புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

ஒற்றைச்சார்புடைய விசாரணைகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையும் நிறுத்த வேண்டும்!

26 ஜூலை, 2011



Stop biased investigations and hate campaignsபுது டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர்களின் இரண்டு நாள் கூட்டம் புது டெல்லியில் கடந்த 25-07-2011 (திங்கட்கிழமை) அன்று நடைபெற்றது. சமீபத்தில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணையை புலனாய்வு அதிகாரிகள் எல்லா கோணத்திலும் விசாரிக்க வேண்டும். குறிப்பாக இந்துத்துவா தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தி ஈடுபட்டிருக்கலாம் காரணம் சமீபத்தில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளும் இவர்களாலேயே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பு கொண்டு எங்கு குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டாலும் அதில் முதலில் சந்தேகிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். மேலும் பல அப்பாவி இளைஞர்கள் கைதும் செய்யப்படுகிறார்கள். பின்னர் நடந்த குண்டுவெடிப்பிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிந்தவுடன் அவர்களை விடுதலை செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

அதே போன்று பத்திரிக்கைகளும் சரி மீடியாக்களும் சரி காவல்துறையினர் கொடுக்கும் தவறான செய்திகளை பரப்பி விடுகின்றனர். இதன் மூலம் அவர்களும் முஸ்லிம் விரோத போக்கை கையாண்டு வருகின்றன. சில பத்திரிக்கைகள் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்காக சட்டபூர்வமான வழிகளை பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொள்ளும் என்று தீர்மானிக்கப்பட்டது.


அதே போன்ற் கர்நாடகா மாநிலத்தில் ஹுன்சூரில் நடந்த கொலையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு தொடர்புபடுத்தியதற்காக மாநில பா.ஜ.க அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பா.ஜ.க அரசு தான் செய்த மோசடிகளையும், ஊழல்களையும் மறைப்பதற்காக இத்தகைய பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. மக்களின் மனங்களில் பா.ஜ.க அரசு செய்த ஊழல் தகிடுதத்தங்கள் அனைத்து ஆழமாக பதிந்து விட்டது. இத்தகைய பொய் பிரச்சாரங்கள் மூலமாக பா.ஜ.கவினால் ஒரு போதும் மக்களை திசைதிருப்ப முடியாது. மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் மற்ற சமூக இயக்கங்களுடன் கைகோர்த்து சங்கப்பரிவார பாசிஸ்டுகளின் ஊழல் விவகாரத்தை மக்களிடம் வீரியத்துடன் எடுத்துச்செல்லும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 
Stop biased investigations and hate campaigns

இக்கூட்டத்திற்கு அனைத்து இந்திய கிருஸ்தவ கவுன்சிலின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜான் தாயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். வன்முறை சம்பவங்களின் போது அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புகள் பற்றியும், அத்தகைய நேரங்களில் அவர்களது செயல்பாடுகளைப் பற்றியும் தெளிவாக விளக்கினார். நேரடி கலந்தலாய்வு முறையில் இக்கூட்டம்  நடைபெற்றது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம் அப்துர் ரஹ்மான் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப், பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்திருந்த மாநிலத் தலைவர்களான, அஷ்ரஃப் மெளலவி, பி.அப்துல் ஹமீது, ஏ.எஸ். இஸ்மாயில், இலியாஸ் முஹம்மது தும்பே, முஹம்மது ரியாஸ், பாஷா முஹம்மது, ஆரிஃப் முஹம்மது, மன்சூர் பாஷா, முஹம்மது ஷாஃபி, காலித் மன்சூர், முஹம்மது ஷஹாபுதீன், முஹம்மது அர்ஷத், முஹம்மது ஆரிஃப் மற்றும் கலீமுல்லாஹ் சித்தீகி ஆகியோர் கலந்து கொண்டனர்.


0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010