புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அப்பாவி இளைஞனின் குமுறல் தமிழக அரசுக்கு கேட்குமா?

8 மார்ச், 2011

கோவையில் 2006ஆம் ஆண்டு உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட சகோதரர் ஹாரும் பாஷாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது கடிதத்தை பிரசுரிக்கிறோம். அவரின் போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்!


மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

2006ம் ஆண்டு கோவையில் வெடிகுண்டுப் புரளியை கிளப்பி, முஸ்லிம் இளைஞர்கள் மீது வீண் பழி சுமத்திய உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதிக்கு ஏ.டி.எஸ்.பி., எஸ்.பி. என தொடர் பதவி உயர்வுகளை அளித்துள்ளது தமிழக அரசு.
மேலும் தற்போது தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) உறுப்பினராக நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. இது முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலாகும்.

ஆகவே அந்த பதவி உயர்வை உடனே ரத்து செய்யக்கோரியும், அந்த வெடிகுண்டு நாடகத்தில் நானும் என் குடும்பத்தாரும் மிகவும் பாதிக்கப்பட்டோம் என்ற காரணத்தாலும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு இத்தகைய பதவி உயர்வு கொடுக்கப்பட்டதை கண்டித்தும், அவரது இப்பதவியை உடனே ரத்து செய்யக் கோரியும் தலைமை செயலகம் முன்பு நான் என் குடும்பத்தாருடன் 09.03.2011 அன்று காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான காவல்துறை அனுமதிக்கும் விண்ணப்பித்து முழுமுனைப்புடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள இந்த சதி வலையின் ஆழத்தை சுருக்கமாக இங்கே எடுத்துரைக்கின்றேன்.

"அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தையும் கோவை மாநகரையும் பீதி வயப்படுத்தும் நோக்கில் கடந்த 2006 ஜூலை 22 அன்று "கோவையைத் தகர்க்க சதி வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது" எனப் பழி சுமத்தி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து மக்களை பீதிவயப்படுத்தினார். தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் முன்னோடி அமைப்பான‌ மனித நீதிப் பாசறையின் மீதும் இந்த வெடிகுண்டுப் பழியை சுமத்தினார்.

பாப்புலர் ஃப்ரண்டின் (மனித நீதிப் பாசறை) வீரியமிக்க போராட்டத்தினாலும், ஏனைய முஸ்லிம் இயங்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், முஸ்லிம் ஜமாத்துகள், நடு நிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் தந்த அழுத்தங்களாலும் 10 நாட்களில் (01.08.2006) தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

சுமார் ஒரு வருட காலம் இவ்வழக்கை பல்வேறு கோண்ங்களில் விசாரணை செய்த சிறப்புப் புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) கடந்த 2007 அக்டோபர் 15 அன்று இறுதி அறிக்கையை கோவை நீதித்துறை நடுவர் எண் 7ல் தாக்கல் செய்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் என் மீதும் என்னுடன் கைது செய்யப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீதும் ஏ.சி. ரத்தின சபாபதியால் போடப்பட்டிருந்த வெடிகுண்டு பொய் வழக்கை 20.12.2007 அன்று (ஆர்.சி.எஸ் எண் 183/07) தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.

மேற்படி இறுதி அறிக்கையில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். பாலன் அவர்கள் "இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதானால், மேற்படி பி13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006ல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120(பி) உ/இ வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு 5ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (F.I.R) மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டு அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் (Seizure Mahazars) ஜோடிக்கப்பட்டவை மற்றும் பொய்யானவை (Fabricated and False) என்று தன்னுடைய விசாரணையில் தெளிவாகத் தெரிய வருகின்றது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் மேற்கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன (Conclusively Confirms). எனவே, இது பொய்வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கின்றேன் (I am treating this case as False )." என்று மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

இந்த வெடிகுண்டு நாடகத்தின் சூத்திரதாரி ஏ.சி ரத்தினசபாபதி தான் என்பதை தனது விசாரனை அறிக்கையில் பல இடங்களில் அவர் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஏ.சி ரத்தின சபாபதி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி., அதன் பிறகு எஸ்.பி., என பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு வழங்கி வருவதும், தற்போது புதிதாக டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதும் சிறிதும் ஏற்புடையதல்ல. மேலும் இது போன்ற பொறுப்பு மிகுந்த உயர் ஆணையங்களில் ரத்தின சபாபதி போன்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மிகுந்த வாய்ப்பாக அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

மேலும் இந்த பதவி உயர்வுகளும், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதும் தமிழ் நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளுக்கும் முரணானவை.

கோவை வெடிகுண்டு நாடகத்தின் சூத்திரதாரியான உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதிக்கு வழங்கப்பட்ட தொடர் பதவி உயர்வுகளும், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவியையும் உடனடியாக ரத்து செய்யக் கோரியும், எஸ்.ஐ.டி. யின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி ரத்தின சபாபதி மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடந்த 02.03.2011 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக உள்துறை செயலாளரை சந்தித்து ரத்தினசபாபதியின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

மேலும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள ரத்தின சபாபதியின் இந்த பதவி உயர்வுகளும், தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பதவி ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்யக்க்கோரியும், எஸ்.ஐ.டி சமர்பித்துள்ள இறுதி அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தின சபாபதி மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தங்கள் பத்திரிக்கையின் சார்பாக உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


மேலும் நானும் எனது குடும்பத்தினரும் இருக்கும் அடையாள உண்ணாவிரதத்தம் வெற்றி பெற தாங்கள் ஆதரவு தருமாறும், அந்த உண்ணாவிரதம் குறித்த செய்தியினை தங்கள் பத்திரிகையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு



ஏ. ஹாருன் பாஷா
08.03.2011
சென்னை.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010