பாட்னா: கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு மத்தியில் பாகுபாடு பார்ப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கல்வி நிலையங்கள் என்றாலே எல்லா மாண மாணவிகளையும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும், அவர்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்பதற்காகவே சீறுடைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் என்றால் சொல்லத்தேவையே இல்லை என்னுமளவிற்கு கல்வி நிலையங்கள் பாகுபாடான நிலையை மேற்கொள்கிறது.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்த இரு முஸ்லிம் மாணவர்கள் தாடி வைத்திருந்தார்கள் என்றே ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு கல்லூரியில் இடம் கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது.. இரு மாணவர்களுக்கும் எல்லா விதமான தகுதிகள் இருந்தும் இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் முஹம்மது தானிஷ் மற்றும் முஹம்மது ஷாகிப். தனது பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்ற இவர்கள் பி.டெக் படிப்பதற்காக அங்குள்ள பிரபல கல்லூரியான கியான் விஹான் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் அன்டு டெக்னாலஜி என்ற கல்லூரியில் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் இருவருடைய விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேர்முக தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர். அங்கே சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அங்கே கல்லூரியின் சேர்க்கைக்கு பொறுப்பாளராக இருந்த எஸ்.கே அரோரா அவர்கள் இருவரையும் நோக்கி உங்களுக்கு இந்த கல்லுரியில் இடம் வேண்டுமென்றால் தாடியை மழித்து விட்டு வருமாறு கூறியுள்ளார்.
முஹம்மது தானிஷ் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, " நாங்கள் எங்களுடைய சான்றிதழ்களை எல்லாம் கொடுத்தோம், எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டு வேண்டுமென்றே அரோரா எங்களை நெடு நேரம் காக்க வைத்தார். பின்பு இறுதியாக எங்களை அழைத்து தாடியை எடுத்தால் தான் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றும், தாடி வைப்பது எங்கள் நிர்வாகத்தின் உடை குறியீட்டிற்கு எதிரானது என்று கூறினார். இஸ்லாத்தில் தாடியின் முக்கியத்துவத்தையும், மேலும் இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் வழங்கும் மத சுதந்திரத்தை பற்றி எவ்வளவோ எடுத்துக்கூறியும், எதையும் அவர் காது கொடுத்து கேட்பதாக இல்லை. நாங்கள் தாடியை மழித்துவிட்டு வரவேண்டும் என்பதையே சொல்லிக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த சில முஸ்லிம்களும் இதில் தலையிட்டு அரோராவிடம் கேட்டதற்கு, இதில் நிர்வாகத்தின் தலைவர் மட்டுமே தலையிட்டு முடிவு எடுக்கமுடியும் ஏனென்றால் இது நிர்வாகத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றியது என்று கூறினார். இறுதியில் எங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை போயிவிட்டது. எனவே மிகுந்த கவலையுடன் வீடு திரும்பினோம் என்று முஹம்மது தானிஷ் கூறினார்.
முஸ்லிம் மாணவர் அமைப்பு தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவருக்கு கடிதம் மூலம் இதை தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் தீவிர கவனத்திற்கும் இந்த தகவல் கொண்டு செல்லப்படும். சமீப காலமாக இத்தையை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இத்தகைய கல்லூரி நிர்வாகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், இல்லையேல் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என முஸ்லிம் மாணவர் அமைப்பு தெரிவிதுள்ளது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக