சென்னை: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்த்தின் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ யின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நானூற்றுக்கும் மேற்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் உரையாற்றுகிறார் |
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பல இஸ்லாமிய இயக்கங்கள், கிறிஸ்தவ இயக்கங்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுடன் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 20 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் முதன்முறையாக சென்னை மாநகராட்சி மேயர் பதிவிக்கு போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் புதிய அனுபவத்தை பெற இருக்கின்றனர் என்று கூறலாம்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக போட்டியிடும் 21 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் அனைத்து செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை சரியாக 5.00 மணி அளவில் சென்னை கொத்தவால்சாவடியிலுள்ள மேமன் மஹாலில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்புரையாற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மற்றும் அப்துல் ஹமீது ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினரகா கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹம்து ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றும் பொழுது எஸ்.டி.பி.ஐ எடுக்கும் அரசியல் முடிவுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் உறுதுணையாக இருந்து செயல்படும் என்று கூறினார். இறுதியாக எஸ்.டி.பியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அண்ணாச்சி நன்றி உரை நிகழ்த்த நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் பங்குகொண்ட எஸ்.டி.பி.ஐயின் உறுப்பினர்கள் |
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் உரையாற்றுகிறார். |
4 பெண்கள் மற்றும் இரண்டு முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் கொண்டு மொத்தம் 21 வேட்பாளர்கள் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக