ஊழலுக்கு எதிராக ர(த்)த யாத்திரையை தொடங்க இருக்கும் ஊழலுக்கு பெயர் போன அரசியல் கட்சியான பா.ஜ.க வின் மூத்த தலைவர் அத்வானியை வரவேற்க காத்திருப்பதாக பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஊழல் என்றாலே அது அரசியல்வாதிகள் தான், சமூக நல்லிணக்கத்தை சீர்குழைப்பதும் அரசியல்வாதிகள் தான். ஆனால் இன்று நமது நாட்டில் ஊழலை ஒழிக்கவேண்டும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவேண்டும் என்று அதே அரசியல்வாதிகள் உண்ணா விரதம் இருப்பதும், யாத்திரை நடத்துவதும் வேடிக்கையாக இருக்கிறது.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒரு இனப்படுகொலைக்கு தலைமை தாங்கி சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுத்த அம்மாநில முதலைமைச்சர் மக்களை முட்டாளாக்கும் விதமாக உண்ணா விரதம் இருந்தார். அதே போன்ரு பா.ஜ.கவின் மூத்த தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை தயாராகி வருகிறார்.
இதில் வேடிக்கை என்னவெனில் கடந்த காலங்களில் பா.ஜ.கவின் தலைவர்கள் பலர் ஊழலில் சிக்கியதும், தனது பதவிகளை பறிகொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது மக்களிடம் தங்களுக்கு சரிந்துபோன செல்வாக்கை தூக்கி நிறுத்தவும், அதே மக்களை முட்டாளாக்கவும் அத்வானி ரத யாத்திரை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
ரத யாத்திரைக்கு பெயர் போன அத்வானியின் கட்சியினர் ஊழல் செய்துள்ளனரே! அதற்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்.
தற்போது பீஹாரில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அம்மாநில முதலைமைச்சர் நிதிஷ்குமார், அத்வானியின் ரதயாத்திரையை தாம் கொடி அசைத்து வரவேற்க இருப்பதாக கூறியுள்ளார். பா.ஜ.கவுடன் கூட்டணி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளின் செயல்பாடுகள் பீஹாரி மாநிலத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பீஹார் குஜராத்தாக மாறுவதற்கு முன்பு அனைவரும் ஒன்றுபடுக என்று முன்னால் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டிருந்தார்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத யாத்திரை நடத்தி பல இந்துக்களை உசுப்பிவிட்டு பாபரி மஸ்ஜிதை இடிக்கத்தூண்டியதும், தன்னுடைய ரதயாத்திரையின் மூலமாக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாயிருந்த அத்வானியின் ர(த்)த யாத்திரைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கும் நிதிஷ்குமாரின் முஸ்லிம் விரோத போக்கு மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
செய்தி: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக