சென்னை: சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) தொடங்கபட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய தேசிய அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சட்டமன்றத்தேர்தலில் தனித்து நின்று கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறது. தற்போடு வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் வேட்புனு தாக்கல் செய்துள்ளனர்.
எஸ்.டி.பி.ஐயினர் ஆரம்பம் முதலே சிறுபான்மை மக்களான முஸ்லிம்களையும் தலித்களையும் ஒன்றினைத்து அரசியல் சக்தி அடையவேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டுவருகிறது. இன்று பலரின் புருவம் உயரும் வகையில் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தலித் கட்சிகள் மற்றும் கிருத்தவ அமைப்புகள் என 15ற்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒன்றுதிரட்டி உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை நடத்தியது.
அந்தக்கூட்டத்தில் இறுதி முடிவாக சென்னை மேயருக்கான வேட்பாளராக எஸ்.டி.பி.ஐயின் வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் இஸ்மாயில், சுன்னத் ஜமாத ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் மேலை நாசர் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஜமாத்தே உலமா ஹிந்த் ஆகிய அமைப்புகளும் எஸ்.டி.பி.ஐற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். சில கிருத்தவ அமைப்புகளும் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

மேயர் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்றைய தினம் அமீர் ஹம்ஜா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான மூன்றாவது அணியை எஸ்.டி.பி.ஐ உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் இந்தக்கூட்டணியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக