நெல்லை மேற்கு: கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற பள்ளி செல்வோம் பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கடன் உதவியாக 24 லட்ச ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. இதற்காக நாடு முழுவதும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு தகுந்த சான்றிதழ்களை மாதிரியினை பெற்று கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போது அவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதில் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக ரூபாய் 1 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் வைத்து கடந்த 8ஆம் தேதி அன்று உதவித்தொகையினை வழங்கினார். உதவித்தொகையினை பெறவதற்காக தேர்ந்தெடுத்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் வந்திருந்தனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக