புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கோட்சேவின் வாரிசுகள் — இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதம்

30 செப்டம்பர், 2011



Original_godses-children-hindutva-terror

மேல் கூறப்பட்ட தலைப்பில்  இந்துத்துவாவின் தீவிரவாதத்தை வெளிக்கொண்டு வரும் இந்த புத்தகத்தை மில்லிகெஜட் நிர்வாக வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் சுபாஷ் கதாதி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கபடுவது தீவிரவாதம் பற்றியதாகவே இருக்கிறது. இந்துத்துவ தீவிரவாதம் கிட்டத்தட்ட 12 தீவிரவாத அமைப்புகளை இந்தியாவில் ஏற்படுத்தி அவைகள் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். 400 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் மஹாராஷிரா தீவிரவாத எதிர்ப்புப்படை அதிகாரி ஹேம்ந்த் கர்கரேவின் கொலை சம்பவம் பற்றிய விரிவான செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இன்று இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதலில் அதிக அளவில் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே, தீவிரவாதிகள் என கைது செய்யப்படுவதம் முஸ்லிம்களே! இப்பேற்பட்ட தாக்குதல்களில் முஸ்லிம்கள் எவ்வாறு திட்டமிட்டு சிக்கவைக்கப்படுகிறார்கள் என்பதையு தெளிவாக கூறுகிறது.

இந்துத்துவாவின் தீவிரவாதம் தேசப்பிதா மஹாத்மா காந்தி கொலை முதல் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வரை விபரமாக விளக்கப்பட்டுள்ளது.  மேலும் "ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிரவாதம் அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் டெல்லி பல்கழைகழகத்தின் பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

அந்த புத்தகத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன:

1. முன்னுரை : தீவிரவாத சேவகர்கள்
2. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி
3. தீவிரவாதத்தின் மாய தோற்றம்
4. நியாயமான வன்முறையும், பயங்கரவாதமும்
5. இந்துவையும் இந்துத்துவாவையும் ஒன்றாக கலக்க முயற்ச்சிக்கும் மோகன் பகவத்
6. வெடிகுண்டுகளின் தொழிற்சாலை
7. சுனில் ஜோஷியின் கொலையை மறைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
8. அஜ்மீர் குண்டுவெடிப்பு
9. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு
10. தென்காசி தாக்குதல்

போன்ற பல தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

உள்நாடு: Rs 360 (தபால் செலவுடன்)  இந்தியாவில் வசிப்பவர்கள் இந்த புத்தகத்த வாங்க

வெளிநாடுUS $15 சராசரி.  (ஏர்மெயில் செலவு உட்பட‌)   வாங்க இங்கே கிளிக் செய்யவும்




0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010