற்றும் பாரபட்சமில்லாத விசாரணையின் விளைவாக இந்துத்துவா மதவாத அமைப்பான அபினவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தார்.
இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான சாத்வி பிரக்யா சிங் தாகூர், ஸ்ரீகாந்த் புரோஹித், பிரவீன் வெங்கடேஷ் தகல்கி என்ற பிரவீன் முத்தலிக், ரமேஷ் உபாதயா மற்றும் சுவாமி தயானந்தா பாண்டே உட்பட 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: முத்து
நன்றி: TWO CIRCLES

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக