புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை கண்டித்து நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்

3 அக்டோபர், 2011

புதுடெல்லி: குஜராத் இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி தான் என்றும் அவர் தான் காவல்துறையினருக்கு கலவரத்தை தடுக்க வேண்டாம் என்று ஆணையிட்டதாக சஞ்சீவ் பட் என்கின்ற ஐ.பி.எஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது சமூக அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான மனித உரிமை அமைப்புகளும் இந்த கைது நடவடிக்கையை வன்மையா கண்டிப்பதோடு நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்புவிடுத்துள்ளனர். சமூக ஆர்வளர் ஷபானா ஹாஸ்மி அவர்கள் கூறும் போது "சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நரேந்திர மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார் என்ற ஒரே காரணத்திற்காக பொய்வழக்கு ஜோடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நரேந்திர மோடி அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம்" எனக் கூறினார்.



சஞ்சீவ் பட்
தீஸ்டா சேதல்வாத் என்ற சமூக ஆர்வளர் கூறும்போது குஜராத் கலவரத்தின் போது நரேந்திர மோடியின் பங்கை வெளிக்கொண்டு வரும் முகமாகவும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாக்குமூலம் அளித்த சஞ்சீவ் பட் மற்றும் அவரது குடும்பத்தாரை மோடி அரசாங்கம் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறது" எனக்கூறினார்.

அனைத்து இந்திய மதசார்பற்ற அமைப்பு மற்றும் சில சமூக இயக்கங்களின் அழைப்பின் பெயரில் இன்று அலஹாபாத், லக்னோ, வாரனாசி, பரபங்கி, ஜான்சி, போபால், இந்தூர், டெல்லி, மும்பை, அஹமதாபாத், புவனேஸ்வர், புனே, தெஹ்ராதூன், பெங்களூரு, பரோடா, ஜம்மு, ஸ்ரீநகர், சென்னை, திருவனந்தபுரம், ஹிஷார், ரோடக், கோண்டா மற்றும் ஃபைஜாபாத் ஆகிய நகரங்களில் குஜராத் அரசின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடைபெற இருக்கின்றது.


டெல்லியில் குஜராத் பவன் முன்பு மாலை 3:30 மணி அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சஞ்சீ பட்டை நிபந்தனை அற்ற முறையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட இருக்கிறது. இந்த கைது நடவடிக்கை பார்க்கும் பொழுது நரேந்திர மோடியின் சர்வதிகார தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை சஞ்சீவ் பட்டை அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது வீடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அவரது மனைவி குஜராத் காவல்துறை தலைமை அதிகாரி சித்தர்ஞ்சன் சிங் மற்றும் காவல்துறை ஆணையர் சுதிர் சின்ஹா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது கணவர் சஞ்சீவ் பட்டின் உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க தலைவர் ஹரன் பாண்டிய கொலை வழக்கில் நரேந்திர மோடி மற்றும் முன்னால் அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் மனு கொடுத்ததை தொடர்ந்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு முன்னரும் குஜராத் கலவரத்தின் போது காவல்துறையினரை அழைத்து கலவரம் செய்யும் இந்துக்களை தடுக்க வேண்டாம் என்றும், இந்துக்கள் தங்களது கோபத்தை தீர்த்துக்கொள்வதை விட்டு தடுக்கக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்த தகவலையும் சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறார்.


குஜராத் கலவரத்திற்கு ந்ரேந்திர மோடிதான் காரணம் என்ற உண்மை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டப்பட்ட பின்னரும் இது வரை அவரை கைது செய்யவோம், தண்டிக்கவோ எந்த அரசாங்கத்திற்கும், சட்டத்திற்கு திராணியில்லை என்பதே உண்மை.

செய்தி:    TWO CIRCLES
தமிழில் : முத்து

1 விமர்சனங்கள்:

Sulaiman sait சொன்னது…

Indha vishayatthai makkalodu anaivarum ondru serndhu yedhirkka vendum.
Odukkappatta makkalin iyakkangal, matrum madhasaarbattra iyakkangal anaittahayum sertthukkondu poraadavendum.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010