புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்க! தமிழ அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

9 செப்டம்பர், 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள மாநில தலைமையகத்தில் செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தி துவங்கி வைத்தார். மாநில செயலாளர்கள் ஷேக் முஹம்மது அன்சாரி மற்றும் ஆரிஃப் ஃபைசல் உட்பட மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழக சிறைகளில் வாடும் 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு பொதுமண்ணிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றனர். கடந்த கால அரசு அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கழித்த ஆயுள் சிறைவாசிகள் 1405 பேரை விடுதலை செய்தது. அதில் ஒரு முஸ்லிம் ஆயுள் சிறைவாசி கூட விடுதலை செய்யப்படாமல் பாரபட்சமாக நடந்துள்ளது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்து, அவர்களது குடும்பத்தின் ஏக்கத்தை போக்கி, எதிர்பார்பை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  • தூத்துக்குடி மாவட்ட காயல்பட்டணத்தில்  இயங்கி வரும் பெண்கள் மதரஸாவிற்குள் அத்து மீறி நுழைந்து, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, அங்கு படிக்கும் ஆயிஷா சித்திகா என்ற மாணவியை இழுத்துச் சென்றுள்ள காவல் ஆய்வாளர் மற்றும் அவருடன் வந்த காவலர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதைப் போன்று மத துவேஷத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  • தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலைக் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவு வருகின்ற செப்டம்பர் 13,14ந் தேதிகளில் நடைபெறும் மாநில செயற்குழுவில் தீர்மானிக்கப்படும். மேலும், உள்ளாட்சி வார்டுகள் குறித்து மறுசீரமைப்பு பணி நடந்துள்ளது. அவற்றில் முஸ்லிம்கள் தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்பு இருக்க கூடிய, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு சேவையாற்றும் வாய்புகளை முஸ்ளிம்கள் இழந்துள்ளனர். மறுசீரமைப்பு பணி 2001ம் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் நடந்துள்ளது. ஆகவே இந்த மறுசீரமைப்பு பணியை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெற்று முஸ்ளிம்களுடைய உரிமையை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  • அமைதிப்பூங்காவான தமிழகத்தில், மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற போர்வையில் சங்கபரிவார அமைப்பை சேர்ந்த சில தேச விரோதிகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் மற்றும்  மஸ்ஜிதுகள் முன்பாக தகாத வார்த்தைகள், கோஷங்கள் மற்றும் கல்லெறிதல் போன்ற அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு அமைதியை குலைத்துள்ளனர். காவல்துறை அனுமதி மறுத்த இடங்களிலும் அத்துமீறி கலகம் செய்துள்ளனர். இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  • செப்டம்பெர், அக்டோபர் ஆகிய மாதங்களில் "இயக்கத்தை அறிவோம்" என்ற தலைப்பில் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை  நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நோட்டீஸ் பிரச்சாரம், கருத்தரங்கம் உட்பட பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு மாநில பொதுச்செயலாள காலித் முஹம்மது அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010