வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே! பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் சாகுல் ஹமீது அவர்கள் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம்காணும் எஸ்.டி.பி.ஐ வீரியத்தோடும் விவேகத்துடனும் தனது பிரச்சாரத்தை 7 தொகுதிகளிலும் செய்து வருகிறது. அதே போன்று பல நாட்களாக பாளையங்கோட்டை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பிரச்சாரம் செய்யப்படும் இடங்களிலெல்லாம் அதிக அளவு வரவேற்ப்பை பெற்றுள்ளது எஸ்.டி.பி.ஐ. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், எஸ்.டி.பி.ஐ-ன் வளர்ச்சி பலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது போல் தெரிகிறது. பாளையங்கோட்டை தொகுதியில்எஸ்.டி.பி.ஐன் வேட்பாளர் சாகுல் ஹமீதை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாள முகைதீன் அவர்களுக்கு அவ்வளவாக முஸ்லிம் சமூகம் மத்தியில் ஆதரவு இல்லை என்று செய்திகள் வெளியாகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் எல்லா முஸ்லிம் ஜமாத்துக்களும் தங்களுடைய ஆதரவை எஸ்.டி.பி.ஐற்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் (த.த.ஜ) மட்டும் தமிழகம் முழுவது தி.மு.கவிற்கு தங்களது ஆதரைவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐனரின் வாகனத்தை வழி மறித்து இங்கே பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்ட த.த.ஜ வினரின் நிர்வாகி சம்சுலுஹா மற்றும் சிலர்.
பிரச்சார வாகனம் த.த.ஜவினரின் அலுவலகத்தை கடந்த போது "இங்கே பள்ளி வாசல் இருக்கிறது! இங்கே நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது!" என்று கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு அமைதியாக சென்ற எஸ்.டி.பி.ஐனரிடம் இருந்த ஆம்பிலிஃபையர் உட்பட சில பொருட்களை பிடிங்கி தகராறு செய்துள்ளனர்.
உடனே அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக நடந்துகொண்டு எஸ்.டி.பி.ஐனர் சென்ற வாகனத்தை பறிமுதல் செய்து வாகன ஓட்டுனரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனை கேள்விப்பட்ட பொது மக்கள் மற்றும் ஜமாத்தார்கள், உடனே காவல் நிலையம் சென்று காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த த.த.ஜவினர் எஸ்.டி.பி.ஐன் உறுப்பினர்களை தாக்க முயற்ச்சித்துள்ளனர். இதனால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் அங்கே திரண்டனர். பிரச்சனை பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காக கைது செய்த ஓட்டுனரை காவல் துறையினர் விடுவித்தனர். வேண்டுமென்றே கால்புணர்ச்சியுடன் வம்பு செய்யும் நோக்கோடு தகராறில் ஈடுபட்ட்ட த.த.ஜவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினரிடம் எஸ்.டி.பி.ஐன் நிர்வாகிகள் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
சமீப காலமாக த.த.ஜ வினர் சமூதாய விரோத போக்கை கையாண்டு வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இவர்கள் செய்யும் இத்தகைய செயல்பாடுகளால் முஸ்லிம்கள் பலரும் இவர்கள் மீது அதிருப்தி அடைந்தவண்ணம் இருக்கின்றனர்.
செய்தி: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக