ஊழலுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்ற மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமை செயலகம் பாராட்டுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திரு. அண்ணா ஹசாரே அவர்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையேயான லோக் பால் மசோதா தயாரிக்கும் சட்ட வரைவு கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை வரவேற்கிறது.
ஊழலுக்கு எதிரான இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் ஆதரவும் பெருகிவருகிறது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்பந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசாங்கமும் இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஊழலுக்கு எதிரான சட்ட வரைவு கமிட்டிக்கு ஐந்து காபினெட் அமைச்சர்களும் ஐந்து பேர் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இருப்பார். பொதுமக்கள் தரப்பிலிருந்து ஒருவர் துணை தலைவராக இருப்பார். அடுத்த மழை கால பாராளுமன்ற கூட்டு தொடரில் சமர்பிக்க இந்த சட்ட வரைவை இக்குழு தயார் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிக்க வெறுமனே ஒரு வரைவு சட்டம் மட்டுமே இறுதி தீர்வாக அமையாது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழலை ஒழிக்க ஊழலை அடித்தளமாக கொண்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராக மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டும் என இந்த அமர்வு கேட்டுக்கொள்கிறது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான தலைமை தாங்கினார். கே.எம். ஷரிஃப், முஹம்மது அலி ஜின்னா, யாசிர் ஹசன், ஓ.எம்.ஏ. சலாம் ஆகியோர் இக்கூட்டட்தில் பங்கு பெற்றனர்.
கே. எம். ஷரீஃப்
பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக