புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

உத்திர பிரதேசத்தில் காவல்துறையினர் வீடு புகுந்து அட்டூழியம்

26 ஜூலை, 2011

உத்திர பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் ராம்பூர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ஹாஜி முஹம்மது அஃப்சல், அக்கிராமத்தில் மதிப்புமிக்க தொழில் அதிபராகவும், சமூக சேவை செய்யக்கூடியவராகவும் இருந்து வருகிறார். சென்ற 24 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று முஹம்மது அஃப்சலின் வீட்டிற்கு காவல்துறையின் சீறுடை இல்லாமல் சென்று அவர்களது குடும்பத்தாரை கடுமையாக தாக்கியுள்ளது. அங்குள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்வை சிங் மற்றும் 3 கான்ஸ்டபிள்களுடன் முஹம்மது அஃப்சல் இல்லாத சமயத்தில் அவரின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பெண்களை தறைகுறைவாக பேசியதுடன் முஹம்மது அப்சலின் மகன்களையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.


கைது வாரண்ட் உட்பட எந்த ஒரு ஆணையும் இல்லாமல் அத்துமீறி வீட்டினுள் நுழைந்து குடும்பப் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு முஹம்மது அஃப்சலின் ஒரு மகனை சுட்டுக்கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். " நாங்கள் தான் இந்த நிலத்தின் சொந்தக்காரர்கள், உங்களை அழித்துவிடுவோம், உங்களை வெகு சீக்கிரம் இங்கிருந்து துரத்தி அடிப்போம், நீங்கள் பாகிஸ்தானிற்குச்சென்று வாழ்ந்து கொள்ளலாம் என்று கத்தியுள்ளனர். வீட்டிலுள்ள தையல் இயந்திரம் உட்பட அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். முஹம்மது அஃப்சலின் மகன் அபூஜர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை அந்த இன்ஸ்பெக்டர் மற்றும் 3 கான்ஸ்டபில் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அபூதர் மனித உரிமை ஆணையம் மற்றும் முதலமைச்சருக்கும் நியாயம் வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உத்திரபிரதேசத்தில் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிரான அராஜகப்போக்கை கையாண்டு வருகின்றனர். அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதும், அவர்களது வீட்டிற்குச்சென்று பெண்களை மிரட்டுவது போன்ற கயமத்தனமான வேலைகலை காவல்துறையினர் அரங்கேற்றி வருகிறார்கள்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சங்கப்பரிவார தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு சதிகள் அனைத்தும் அம்பலப்படுத்தப்பட்டது. இதனை இன்னும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நாடு முழுவது (சேவ் இந்தியா) "இந்தியாவை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. உத்திர பிரதேசத்தில் சுவரொட்டியை ஒட்டியதற்காக காவல்துறையினரால பொய் வழக்கு போடப்பட்டும் சித்திரவதைக்கும் சில முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களில் முஹம்மது அஃப்சலும் ஒருவராவார். உத்திர பிரதேச மாநிலத்தில் இவ்வாறு காவல்துறையினர் முஸ்லிம் விரோத போக்கில் செயல்படுவது மாயாவதி அரசாங்கம் சிறிது சிறிதாக காவிமயமாகி வருவதையே குறிக்கிறது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010