புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மோடி குறித்து கூறிய கருத்துக்களை திரும்பப் பெற்றார் அண்ணா ஹஸாரே!

18 ஏப்ரல், 2011

புதுடெல்லி: சமூக ஆர்வளர்கள் மற்றும் பலரி கடுமையான விமர்சனத்தால் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி குறித்து தான் கூறிய கருத்தினை திரும்பப் பெற்றுக்கொண்டார் அன்னா ஹஸாரே.

ஊழலுக்கு எதிராக போராடக்கூடியவர்கள் மோடியின் அரசை குறித்து கூறிய கருத்துக்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஆதரவாக தான் கூறிய கருத்துக்களை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அன்னா ஹஸாரே தெரிவித்தார்.



கடந்த வாரங்களிலில் ஊழலுக்கு எதிரான தனது போராட்டங்களின் மூலம் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தனது வேண்டுகோளை நிறைவேற்றி லோக்பால் முறையை நடைமுறைப்படுத்தினார். அவர் தனது போராட்டத்தின் போது குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிதான் ஊழலற்ற அரசாங்கத்தை நடத்திவருவதாக கூறினார். இந்த கருத்தை அவர் கூறிய மாத்திரத்தில் அவரை கண்டித்து அவருக்கு பல சமூக ஆர்வளர்கள் மின்னஞ்சல் மூலம் குஜராத்தின் உண்மை நிலையை எடுத்துக்கூறினார்கள். கிராமப்புரங்களில் குஜராத் அரசாங்கத்தின் மெத்தனத்தனத்தையும், கிராமபுரங்களில் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட அரசு பணத்தில் ஊழல் நடந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"எந்த ஒரு ஆதாமும் இல்லாமல் எனது கருத்தை தவறுதலாக தெரிவித்துவிட்டேன்!, நரேந்திர மோடி மற்றும் நித்திஷ்குமாரின் ஆட்சியை பற்றி என்னிடம் கேட்டார்கள், அப்போது நான் அவர்கள் நன்றாக ஆட்சிசெய்கிறார்கள் என கேள்விப்பட்டதை தெரிவித்தேன், தற்போது அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்" என அன்னா ஹஸாரே தெரிவித்தார். ஆனால் இந்த நாட்டை பிளவுபடுத்தக்கூடிய எல்லா கொள்கைகளையும் எதிர்க்கிறேன், என மேலும் கூறினார்.

நன்றி: TWO CIRCLES
தமிழில்: முத்து

1 விமர்சனங்கள்:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

அதெப்படி ஒரு விஷயத்தை பற்றி தீர விசாரிக்காமல் கடமைக்கு பதில் சொல்லிவிட்டு அதை நான் தெரியாமல் கூறிவிட்டேன் என்று கூறுவது.

கருத்து கூற விருப்பமில்லை என்றால் விருப்பமில்லை என்று கூற வேண்டும், அல்லது தீர விசாரித்து பதிலளிக்க வேண்டும்.

இது கண்டனத்துக்குரியது

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010