புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தகவல்கள்

4 ஆகஸ்ட், 2011

1: 18 வருடங்களில் 18 மாநிலங்களில் கால்பதித்துள்ளது.

2: தஃவா: தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 404 கிராமங்களுக்கு சுற்றுப்பணங்கள் மேற்கொண்டு 9,540 நபர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைத்துள்ளது.


பாப்புலர் ஃப்ரண்டின் கீழ் இயங்கி வருகிறது "தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் (TNDFT)" என்ற அறக்கட்டளை.



அதன் இஸ்லாமிய அழைப்புப் பணிகள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 1993ம் ஆண்டு முதல் முறைப்படுத்தப்பட்டு, இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்நிறுவனத்தின் கீழ் இரு பெரும் கல்விக்கூடங்கள்


இயங்கி வருகின்றன. இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ளும் வண்ணம் அறிவகம் என்ற கலாசாலை தேனி, முத்துதேவன்பட்டியில் அமைந்துள்ளது. பெண்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ளும் கலாசாலை நெல்லை ஏர்வாடியில் அமைந்துள்ளது.


அந்த நிறுவனங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இஸ்லாத்தின்அடிப்படை கடமைகளையும் ஒழுக்க மாண்புகளையும் கற்றுத் தருகின்றன. இங்குபயிலும் மாணவ, மாணவியருக்கு உணவு, உடை, மருத்துவம், குழந்தைகளின்பராமரிப்புச் செலவு, ஆண்களுக்கு கத்னா போன்றதை இலவசமாக இந்தஅறக்கட்டளையே செய்து வருகின்றது.


இதுவரை இஸ்லாத்தை மனமுவந்து ஏற்ற 2672 ஆண்கள் இந்த அறிவகத்தில் இஸ்லாத்தைக் கற்றுச் சென்றுள்ளனர். அதேபோல் 980 பெண்கள் அறிவகத்தில் இஸ்லாத்தைக் கற்றுச் சென்றுள்ளனர்.

இதுவரையிலும் 5842 கிராமங்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.


3: தமிழகத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற 6 கிராமங்களில் மஸ்ஜிதுகளை கட்டி இமாம்களை நியமித்து பராமாரித்து வருகிறது


4: சமூக சேவைகள்:

இரத்ததான முகாம்கள், கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்கள், பித்ரா விநியோம் ஆகியவை அனைத்து மாநிலங்களிலும் செய்யப்படுகிறது. அஸ்ஸாம், பீகார் போன்ற மாநிலங்களில் பேரிடர்களாலும், கொடும் கலவரங்களாலும் பாதிக்கப்பட்டு மக்களுக்காக 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதுவரை 57 வீடுகள் வழங்கப்பட்டு விட்டது, மீதக்கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கம், உ.பி. யில் கொடும் வட்டியிலிருந்து முஸ்லிம்களை மீட்டு சைக்கிள் ரிக்-ஷா வாங்கித்தரப்பட்டுள்ளது.

5: பிரச்சாரங்கள், போராட்டங்கள்:

நீதி தேடும் பாபரி மஸ்ஜித் எனும் முழக்கத்தில் அனைத்து மாநிலங்களிலும் நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பை எதிர்து விழிப்புணா்வு பிரச்சாரங்கள் 2 மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது

8 வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகைளை விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

மார்ச் 26, கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்தனர்.

4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய படவேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றவேண்டும்.

இது சம்மந்தமாக கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

மதுரை RSS அலுவலகத்தில் மாட்டுதலை வீசியதாக கூறப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி சுற்று வட்டார ஜமாத்களை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை செல்லூர் கொலை வழக்கிற்கெதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

திண்டுக்கல் பாதுகாப்பு ஒத்திகையில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 2006 ஆண்டு ஜீலை 22 அன்று கோவையில் வெடிகுண்டு பீதியை கிளப்பி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்கு புனைந்து, மனித நீதிப்பாசறையின் மீது வெடிகுண்டு பழிசுமத்தினார் உளவுத்துறை அதிகாரி ஏ.சி.ரத்தினசபாபதி. இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி (சிறப்பு புலனாய்வுகுழு) இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கோவை ஜே.எம்.௭ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பித்தது.

கோவை உளத்துறை ஏ.சி. ரத்தினசபாதிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம் தமிழகம் முழுவது நடத்தப்பட்டது.

ஆபாச எதிர்ப்பு பிரச்சாரங்கள்

அரசு வேலை மறுக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக, சென்னை வில்லிவாக்கம் சம்பவம், கடையநல்லூர் மசூது கொலை வழக்கு, போன்ற சட்ட ரீதியான போரட்டங்கள் நடத்தப்பட்டது.

குண்டு வெடிப்பில் RSS-ன் பங்கை தோலுரிக்கும் முகமாக SAVE INDIA DAY முழக்கத்துடன் தேசம் முழுதும் தொடர்ச்சியாக 2 மாதகால விழிப்புணர்வு பிரச்சாரம், கருத்தரங்குகள், இன்னும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


7: கல்வி: ரூ.25 லட்ச கடனுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

IAS, IPS பயிற்சி வகுப்புகள், Carrier Guidence புத்தகம் இலவசமாக வழங்குதல்,
முழு கல்விச்செலவும் ஏற்றல் போன்ற சேவைகள் செய்யப்பட்டது.

வடமேற்கு மாநிலங்களில் 1 ஆசிரியரைக் கொண்டு இயங்கும் அடிப்படை கல்விக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டது.

ஒழுக்கப்பயிற்சி, இஸ்லாத்தை அறிவோம், ஆளுமை பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, பேச்சாளர் பயிற்சி, குர்ஆன் ஓதுதல், சட்ட விழிப்புணர்வு பயிற்சி, பத்திரிகை துறை பயிற்சி போன்ற பல்வேறு வகையான பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி "பள்ளி செல்வோம்" பிரச்சாரம் நடைபெற்றது.


8: முஸ்லிம்களின் சுதந்திர பங்களிப்பை பரைசாற்றும் விதமாகவும், தன்னைம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் சுதந்திர தின அணிவகுப்புகள் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.


இது போன்ற ஏராளமான சமூகப்பணிகளை அல்லாஹ்வின் உதவி கொண்டு வருடம் முழுதும் ஓய்வின்றி Popular Front Of India செயல்படுத்தி வருகின்றது.   அல்ஹம்துலில்லாஹ்!

இத்தகைய சமூகப்பணிகளுக்கு உங்களுடைய ஜகாத்தினையும், நன்கொடைகளையும் தாராளமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வல்ல இறைவன் உங்களுக்கு கிருபை செய்வானாக!

எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.  (92:5- 7)

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010