புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கலவரத்தை கண்டு கொள்ளாதீர்!

23 ஏப்ரல், 2011


"நரபலி நாயகன்" நரேந்திர மோடி
குஜராத் மாநிலத்தில் 2002ல் நடந்த கலவரத்திற்கும், நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டில் உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு, அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில், கோத்ரா இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது கரசேவர்கள் இருந்த ரயில் பெட்டியான எஸ்-6 ஐ சிலர் தீ வைத்து எரித்து விட்டனர். இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த 59 கரசேவர்கள் உடல் கருகி பலியாயினர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவது கலவரம் பரவியது. ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள், பெண்கள் குழுந்தைகள், முதியவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுடைய உடமைகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

வெட்டிக்கொலை செய்யப்பட்ட முன்னால் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரி
இந்த கலவரத்தில் முன்னால் காங்கிரஸ் கட்சி எம்.பி இஹ்ஸான் ஜாஃபரி உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜாஹியா ஜாஃபரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற 11 மந்திரிகள் உட்பட 61 நபர்களை குற்றவாளிகளாக குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்த சஞ்சீவ் பட் தற்போது உளவுத்துறையில் பணியாற்றி வருகிறார். அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவி கூறியிருப்பதாவது:-

குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கே பணியாற்றினேன். அப்போது நரேந்திர மோடி தனது வீட்டில் போலிஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டினார்.
அந்தக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி,

காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்
"குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டு கொள்ளவேண்டாம்! இந்துக்கள் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக செயல்படவேண்டாம்! அவர்களது கூக்குரலை கேட்க வேண்டாம்." என்று கூறினார்.

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள புலனாய்வுக்குழுவிடம் இதை நான் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. நரேந்திர மோடிக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றை புலனாய்வுக்குழு எடுத்துக்கொள்ளவில்லை. எனவே தான் நான் தனியாக உச்ச நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளேன்.

இந்நிலையில் எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கு போலிஸ் பாதுகாப்பிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் குறிப்பிட்டிருந்தார்.

குஜராத் கலவரம் நடந்து 9 வருடங்கள் கழிந்தும் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தபாடில்லை. அநியாயங்களையும், அட்டூழியங்களையும் கட்டவிழ்த்துவிட்டவர்கள் இன்று சுதந்திரமாக உலா வந்துகொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மக்களோ கூனிக்குறுகி, ஒரு வித பீதியுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பியது எதுவாயினும் செய்து முடிக்கலாம்! அதை இந்த அரசாங்கமோ, இந்தியச் சட்டங்களோ அவர்களை தண்டிக்க முடியாது என்னும் பட்சத்தில் அப்படி ஒரு சட்டம் யாருக்குத்தான் தேவை?

என்று சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் கிடைக்குமோ அன்று தான் இந்தியா வல்லரசு என்னும் கனவுக்கோட்டை மீது ஏற முடியும் இல்லையேல் இதைப்போன்ற அயோக்கியர்களின் அடவாடித்தனங்களால் சிறுபான்மை சமுதாயம் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

"எந்த ஒரு சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாதவரை, அந்த சமுதாயத்தை இறைவன் மாற்றுவதில்லை!" என்பது இறைவேதத்தின் வசனம். நம்முடைய சிந்தனைகளையும், எண்ணங்களையும் மாற்றி அநியாயக்காரர்களை எதிர்த்து போராடினால் மட்டுமெ விடியல் உண்டு.

செய்தி: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010