கடந்த 2005ம் ஆண்டு நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரணைக்காக கீரிப்பாறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணையின் போது அவரை தலை கீழாக தொங்க விட்டு பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்புக்கம்பியை அவரது ஆசனவாய்க்குள் செலுத்தி கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரை கொலை செய்தனர் டி.எஸ்.பிக்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்.
காவல் நிலைய சித்திரவதையில் மசூத் கொல்லப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு வருடங்களாக மதுரை உயர் நீதிமன்றத்திலும் தென்காசி நீதிமன்றத்திலும் நடத்தி வருகிறது NCHRO. மேலும் பாதிக்கப்பட்ட மசூதின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி NCHRO-வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் தலைமையிலான குழு பலமுறை சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனரையும், உள்துறை செயலாளரையும் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் ஆகியோர் தலைமையில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்ததது NCHRO.
NCHRO-வின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மசூதின் மனைவி அசனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி குமரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் படி இழப்பீடு தொகையை NCHRO-வின் மா நில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி, நெல்லை மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. சர்தார் அரபாத் அவர்களின் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அந்த தொகையை அசனம்மாளிடம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த NCHRO-வின் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி அவர்கள் " நீதிக்கான போராட்டம் இத்துடன் முடிந்து விடவில்லை, காவல் நிலைய சித்திரவதையின் மூலம் மசூத் அவர்களை கொலை செய்த டி.எஸ்.பி பிராதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நாங்கள் நடத்தி வருகின்றோம். அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது" என்று கூறினார்.

தினகரன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி |
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக