சென்னை: தென்சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் சார்பாக கடந்த செவ்வாய்கிழமை அன்று மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்த பிறகு மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்தும், விலைவாசி உயர்வை உடனே திரும்பப்பெறக்கோரியும் எஸ்.டி.பி.ஐ சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தென்சென்னை மாவட்டம் சார்பாக கடந்த செவ்வாய்கிழமை அன்று சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் கண்டன உரை நிகழ்த்தினார். பொதுச்செயலாளர் முஹம்மது சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். தி.நகர் தொகுதி தலைவர் செய்யது இபுராஹிம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி தலைவர் அனீஸ் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைதாப்பேட்ட தொகுதி செயலாளர் அப்துல் மஜீத் நன்றியுரை நிகழ்த்தினார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக