புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மார்ச்-8 உலக மகளிர் தினம் - N.W.F நடத்திய பேரணி

22 ஏப்ரல், 2011

மார்ச்-8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ( N.W.F ) சார்பாக 08.03.2011 மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.


இப்பேரணிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரி. நஜ்மா அவர்கள் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஃபாத்திமா கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில‌ செயலாளல் ஹாலித் முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றி பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

* மண்டல கமிஷன் அறிக்கையின்படி பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உடனே நிறைவேற்ற வேண்டும்.

* பாலியல் குற்றத்திற்கெதிரான‌ தண்டனை சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.

* காவல்துறை மற்றும் ராணுவத்தினரால் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி பெண்கள் பாதிக்கபடுவதை தடுக்க வேண்டும்.

* பூரண மதுவிலக்கை உடனே அமுல்படுத்த வேண்டும்.

* திரைப்படம் மற்றும் சின்னத்திரைகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஆபாசத்தை தடை செய்ய வேண்டும்.

* சினிமா தணிக்கைகுழு ஆபாசமான திரைப்படங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

* இருபாலார் கல்வி முறையை ஒழிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மூலமாக வலியுறுத்தப்படுகின்றது.






1 விமர்சனங்கள்:

hameedfaizal சொன்னது…

எந்த சமூதாயம் போராட தயாராக வில்லையோ அந்த சமூதாயம் எல்லாவித அடக்குமுறைக்கும் ஆளாக வேண்டியதுதான் அதை முறியடித்து விட்டது .எந்த மகளிர்க் கூட்டம் நேஷனல் வோமான்ஸ் பிரான்ட் என்கிற இந்தப்படை.கூடிய சீக்கிரம் வீட்டில் வீட்டில் இருந்து வியாக்கியாம் பேசும் ஆண்களையும் வீதிக்கு கொண்டுவரும்

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010