புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

குஜராத் கலவரம்: துணைபோன தலித் காவல்துறை அதிகாரிகள்!

9 மே, 2011

ஜுனாகாத் (குஜராத்): 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது காவல்துறையினரால் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு உறுதுணையாக இருந்த செய்திகளும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கலவரத்தின் போதும் சரி, கலவரம் முடிந்த பிறகும் சரி காவல்துறையினரின் முஸ்லிம் விரோத போக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தலித் சமூகத்தைசேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் தங்களுடைய அரசியல் தலைவர்களுக்கு கட்டுபட்டு அவர்கள் கொடுத்த ஆணையின் படி முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படத்தொடங்கினர். இதற்கு நேர் மாறாக உயர் ஜாதி இந்துக்கள் அதிலும் குறிப்பாக பிராமணர்கள் இவற்றிற்கு எதிராக செயல்பட்டு முஸ்லிம்களுக்கு பல இடங்களில் உதவியும் செய்துள்ளனர். அவர்கள் ஆளும் பா.ஜ.க அரசிற்கு ஆதரவாக செயல்படாமல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவி செய்துள்ளனர்.



உண்மையில் குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கைப்பற்றி கருத்துக்கள் வெளியிட்ட பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் உயர் ஜாதி இந்துக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நரேந்திர மோடியோ பிற்படுத்தப்பட்ட‌ வகுப்பான "தெளிஸ்" வகுப்பைச்சார்ந்தவர்.
உயர் ஜாதி இந்து காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்திற்கு நரேந்திர மோடியால் பெரும் அபாயம் இருப்பதாக உணர்ந்திருக்கிறார்கள் ஆகவே தான் அவர்கள் நரேந்திர மோடியின் முஸ்லிம் விரோத போக்கிற்கு அவர்கள் துணை போகவில்லை. இதனாலயே அந்த காவல்துறை அதிகாரிகள் பலர் குஜராத கலவரத்தின் போது நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களையும், ரகசியமாக வைக்கப்பட்ட பல விசாரணை அறிக்கைகளையும், 1995 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் போலி எண்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் விசாரணை அறிக்கைகளையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளில் மிக முக்கியமானவர்களான டி.ஜி, வன்ஜாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் மற்றும் அமீன் ஆகிய நால்வரும் ஆவர். இவர்கள் குஜராத்தில் நடைபெற்ற போலி எண்கவுண்டர் வழக்கில் (ஷொராபுதீன் ஷேக்)  ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடட்தக்கது. நரேந்திர மோடியை கொல்லவந்தார்கள் என்றும், பிரவீன் தொகாடியாவை கொல்லவந்தார்கள் என்றும், பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லக்ஷர்-இ-தொய்பா இயக்கத்தைச்சார்ந்தவர்கள் எனக்கூறி பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இவர்களால் இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டார்கள்.

காவல்துறை அதிகாரியான வன்சாரா குஜராத்திலுள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர். இவரது இளம்வயதில் இவரது கல்விக்காண செலவை இவரது சொந்த கிராமமான "லோல்"லில் இருந்த முஸ்லிம்கள் தான் ஏற்றுக்கொண்டு உதவி செய்தனர். தினேஷ் மற்றும் பாண்டியன் ஆந்திர பிரதேச மாநிலத்தைச்சேரந்த தலீத் சமூகத்தினர்,  இதில் பாண்டியன் குஜராத் மாநிலத்திலும், தினேஷ் ராஜஸ்தான் மாநிலத்திலும் காவல்துறை அதிகாரிகளாக பணிபுரிந்து வந்தனர். மற்றுமொரு காவல்துறை அதிகாரி அமினும் குஜராத்தைச்சேர்ந்த தலித் சமூகத்தைச்சேர்ந்தவராவார்.
காவல்துறை துணை கண்காணிப்பாளரான நோபல் பர்மார், இவர் தலித் சமூகத்திலிருந்து கிருஸ்துவ மதத்திற்கு மாறியவர். கோதரா ரயில் எரிப்பு சம்பத்தின் விசாரணையை இவர் தான் நடத்தினார். மெளலானா ஹுஸைன் உமர்ஜி உட்பட பல அப்பாவி முஸ்லிம்களை இவ்வழக்கில் குற்றம் சுமத்தி கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த செயலுக்கு வெகுமதியாக குஜராத்தின் நரேந்திர மோடி அரசு அவருக்கு பணி உயர்வு அளித்தது.
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அதை ஏற்காத உயர்  ஜாதி வகுப்பைச்சார்ந்த காவல்துறை அதிகாரிகளின் மீது குஜராத் அரசாங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

நரேந்திர மோடி அரசால் பாதிக்கப்பட்ட உயர் ஜாதி காவல்துறை அதிகாரிகளில் முதன்மையானவர் ஆர்.பி. ஸ்ரிகுமார். இவர் கேரளாவைச் சேர்ந்த உயர் ஜாதி வகுப்பைச்சார்ந்தவர்.

இவரது பதவியின் நிலை நானாவதி கமிஷன் முன்பு குஜராத் அரசிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மேலும் எல்லாவதிமான திறமைகள் இருந்தும் அவருக்கு பணி உயர்வு மறுக்கப்பட்டது. அவரை விட பிந்திய பல அதிகாரிகளுக்கு பணி உயர்வு கிடைத்தது. பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஸிரிகுமாருக்கு டி.ஜி.பி பதவி உயர்வு அளிக்கப்பட்டது.


