மங்களூர்: பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் அனைவரும் வாரம் இரு முறை யோகா பயிற்ச்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கட்டுபாடு இருக்கிறது. இத்தகைய கட்டுபாடு உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு சிறு முயற்சி எடுத்து இந்த யோகா பயிற்சியை பொதுமக்களுக்கும் அளிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டும் நடைமுறைபடுத்திவருவதாக தக்ஷின் கன்னட மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் முஹம்மது ஷரீஃப் அவர்கள் பொதுமக்களுக்கான யோகா பயிற்சி முகாமின் போது கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளாராக வந்திருந்த பொறியாளர் இஸ்மாயில் அவர்கள் கூறும்போது நம் சமுதாய மக்கள் உடற்பயிற்சியின் மூலமாக தங்களை ஆரோக்கியாமாக வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இதை போன்ற பயிற்ச்சி வகுப்புகள் நாடு முழுவதும்
பாப்புலர் ஃப்ரண்டினால் நடத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இப்பயிற்ச்சி வகுப்பை நடத்திய மாஸ்டர் முஹம்மது ரஃபீக் அவர்கள் கூறும்போது யோகா பயிற்ச்சி என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியாமான ஒரு பயிற்சியாகும். இன்றைய காலத்தில் மக்கள் ஃபாஸ்ட் புட் (விரைவான உணவுவின்) பக்கம் செல்கிறார்கள். அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க யோகா பயிற்சி இன்றியமையாததாகும். அத்தோடு இந்த பயிற்ச்சியை இந்த முகாமோடு நிறுத்திக்கொள்ளாமல் தங்களது வாழ்வில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆயுர்வேத மருத்துவர் முஹம்மது அஷ்ஃபக், சகோதரர் ஜமால் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக