புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சமூக நீதி மாநாட்டிற்காக தயாராக தலை நகரம்

21 நவம்பர், 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக நீதி மாநாட்டை நடத்த இருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மாநாட்டிற்காக தற்போது குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில் சமூக நீதி மாநாட்டை வரவேற்பதற்காக தலைநகரம் தயாராகிவருகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை துவங்குவதற்காக தொண்டூழியர்கள் (வாலண்டியர்ஸ்) இந்தியாவின் பல நகரங்களிலிருந்தும் டெல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.



தலைநகரில் மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், வீடுவீடாகச் சென்று மக்களுக்கு தெரிவிப்பது, சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றின் மூலமாக பிரச்சாரங்கள் நகரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தினத்தில் டெல்லீல் பிரசித்திப்பெற்ற ஜும்மா மஸ்ஜிதில் வெளிநாட்டவர்கள் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மாநாட்டிற்கான பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


வாருங்கள் டெல்லியை நோக்கி!

இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் மாநாட்டை வரவேற்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் மாநாட்டிற்கான பிரச்சாரத்தின் போது "வாருங்கள் டெல்லியை நோக்கி!" என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை மக்கள் ஏற்றுக்கொண்டு தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகத்திலிருந்தும் டெல்லி புறப்பட தயாராகி வருகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்கப்போகிறோம் என்ற எண்ணத்தில் அல்லாது சமூக நீதியை அடைந்தே தீருவோம் என்ற லட்சிய வேட்கையோடு தங்களது சொந்த மண்ணிலிருந்து தலைநகரை நோக்கி வருவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

மாபெரும் மாநாடு

மாநாட்டு திடலான ராம்லீலா மைதானம் அருகே டீக்கடை நடத்திக்கொண்டிருப்பவரிடம் கேட்டதற்கு " कान्फॆरन्स् हर् थिन् हॊथॆ रॆह्थॆ हॆ, लॆकिन् छब्बीस्, स्थायीस् को येक् बदा कान्फॆरन्स् होने वाले." (ராம்லீலா மைதானத்தில் ஒவ்வொரு  நாளும் மாநாடு நடைபெற்று வருகிறது. ஆனால் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான மாநாடு நடைபெறப்போவதாக உணர்கிறேன்) எனக்கூறினார்.

மாநாட்டை காண்பதற்காக ஆர்வம், சமூக நீதியை அடைய வேண்டும் என்கிற வேட்கை அடித்தட்டு மக்களிடம் இருந்து அனைவருக்கும் போய் சென்றடைந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.


ஐ. முஹம்மது தன்வீர்
ஊடக தொடர்பு
மொபைல்: +91 85278 24518
மின்னஞ்சல்: sjcmediateam@gmail.com

1 விமர்சனங்கள்:

அதிரை மூன் சொன்னது…

சமூக நீதி மாநாடு வெற்றியடைய இறைவனை இறைஞ்சுவோம்.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010