முஸ்லிம்கள் அதிகார பிரதிநிதித்துவத்திற்கு வராத வகையில் முறைகேடாக கோவையில் வார்டு சீரமைப்பு செய்த அதிகாரிகளை கண்டித்தும், அதை மறு பரிசீலனை செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் 20.09.11 அன்று மாலை 4.30 மணிக்கு கரும்புக்கடை, ஆத்துப்பாலத்தில் வைத்து நடைபெற்றது.
இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் மாவட்டச் செயலாளர் எ.முஸ்தபா, பகுதித் தலைவர் முஹம்மது அலி மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
நன்றி: கோவை பாப்புலர்ஃப்ரண்ட்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக