புதுடெல்லியில் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறக்கப்பட்டபோது தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் ஆற்றிய அறிமுக உரையின் சுருக்கம்:
தேசிய தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தின் வலிமைக்காக போராடி வரும் இயக்கமே தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அனைத்து இந்திய மக்களுக்கும் சம உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னின்று செயல்படும். பிற்போக்குத்தனம் கொண்ட, மனித இனத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அனைத்து தீய சக்திகளை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா களப்பணியாற்றும். பாப்புலர் ஃப்ரண்ட் தனது உறுப்பினர்களை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் எங்களது தேசிய அலுவலகத்தை பெங்களூரில் இருந்து இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு மாற்றியுள்ளோம்.
வரக்கூடிய நவம்பர் மாதத்தில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் மாபெரும் "சமூக நீதி மாநாட்டை" நடத்த இருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தென்இந்தியாவை தவிர்த்து தற்போது தான் பாப்புலர் ஃப்ரண்ட் முதன் முதலாக ஒரு மாபெரும் நிகழ்ச்சியை வட இந்தியாவில் நடத்த இருக்கின்றது. மக்களை திரட்டி எங்களது பலத்தை காண்பிக்கவேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் அல்ல மாறாக நாங்கள் இதற்கு முன் பெங்களூரில் 2007ல் நடத்திய வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாடாக இருந்தாலும் சரி, 2009ல் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடத்திய தேசிய அரசியல் மாநாடாக இருந்தாலும் சரி எப்படி பொதுமக்களுக்கு சேர்க்கவேண்டிய செய்தியினை கொண்டு சேர்த்தோமோ அதே போன்று இந்த சமூக நீதி மாநாட்டின் மூலமாகவும் மக்களை விழிப்புணர்வுபடுத்துவதற்கான செய்தியை அவர்களிடம் சேர்ப்போம். நமது நாட்டில் தற்போதுள்ள நிலமையின்படி நீதி என்பது பல நேரங்களில் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இது நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகும். எனவே தேசத்தை நீதியால் கட்டமைக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. எனவே தான் இதையே நமது கோஷமாக கொண்டு இம்மாநாட்டை நடத்த இருக்கின்றோம். இத்தகைய தருணத்தில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படுவது அவசியமான ஒன்றேயாகும்.
இந்திய சட்டப்படி சமூக நீதி என்பது அடிப்படை உரிமையாகும். ஆனால் நமது தேசம் இத்தகைய நிலையிலிருந்து மாறபட்டு நிற்கிறது. பொதுநல நிலையிலிருந்து முதலாளித்துவ நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. பிந்தங்கிய சமூக மக்களுக்கும், சிறுபான்மை மக்களும் ஒதுக்கப்பட்டுவருகின்றனர். அவ்வாறு நிதி மறுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது அவர்கள் அனைவரும் தேசத்திற்கே விரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் பொருளாதாரம், வெளியுறவுக்கொள்கை என்று வரும்பொழுது அவர்களுக்குள் எந்தவொரு வேற்றுமையும் இருப்பதில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்காக பண உதவி செய்யக்கூடிய பணக்கார முதலைகளுக்குத்தான் விசுவாசமாக நடந்து கொள்கின்றனர். எனவே தான் அந்த பணக்கார முதலைகளின் விருப்பத்தை வெகுசீக்கிரமே நிறைவேற்றி கொடுக்கின்றனர். இது ஒன்றும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த தேசத்தில் அதிக அளவில் கைவிடப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமுதாயம் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என்று கூறிவிட்டு ஆட்சியில் அமர்ந்த பின்பு முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளப்படாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் நிலையை அறிந்து கொள்ள அரசாங்கத்தினாலேயே ஏற்படுத்தப்பட்ட ராஜேந்திர சர்சார் அறிக்கையாகட்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையாகட்டும் இவைகளை பற்றிய எத்தனையோ விவாதங்கள் நடைபெற்ற பின்பும் அவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கங்கள் தயக்கம் காட்டி வருகிறது.
சிறுபான்மை சமூகத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கு சலுகைகள் அவர்களுக்குச் சென்று அடைவதில்லை. கல்வியிலும், அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் மற்ற சமூதாயத்தைக்காட்டிலும் பின் தங்கியிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீடு இன்று வரை மறுக்கப்பட்டு வருகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க மறுபுரமோ அரசியல்வாதிகளால் கோடிக்கணக்கில் ஊழல் செய்யப்பட்டு நாட்டின் வளம் அதிக அளவில் சுரண்டப்பட்டுவருகிறது. ஊழலுக்கு எதிராக நாம் போராடியே தீர வேண்டும். ஊழலை காட்டிலும் இந்திய தேசத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இனவாதமேயாகும். இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தோடு ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும். நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிர நாடகமும், அத்வானி நடத்திக்கொண்டிருக்கும் ரதயாத்திரை நாடகமும் சங்கப்பரிவாரங்களின் இனவெறியை மறைப்பதற்கான சூழ்ச்சியேயாகும்.
சமீபத்தில் நடந்த 4 குண்டுவெடிப்பு சம்பவங்களில் சங்கப்பரிவார கும்பல்கள் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது. அது போன்று மேலும் 12 குண்டுவெடிப்பு சம்பவங்களில் சங்கப்பருவாரர்களை தீவிரவாக விசாரணை செய்யப்படுகிறார்கள். நிகழ்வுகள் இவ்வாறிருந்தும் ஒவ்வொரு குண்டுவெடிப்பின் பொது முஸ்லிம் சமூதாயத்தையே இந்த காவல்துறையினரும் ஊடகங்களும் குற்றம்சாட்டிவருகிறது. ஒவ்வொருமுறை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும்போதும் ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்தை குற்றம்சுமத்தி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற அனைத்து தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.
சமூக நீதி மாநாடு இத்தகைய பிரச்சனைகளுக்கு விடையாக அமையும். மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு மாநாட்டின் முதல் நாளான நவம்பர் 26ஆம் தேதி அன்று "வலிமையை நோக்கி" என்ற தலைப்பிலும் " நீதிக்காக மக்களின் உரிமைகள்" என்ற தலைப்பிலும் கருத்தரங்கள் நடைபெறும். மாநாட்டின் இரண்டாம் நாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடக்கூடிய மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். இதற்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாடு வெற்றி பெறுவதற்காக மீடியாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு உரை தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் உரை நிகழ்த்தினார்.
இவ்வாறு உரை தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் உரை நிகழ்த்தினார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக