புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சமுதாயத்தின் கண்ணியம் - பாப்புலர் ஃப்ரண்டின் பயணம்

9 ஜூலை, 2011

கடந்த 2005 ஆம் ஆண்டு கடயநல்லூரைச்சேர்ந்த மசூத் என்ற வாலிபர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் வெகு நாட்களாகியும் அவர் வீடு வந்து சேராத நிலையில் அவரது மனைவி ஹஸனம்மாள் புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்னர் தான் அவர் காவல் நிலையத்தில் வைத்தே சித்திரவதை செய்யப்பட்டு காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இவ்வழக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஒ கடந்த 6 வருடங்களாக நீதி கிடைக்க போராடி வருகின்றது.

இவ்வழக்கில் தற்போது நீதி சிறிது கதவை திறந்துள்ளது. ஆம்! என்.சி.ஹெச்.ஆர்.ஓ வின் முயற்ச்சியால் மசூதின் மனைவி ஹஸனம்மாளுக்கு ரூபாய் 7.85 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு காவல்துறை எந்த அப்பாவி முஸ்லிமை வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாம கைது செய்யலாம், பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைக்கலாம் என்ற நிலைதான் இருந்து வந்தது. அவ்வாறு பொய் வழக்கு போட்டு குற்றவாளிகளாக ஆக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்கோ, அவர்களை மீட்பதற்கோ எவறும் முன்வந்ததில்லை. ஏதாவது ஒரு அரசியல் வாதியின் கருணையின் மூலமாகவே அவ்வாறு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை விடுதலை செய்ய முடிந்தது.

ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் இத்தைகைய கொடுமைகளுக்கு எதிராக போராடத்தொடங்கிய நாள் முதற்கொண்டு பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக சட்டப்படி கடுமையாக போராடி வருகிறது. அவ்வாறு தான் பாப்புலர் ஃப்ரண்ட் (அன்றைக்கு மனித நீதி பாசறை) கடயநல்லூர் மசூதின் கொலை வழக்கிலும் போராடி வருகின்றது. தற்போது அல்லாஹ்வின் கிருபையால் இந்த நிலை தமிழகத்தில் மாறி வருகின்றது என்பதை நாம் கண் கூடாக பார்க்கலாம்.

எந்த அரசியல்வாதிகளையு நாம் நாடத் தேவையில்லை. எந்த அப்பாவி முஸ்லிம் மீதும் பொய் வழக்கு போடப்பட்டால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதற்காக எல்லா ரீதியிலும் போராட்டத்தை மேற்கொள்ளும். இன்ஷா அல்லாஹ்! தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தில் மட்டும் 130ற்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து வருகிறது.

அன்பார்ந்த வாசகர்கர்களே! சமூதாயத்தின் "இஜ்ஜத்" கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுதியாக செயல்பட்டு வருகிறது. எண்ணற்ற வழக்குகள் இன்று நிலுவையில் உள்ளது. அவற்றை ஏற்று நடத்த பொருளாதாரம் அதிகம் தேவை படுகிறது. இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமழான் மாதத்தில் அல்லாஹ்வினுடைய பாதையில் தாராளமாக வழங்குங்கள். மேலும் நம்முடைய பணி இன்னும் வீரியத்துடன் செயல்பட எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்க வேண்டுகிறோம்.!

இப்படிக்கு,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


 கடயநல்லூர் மசூதின் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பத்திரிக்கைகளில் வந்தது. அவை உங்கள் பார்வைக்காக.


0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010