புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இஸ்ரத் ஜஹான் - போலி எண்கவுண்டர் வழக்கு

8 ஏப்ரல், 2011

காந்திநகர்: கடந்த 2004 ஆம் வருடம் நடந்த இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று வாலிபர்களுடைய எண்கவுண்டர் வழக்கை குஜராத் உயர் நீதி மன்றம் சிறப்பு விசாரனணக்குழுவிடம் ஒப்படைத்திருந்தது.

இஸ்ரத் ஜஹான்
கடந்த 2004 வருடம் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டார்கள் என்றும், லக்ஷ்ர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறி இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று வாலிபர்கள் குஜராத் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது முழுக்க முழுக்க போலி எண்கவுன்டர் என்றும் த‌னிப்படை அமைத்து இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நெருக்கடி ஏற்பட்டதின் காரணத்தால் இவ்வழக்கை குஜராத் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து இவ்வழக்கை விசாரிக்க ஏற்பாடு செய்திருந்தது.

தற்போது வழக்கின் முழு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தது அந்தக்குழு. அந்த அறிக்கையை நீதிபதிகள் அபிலாஷ் குமாரி மற்றும் ஜெயந்த் படேல் ஆகியோர் முன்பு இன்று (ஏப்ரல் 8,2011) அன்று சமர்பிக்கப்படும் என்று செய்திகள் வந்திருக்கின்றன.
இஸ்ரத் ஜஹானின் குடும்பத்தினர்

சமீபத்தில் இந்த சிறப்பு விசாரணைக்குழு தடவியல் ஆய்வுமையத்தில் தீடீர் சோதனை நடத்தி வழக்கிற்குத்தேவையான பல ஆதாரங்களை சேகரித்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்டும் முன்னால் காவல்துறை டி.எஸ்.பி  என்.கே.அமீனின் கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று வாலிபர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம்

குஜராத் கலவரத்திற்கு பின்பு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டதாகவும், தீவிரவாத‌ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எனக்கூறி இது போன்ற பல எண்கவுண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: TWO CIRCLES
தமிழில்: முத்து

1 விமர்சனங்கள்:

பெயரில்லா சொன்னது…

sathiyam vendrea therum. insha allah

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010