பொய்வழக்கில் சிக்கித்தவிக்கும் முஹம்மது ஹனீஃப் |
முஹம்மது ஹனீஃப் கூறும்போது தான் ஐ.எஸ்.ஐ உளவாளி என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர் சிறைச்சாலையில் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கால் தன்னுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வீடுவீடாக சென்று மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை விற்கும் ஒரு சேஸ்மேனாக பணிபுரிந்த வந்த முஹம்மது ஹனீஃபை இன்று அந்த கம்பெனி அவரை பணியிலிருந்து நீக்கி உள்ளது. காரணம் இவர் மீது தீவிரவாத வழக்கு உள்ளது என்றும் இவரால் இன்னும் பல பிரச்சனைகள் உருவாகலாம் எனக் கருதி இவரை வேலையிலிருந்து நீக்கி விட்டு, வேலையை இவர் சரியாக செய்யவில்லை அவருக்கு கொடுக்கப்பட்ட விற்பனை இலக்கை அடையவவில்லை என்று கூறி நீக்கியுள்ளது நிர்வாகம்.
"என் மீது என்ன தவறு இருக்கிறது? நான் ஒரு ஏழை முஸ்லிம்! என் மீது வேறு என்னென்ன வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள் என்பது கூட எனக்குத்தெரியாது!, இப்போது எனக்கு வலையும் பறிபோய்விட்டது, இனி என் குடும்பத்தை எப்படி காப்பாற்றப்போகிறேன்? என்று அவர் கேட்கும் பொழுது கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது.
வேலையை மட்டும் இழந்ததுமில்லாமல் என்று காஜியாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாரோ அன்று முதல் இன்று வரை நாடோடி போன்று வாழ்ந்து வருகிறார். காரணம் இவருக்கு யாரும் வாடகைக்கு வீடு கொடுப்பதற்கு முன் வருவதில்லை. இதனால் தனது சொந்த கிராமத்தை விட்டு வெகுதொலைவில் வசித்து வருகிறார். இதனால் வரை 7 வீடு மாறி உள்ளார் எப்பொழுதெல்லா இவர் மீது தீவிரவாத வழக்கு உள்ளது என்பதை வீட்டு உரிமையாளருக்கு தெரிந்துவிடுகிறதோ உடனே அவரை வீட்டிலிருந்து காலி செய்துவிடும்படி கூறுகின்றனர். இன்று சமூக மக்களால் ஒதுக்கிவிடப்பட்டு மிகவும் சிரமப்பட்டுவருகிறார்.
முஹம்மது ஹனீஃப், மனைவி ஃபரீதா மற்றும் குழந்தைகளுடன் |
ஒவ்வொரு இரவும் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது இருந்த போதிலும் என்னுடைய 3 குழந்தைகளின் பிஞ்சு முகங்களை காணும் போது அந்த எண்ணத்தையே மறந்துவிடுவேன் என முஹம்மது ஹனீஃப் கூறுகிறார்.
முஹம்மடு ஹனீஃபும் ஃபரீதாவும் கையை பிடித்து கேட்டதெல்லாம் தாங்கள் பிழைப்பதற்காக ஒரு வேலை வேண்டும்!, அல்லாஹ் உங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் உதவி செய்வான் என் குழந்தைகளுடைய துஆ உங்களுக்கு எப்போதும் கிடைக்கும், தயவு செய்து எனக்கு ஏதாவது ஒரு வேலை பெற்றுத்தாருங்கள், எந்த விதமான வேலையையும் செய்யத்தயராக இருக்கிறேன் என்று ஹனீஃப் கூறினார்.
டூ சர்கில்ஸ் இணையதளத்தின் செய்தியாளரிடம் மேற்கூறியவாரு முஹம்மது ஹனீஃப் கேட்டுக்கொண்டார்.
அன்பார்ந்த வாசகர்களே! இந்த முஹம்மது ஹனீஃபை போன்று எத்தனையோ நபர்கள் பொய் வழக்கு போடப்பட்டு சிறைச்சாலையில் சிறமப்பட்டுவருகிறார்கள். இந்த இந்திய தேசத்திலே ஏனோ முஸ்லிம்களுக்கு நீதி மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றுச்சொன்னால் அதிகாரவர்கத்திலும், ஆளும்வர்கத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் வரவேண்டும். இந்திய தேசத்தில் அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் கிடைக்கவேண்டும் என்றுச்சொன்னால் அது இந்த முஸ்லிம் சமூகத்தினால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
திருமறை நம்மை நடுநிலையான சமுதாயம் என்று கூறுகிறது. ஏன் நாம் நடுநிலையான சமுதாயமாக இருக்கிறோம்? காரணம் நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றோம்!. தீமையை முழுமையாக தடுக்கவேண்டும். அரசியல் சாக்கடை அரசியலில் இறங்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு, அரசியலில் இறங்கி சமுதாயத்திற்காக ஏதாவது ஒரு நல்லதை செய்ய முன்வந்தவர்களை எதிர்த்து சமுதாயத்திற்கு துரோகம் இழைப்பவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். தானும் செய்யப்போவதில்லை பிறரையும் செய்யவிடுவதில்லை என்ற நிலையை மாற்றவேண்டும். அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே இத்தகைய அநீதியிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபட முடியும்.
ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வோம், சமுதாயத்தை பாதுகாப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்.
செய்தி: டூசர்கில்ஸ்
தமிழில்: முத்து
1 விமர்சனங்கள்:
let us join against this
கருத்துரையிடுக