சஞ்சீவ் பட்
மற்றுமொறு காவல்துறை அதிகாரி ராகுல் ஷர்மா, பிராமண வகுப்பைச் சார்ந்தவர். குஜராத் கலவரத்தின் போது பாவ் நகரில் மதரஸா நோக்கி தாக்குதல் நடத்திய கலவரக்காரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, 21 நபர்களை கைது செய்தார். அவர்களின் அனைவரும் ஆளும் பா.ஜ.கவினர். கைது செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது என்று விடாப்படியாக இருந்த இவரை அரசியல் வாதிகளின் நெருக்கடியால் விடுதலை செய்தார். இதனால் அவர் அஹமதாபாதில் கண்காணிப்பு அறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதே அஹமதாபாத்தில் மேலும் இரு பொறுப்புக்களை அவரது தலையில் சுமத்தியது குஜராத் அரசாங்கம். நரோடா பாட்டியா, குல்பர்க் மற்றும் நரோடா கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களை விசாரிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.


இந்த சமயத்தில் தான் ராகுல் ஷர்மா கலவரங்களைப் பற்றி முழுமையாக விசார்த்து பல ஆவணங்களை சேகர்த்தார். கலவரத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவின் முக்கிய குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தார். அந்த தகவல்களை ஒரு குறுந்தகடில் பதிவு செய்தார். உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விசாரணைக்குழு இவரின் இந்த குறுந்தகடை(சிடி) வைத்துத்தான் பா.ஜ.கவின் முன்னால் அமைச்சர் மாயபென் கோத்னானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மற்றுமொறு உயர் ஜாதி காவல்துறை அதிகாரி குல்தீப் சர்மா. கலவர நேரத்தில் கலவரம் செய்யக்கூடிய குண்டர்களை கண்காணித்து வந்தார். முஸ்லிம்களை தாக்க வேண்டும் என்று இவரிடம் கோரிக்கை வைத்த ஃபாஸிச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக முஸ்லிம்களை இவர் தாக்கவில்லை. மாறாக அத்தகைய கொடியவர்களிடம் இருந்து ஏராளமான முஸ்லிம்களை பாதுகாத்துள்ளார். அஹமதாபாத் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குல்தீப் ஷர்மா காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

வன்சாரா, பாணியன், தினேஷ், மற்றும் அமின்.
குல்தீப் ஷர்மாவிற்கும் எந்த பதவி உயர்வு கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது இருந்த போதிலும் குல்தீப் ஷர்மாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அவரது சகோதரரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப் ஷர்மாவை ஒரு நில வழக்கில் கைது செய்தது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இதே வழ்க்கில் குற்றம் சுமத்தப்பட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.


மற்றுமொரு காவல்துறை அதிகாரி ரஜ்நிஷ் ராய், உத்திர பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர். ஷொராபுதீன் எண்கவுண்டர் வழக்கில் வன்சாரா, பாண்டியன் மற்றும் தினேஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்படவேண்டும் என்று கடினமாக போராடியவர். ஆக இம்மூவரும் அதன் பின் அமைச்சர் அமித்ஷாவும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தற்போது சஞ்சீவ் பட் என்று சொல்லக்கூடிய காவல்துறை அதிகாரி ஒருவர் இணைந்துள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை கொடுத்துள்ளார். அதில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு நரேந்திர மோடிதான் முக்கிய காரணம் என்றும் அவருடைய கட்டளையின் பேரில் தான் காவல்துறை அதிகாரிகள் கலவரக்காரர்களை தடுத்தி நிறுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  இத்தகைய மனுவால் நரேந்திர மோடி மற்றம் அவரோடு தொடர்புடைய 61 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

ஆக குஜராத் கலவரத்திற்கு சங்கபரிவார ஃபாஸிஸ்டுகள் தலித் சமூக மக்களை நன்றாக மூளை சலவை செய்து அவர்கள் மூலமாகவே தங்களது காரியத்தை நிறைவேற்றியுள்ளார்கள். 9 வருடங்கள் கழிந்தும் இன்னும் ஆராத இரத்த சுவடுகள். நீதிக்காக போராடிக்கொண்டே இருக்கும் முஸ்லிம்கள்! ஆனால் எல்லா அட்டூழியங்களையும் கட்டவிழ்த்துவிட்ட ஃபாஸிஸ்டுகள் இன்று சுதந்திரமாக தெருவிலே உலாவிக்கொண்டிருக்கிறார்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு  "அநீதி" என்னும் பரிசே தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.

இதற்காக போராட வேண்டிய முஸ்லிம் சமூகம் தங்களுக்குள்ளே பிளவு பட்டு மோதிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நம் நினைவுக்கு வரும் இறைமறை வசனம்:

"எந்த ஒரு சமூகம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்றப்போவதில்லை..."

நம் எண்ணங்களை மாற்றுவோம்! நம் சிந்தனைகளை மாற்றுவோம்! ஃபாஸிசத்தை மாய்ப்போம்! தேசத்தை பாதுகாப்போம்!


செய்தி: முத்து

2 விமர்சனங்கள்:

Unknown சொன்னது…

பாசிசம் என்பது ஒரு கொடிய நோய். அது நம்மளை அளிப்பதற்கு முன்னாடி நாம் அதை அழித்தாக வேண்டும்.

csechallengers சொன்னது…

mudunga naikala pinna eppadi da avaru 15 varusama gujarata allararu

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010