கோவை: முஸ்லிம் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை உறுதி செய்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சட்ட வரைவை நிறைவேற்றிட வேண்டி ஜனநாயக ரீதியிலும் மற்றும் ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் தேசிய அளவில் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி பேரணி, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கவர்னம் மாளிகை நோக்கி பேரணி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதை தொடர்ந்து...
எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி மத்தியில் தனி இடஒதுக்கீடு, மாநிலத்தில் உரிய இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 5 இடங்களில் நடத்த இருக்கின்றது. இப்போராடத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் விதமாக ஏப்ரல் 1 ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கரும்புகடை, சாரமேடு பகுதியில் மாலை 7.00மணியளவில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை சி.எம். நாசர் (மாவட்ட செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட், கோவை) வழங்கினார். இக்கூட்டத்தை கே.ராஜா உசேன் (மாவட்ட தலைவர் கோவை) அவர்கள் தலைமை தாங்கினார். எம். முஹம்மது அலி ஜின்ன (தேசிய துணைத்தலைவர்) அவர்களும் ஏ.எஸ். இஸ்மாயில் (மாநில தலைவர்) அவர்களும் மற்றும் பி.அப்துல் ஹமீது (மாநில பொதுச்செயலாளர், எஸ்.டி.பி.ஐ) அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். எ. ஷானவாஸ்(தெற்கு பகுதி தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்) அவர்கள் நன்றியுரை கூற இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக